வணக்கம் நம் நாடு இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாடு இந்தியாவால் வல்லரசாக முடியவில்லை இதற்கு முக்கிய காரணமாக அனைவராலும் கூறப்படுவது இந்தியாவின் கல்வி முறை எனலாம். ஏன் இந்திய கல்விமுறை மோசமாக உள்ளது எங்கு தவறு நடைபெறுகிறது இதை எப்படி மேம்படுத்தலாம் என இதுபற்றிய என்னுடைய கருத்துகளை இந்த பதிவில் கூறுகிறேன்.
இந்திய கல்விமுறை
ஒரு தனிநபரின் வளர்ச்சியிலும், ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியிலும் கல்விக்கு முக்கிய பங்கு உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தியக் கல்வி முறையின் உலகிற்கு பறைசாற்றும் வகையில் சில நல்ல உதாரணங்கள் இருந்தாலும், தற்போதைய சூழலில் நமது கல்விமுறை உலகமக்களிடமிருந்து சில அதிருப்திகளையும் பெற்று வருகிறது, கடந்த 20 வருடங்களாகவே கல்வித் துறையில் நாம் பின்தங்கி வருகிறோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மக்கள்தொகையில் குறிப்பிட்ட மக்கள் மிக உயர்ந்த கல்வியை மற்றும் சிறந்த ஊதியம் தரும் வேலை வாய்ப்புகளைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால் நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களாகவே உள்ளனர் இவர்களுக்கும் கல்வி போய் சேரும் வகையில் .கல்வியில் இந்திய அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்துகிறது மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமையாகிய கல்வி கற்பதற்கான ஒவ்வொரு நகர்வையும் அரசு சாத்தியமாக்குகிறது. இதன் விளைவாக, மக்களின் கல்வியறிவு விகிதம் உயர்கிறது , ஆனால் செயல்பாடுகளில் நிறைய தவறுகள் உள்ளன. நாம் சரியாக எங்கு தவறாக செல்கிறோம்? என்பதை நாம் அறிய மறுக்கிறோம். அதுதான் உண்மையான காரணமாக இருக்கும் அதை ஒன்றன்பின் ஒன்றாக கீழே காண்போம்.
திறமைக்கு முக்கியதுவம் இல்லை
நம் நாட்டில் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்துத்தான் அவர்களின் திறமையை அளவிடுகிறோம். ஒரு மாணவர் 90% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் அவர் “புத்திசாலி” என்றும் , அதே நேரத்தில் சராசரி மதிப்பெண்களைப் பெறுபவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் பலவீனமானவர்களாக கருதப்படுகிறார்கள். இதனால் அவர்கள் மனதளவில் சோர்ந்துவிடுகிறார்கள். பிரிட்டிஷாரால் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் வடிவம் பல தற்போதைக்கு தேவையற்றதாக இருந்தாலும் அவை இப்போதும் நடைமுறையில் உள்ளது, திறமையை கற்றுகொடுப்பதற்கு பதிலாக அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.இதனால் பெரும்பாலான மாணவர்கள் தான் என்ன படிக்கிறோம் என அறியாமலையே இருக்கிறார்கள்.
செய்முறை கல்வி இல்லை
90% கல்வியானது இங்கு தேர்வுமுறையாக இருப்பதால் மாணவர்கள் மத்தியில் இதன் மீது நாட்டம் குறைவு எனலாம் ஆனால் மாணவர்கள் மத்தியில் செய்முறை கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான படிப்புகளில் அதிக ஆர்வம் உள்ளதையும் நம்மால் காணமுடிகிறது. ஆக்கப்பூர்வமான கற்றல் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கு இங்கு இடமில்லை என்பதும் ஒரு காரணம்.
மாணவர்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தை மட்டுமே படிக்க வேண்டும் என்பதும் அவர்களின் கற்பனை சிந்தனைகளை இங்கு ஊக்குவிக்கப்படுவதில்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மாணவர்களை ஊக்கபடுத்துவதே இல்லை
இந்தியக் கல்வித் துறையில் ஆண்டு இறுதி முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனலாம் இது சமூகத்தில் ஒரு அந்தஸ்தாக கருதப்படுகிறது இதன் காரணமாக போதுமான மதிப்பெண்கள் பெறாதது மாணவர்களை தொடர்ச்சியான மனரீதியான கொடுமைப்படுத்துதல், அவமானம் மற்றும் தன்னம்பிக்கை இழப்பிற்கு உட்படுத்தலாம் இதன் காரணமாக கடந்த ஒரு சில காலமாக மாணவர்களின் தற்கொலைவிகிதம் அதிகரித்துள்ளது.
