நம் நாடு இந்தியா பற்றி நாமே அறியாத ஆச்சரியமூட்டும் விஷயங்கள் top 10 interesting facts about india in tamil

 இந்தியா பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் facts about india

unknown facts about india
வணக்கம் நண்பர்களே!  இன்றைய பதிவில்  பல்வேறு மதங்களையும் பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரங்களை  கொண்ட நாடு  அதுமட்டுமின்றி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான  நம் நாடு இந்தியா பற்றி நாமே  facts about india அறியாத சில ஆச்சரியமூட்டும் தகவல்களை பற்றி காண்போம்.
 

10. இந்தியாவின் முதல் ராக்கெட் 

india's first rocket launch
source:indiatimes
 
நம் நாட்டின் முதல் இராக்கெட் 1963-ஆம் ஆண்டு திருவணந்தபுரத்தில்  உள்ள ஒரு சர்சில் உருவாக்கபட்டது  இந்த இராக்கெட்டின் உதிரி பாகங்களை எடுத்து செல்வதற்கு சைக்கிளை உபயோகபடுத்தி நாசாவால் உருவாக்கபட்ட NIKE APACHE  என்ற இராக்கெட்டை விண்வெளியில் செலுத்தினர் கிட்டதட்ட வெறும் 40 ஆண்டுகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உலகின் 5-வது மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக  மாறியுள்ளது இது இந்தியாவின் அபாரமான வளர்ச்சியை நமக்கு எடுத்துரைக்கிறது.

9.இந்தியாவின் எலிக்கோவில்

rat temple india
நம் நாடு இந்தியாவில் உலகில் எங்கேயும் காணமுடியாத வித்தியாசமான கோவில் உள்ளது அந்த கோவில் எலிகளுக்காக கட்டப்பட்டுள்ளது. ஆம் இது ஒரு எலிக்கோவில் இது ராஜஸ்தானில் உள்ள  தேஷ்னோக் என்னும் பகுதியில் கர்னிமாத கோவில் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு மக்கள் எலிகளைதான் கடவுளாக வழிபடுகின்றர் எலிகள் சாப்பிட்டு வைத்த  பாலைதான் பிரசாதமாக மக்கள் குடிக்கின்றனர் .
 
 

8.இந்தியா ஒரு தீவா?

225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு  இந்தியா ஆஸ்திரேலிய மற்றும் ஆப்பிரிக்க கண்டம் அனைத்தும் ஒன்றாக காணப்பட்டது  இதைதான் பாஞ்சியா என அழைத்தனர் இந்த சூப்பர் கண்டம் பாஞ்சியா 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உடைய தொடங்கியது, இந்தியா  ஆசியாவின் வடக்கு பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கியது. 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு  இந்தியா ஆசிய கண்டத்திலிருந்து 6,400 கி.மீ தெற்கே இருந்தது, ஆனால் ஆண்டுக்கு 9 முதல் 16 செ.மீ வரை  ஆசியாவை  நோக்கி வேகமாக  நகர்ந்தது. இவ்வாறு இந்தியா ஒரு தீவாக இருந்து ஆசியாவின் மீது  மோதாயதால்தான் உலகின் மிகப்பெரிய சிகரமான இமயமலையின் எவரெஸ்டு உருவானது.
 

7.உலகின் மிகப்பெரிய குடும்பம் இந்தியாவில் உள்ளது

 
சியோனா குடும்பம் இந்த குடும்பம்தான் உலகின் மிகப்பெரிய குடும்பமாக இன்றுவரை உள்ளனர் , இதில் சியோனா என்பவர்தான் வீட்டின் தலைவர் இவருக்கு மொத்தம் 39 மனைவிகள் 94 குழந்தைகள் 14 மருமகள்கள் 33 பேரக்குழந்தைகள் 1 கொள்ளுபேரன் மொத்தமாக இவர் குடும்பத்தில் 181 பேர் உறுப்பினர்.இந்த குடும்பம் நம் நாடு இந்தியாவில் மிசோரம் மாநிலத்தில் பக்தாங் என்னும் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
 