விளையாட்டு, கலை & கைவினை, போன்ற செயல்பாடுகள் இன்னும் சமூகம், பெற்றோர்கள் மற்றும் நிறுவனங்களால் உயர்வாகக் கருதப்படுவதில்லை. நமது சமூதாயத்தில் கல்விப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதே உண்மை.
ஆசிரியர்கள் தங்களுக்கு கொடுக்கபட்ட பாடத்திட்டத்தை முடிக்க விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட காலங்களையும் அடிக்கடி பயன்படுத்துவதைக் காணலாம். இங்கே மாணவர்களுக்கு கல்வி செயல்முறையின் அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.
உண்மையான கற்றல் என்பது ஒரு ஆக்கப்பூர்வமான செயல்முறையாகும், அதாவது ஒரு நபர் சிந்திக்கவும், எதிர்வினையாற்றவும், சிறப்பாக செயல்படவும், ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் முடிவுகளை மேற்கொள்வதற்கு ஒரு ஊன்றுகோளாக இருக்கவேண்டும். ஆனால் தற்போது இவை இரு்பதாக தோன்றவில்லை தற்போது இருக்கும் மொத்த கல்வி முறையும் மாற்றப்பட வேண்டும், மாணவர்கள் மதிப்பெண்களை மட்டும் நம்பி இருக்கூடாது என பள்ளி மற்றும் பெற்றோர்கள் நினைக்க வேண்டும்.
படைப்பாற்றலுக்கு ஊக்கமில்லை
மாணவர்களின் படைப்பாற்றலுக்கு இங்கு முக்கியதுவம் வழங்கபடுவதே இல்லை அவர்களை மதிப்பெண்களுக்காகவே இங்கு தயார்படுத்துகிறார்கள் இதனால் பெரும்பாலான மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றும் அவர்களால் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடையமுடியவில்லை இதற்கு முக்கிய காரணம் மாணவர்களின் படைப்பாற்றலுக்கு முக்கயதுவம் தராததுதான் இதனால் அவர்களின் வாழ்க்கையில் அவர்களால் நல்ல நிலையை அடையமுடியவில்லை.
கற்பித்தலில் மாற்றம் வேண்டும்
பாடத்திட்டங்களில் மாற்றம் வேண்டும் என்று கூறினாலும் முக்கியமான மாற்றம் என்பது கற்பித்தலில் அதாவது மாணவர்களுக்கு பாடமெடுக்கும் ஆசிரியர்களிடம் தோன்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் பண்டைய கால ஆசிரியர்கள்போல் அல்லாமல் காலத்திற்கு ஏற்றார்போல் தங்களை அவர்கள் மாற்றிகொள்ளவேண்டும் ஆனால் நம் நாட்டில் இன்றும் சாக்பிஸ் குச்சியிலும் கரும்பலகையிலும்தான் பாடம் நடக்கிறது அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்களிடம் பெரும் பிரச்சனை அவர்கள் மாணவர்களிடம் ஒரு நல்ல உறவை மேம்படுத்தாமல் உள்ளார்கள். இது மாணவர்கள் மத்தியில் ஒரு சலிப்பை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் இண்டர்நெட் மயமாகும்பொழுது இன்னும் கரும்பலகையிலும் பேப்பர் பேனாக்களிலும் பாடம் நடத்துவது என்பது ஏற்புடையது
வேலைவாய்ப்பின்மைகான காரணம்
பெரும்பாலான மாணவர்களுக்கு கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது கேள்விகுளறியாக உள்ளது இதற்கான காரணம் தற்போது தொழில்நிறுவனங்கள் எதிர்பார்க்கூடிய திறன்கள் மாணவர்களிடம் இல்லை என்பதுதான் இதனை கல்லூரிகளும் மாணவர்களுக்கு வழங்குவதில்லை மாணவர்கள் படிக்கும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் 10 வருடங்கள்.
இப்படி பல்வேறு குளறுபடிகள் நமது கல்வியில் காணப்படுகிறது இவை எனக்கு தோன்றிய ஒரு சில கருத்துகள் மட்டுமே இதுபோல் உங்களுக்கு தோன்றிய கருத்துகளை கீழே பதிவிடுங்கள்.