6.கதவுகளே இல்லாத கிராமம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சனி சிக்னாபூர் என்னும் கிராமத்தில் உள்ள வீடுகளில் கதவுகளே கிடையாது இங்குள்ள அலுவலகங்களில் கூட கதவுகள் இருப்பதில்லை அதுபோல இந்த கிராமத்திலும் திருட்டுகள் என்பதே நடைபெறுவதே இல்லை இதற்கான காரணம் அந்த ஊரில் சனிபகவான் கோவில் உள்ளது. இங்கு குற்றம்  நடந்தால் சனிபகவான் தங்களை தண்டித்து விடுவார் என்று மக்கள் நம்புகின்றனர் இதனால்தான் இங்கு திருட்டுகளும் நடைபெறுவதில்லை .

5.இந்தியாவின் மொழிகள்

indian languages

இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன அதில் 22 மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன இதில் குறிப்பிடதகுந்த விஷயம் என்னவென்றால் நம் நாடு இந்தியாவிற்கு தேசிய மொழி என்பதே கிடையாது.  ஆம் இந்தியாவில் அங்கீகரிக்கபட்ட மொழிகள் மட்டுமே உள்ளது அவை  இந்தி மற்றும் ஆங்கிலம் ,அதுமட்டுமின்றி உலகில் இரண்டாவதாக அதிகம் ஆங்கிலம் பேசும் நாடாக இந்தியா உள்ளது.

 

4.இந்தியாவில் மாட்டுக்கு  ஆதார் கார்டு

ஆதார் கார்டு
 
இந்தியாவில் மேற்கு வங்கம் மாநிலத்தில் அம்மாநில அரசு மாடுகளுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கியுள்ளது இதற்கான  காரணம் மாடுகளை இறைச்சிக்காக விற்பது அதனால் இந்த சட்டம் இயற்றபட்டுள்ளது இங்கு மாடுகளை விற்றால் ஆதார் கார்டு கட்டாயம்.

3.பிளாஸ்டிக் சர்ஜரி பிறந்த இடம் இந்தியாதான்

 
 
பிளாஸ்டிக் சர்ஜரியை முதன்முதலில் கண்டுபிடித்த நாடு இந்தியாதான் பலநூறு ஆண்டுகளுக்கு முன் சஷ்ருதா சம்ஹிதா என்ற முனிவர் இந்த குறிப்புகளை அவருடைய  புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் .

2. உலகின் மிகப்பெரிய சினிமா துறை

cinema
 
 
உலகின் மிகப்பெரிய சினிமாதுறை அமெரிக்காவின் HOLLYWOOD என்று நீங்கள் நினைத்தால் அது கிடையாது HOLLYWOOD உலகின் பணக்கார சினிமாதுறை ஆகும்.ஆனால் உலகின் மிகப்பெரியா துறை இந்தியாவில் உள்ள BOLLYWOOD இங்கு வருடத்திற்கு 1000 மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன .HOLLYWOOD-ல் இதைவிட குறைவாகவே திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

1.இந்தியாவின் கண்டுபிடிப்புகள்

idea
 
 
இந்தியாவிலும் பல்வேறு விதமான கண்டுபிடுப்புகள் நிகழ்தபட்டன
  • இந்தியாவில்தான் கணித்தில் உள்ள குழப்பமான பை(PIE) எண்ணை கண்டறிந்தனர்
  • நாம் அணைவரும் விளையாடக்கூடிய பரமபதம் மற்றும் சதுரங்கம் போன்றவை இந்தியாவில்தான் கண்டுபிடுக்கபட்டது
  • நாம் அணைவரும் நம் தலைக்கு பயன்படுத்தகூடிய ஷாம்புவும் இந்தியாவில் தான் கண்டுபிடிக்கபட்டது
  • இன்றைய கணினி காலகட்டத்தில் நாம் உபயோகிக்க கூடிய பென்ட்ரைவும் நம் நாடு இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது

நன்றி!

WATCH ON YOUTUBE