top 10 different rains tamil top 10 வித்தியாசமான மழைகள்

                        10 வித்தியாசமான மழைகள்

வணக்கம் நண்பர்களே!

இன்றைய பதிவில் உலகில் பெய்த வித்தியாசமான 10 மழைகள் பற்றி காண்போம்.
10.BLOOD RAIN (இரத்த மழை)

 

   இரத்த மழை  நீங்கள் நினைப்பது போல இது இரத்த மழை அல்ல இந்த மழை சிகப்பு நிறத்தில் பொழிந்ததால் இதனை இரத்த மழை என்று அழைக்கின்றனர்.இந்த இரத்த மழை நம் இந்தியாவில் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் இரண்டு முறை பெய்துள்ளது.இந்த மழை கேரளாவில் 1985-ஆம் ஆண்டும் 2001-ஆம் ஆண்டும் பெய்த்து. இந்த மழையை கண்ட பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாகினர் அதுமட்டுமின்றி மிகவும் அச்சப்பட்டனர் இதுவரை இது போன்ற மழையை கண்டதே இல்லை என்றும் கூறினர்.இந்த மழை சிகப்பாக பெய்த்தற்கு காரணம் என்னவென்று விஞ்ஞானிகள் கூறுவது அங்கு உள்ள வளிமண்டலத்தில் பச்சை நிற ஆல்காக்கல் அதிகளவில் உள்ளன இதனால் வளிமண்டலத்தில் ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாகவே இந்த மழை சிகப்பு நிறத்தில் பொழிகிறது.

9.மீன் மழை (FISH RAIN)

மீீன் மழை இந்த மழை உலகளவில் நிறைய நாடுகளில் பெய்ததுள்ளது.குறிப்பாக இலங்கையில் 2012-ஆம் ஆண்டு மீன்களுடன் ஒட்டுமொத்த கடல்வாழ் உயிரனங்களும் பொழிந்தன இதற்கான காரணம் மிகவும் எளிதானது.கடலில் ஏற்படக்கூடிய புயல் அல்லது  சூறாவளியானது அதன் அதீத காற்றால் கடல் நீரை மேலே இழுக்கும் அதனோடு கடல்வாழ் உயிரனங்களும் மேலே செல்கிறது இந்த சூறாவளி மேகங்கள் கரையை கடக்கும் போது கடலில் இருந்து மேலே எடுக்கப்பட்ட அனைத்தையும் மழையாய் பொழிகிறது எனவே இவ்வறே இந்த மீன்மழை பொழிந்திருக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.இந்த மழை பெய்தபோது அனைத்து மீன்களும் உயிரோடு இருந்தன என்பது குறிப்பிடதக்கது

top 10 பணக்கார மனிதர்கள் 2021 top 10 richest people 2021 in tamil

8.வெள்ளி நாணயங்கள் மழை

இந்த மழை உலகின் மிகவும் விலையுயர்ந்த மழையாக கருதப்படுகிறது ஏனெனில் இந்த மழை வெள்ளி நாணயங்களாக பொழிந்தது.இந்த மழை 1940-ஆம் ஆண்டு ரஷ்யாவின் கார்க்கி நகரில் பொழிந்தது இதன் காரணம் கடலில் இந்த வெள்ளி நாணயங்கள் கொட்டப்பட்டு இருக்கலாம் இதனை ஒரு சூறாவளிகாற்று எடுத்து மழையாக பொழிந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

7.தவளை மழை

இந்த மழை ஜப்பான் மற்றும் சில நாடுகளிலும் பெய்துள்ளது. இநத மழை முழுவதும் தவளை ஆக பெய்தது இதன் காரணுமும் சூறாவளி என்றே அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இதில் உள்ள மர்மம் என்னவென்றால் கடலில் உள்ள தவளைகள் மட்டுமே மற்ற கடல்வாழ் உயிரினங்கள் மாழையாக பெய்யவில்லை இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது எவ்வாறு சூறாவளி தவளைகளை
மட்டும் மழையாய் பெய்தது எண்பது புரியாத புதிராகவே உள்ளது.
6 .இறைச்சி மழை 

 

இந்த மழை அமெரிக்காவில் 1876-ஆம் ஆண்டு மார்ச் 3 தேதி பெய்தது இதை கண்ட மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர் எப்படி இறைச்சி மழை பெய்தது என்று இதற்கான காரணமும் மிகவும் எளிதானது இறைச்சி உண்ணும் கழுகுகள் அந்த இடத்தில் அதிகளவில் உள்ளன எனவே இ‌ந்த கழுகுகள் கொண்டு செ‌ன்ற இறைச்சிகள் தவறி கிழே விழுந்திருக்கலாம் இதுவே நாம் பார்பதற்கு இறைச்சி மழை போல் தோன்றியுள்ளது.
5.பால் மழை

 

இந்த மழை அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இருந்து 700 கிமீ
தொலைவில் பெய்துள்ளது இந்த மழை நிங்கள் நினைப்பது போல பால் அல்ல அந்த மழை வெள்ளை நிறத்தில் பெய்ததால் இதனை பால் மழை என்று அழைக்கின்றனர். இ‌ந்த மழை ஏன் இவ்வாறு பொழிகிறது என்றால அந்த இடங்களில் அதிகளவு எரிமலை வெடிப்புகள் ஏற்படுவதாகவும் அதுமட்டுமின்றி அங்குள்ள உப்பு ஏரி புழுதி புயல் காரணமாக இந்த  மழை இவ்வாறு பெய்கிறது என்று கூறுகின்றனர்.
4.சிலந்தி மழை

 

இநத மழை பிரேசில் நாட்டில் பெய்துள்ளது அதுமட்டுமல்ல உலகின் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌லும் இந்த மழை பெய்துள்ளது. வானத்திலிருந்து சிலந்தி கிழே விழுந்துள்ளன இதை கண்ட அனைவரும் சிலந்திகள் மழையாய் பெய்தது என்று நினைத்தனர் ஆனால் இதற்கான காரணம் இந்த சிலந்திகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இனப்பெருக்கத்திற்காக ஒரு இடத்தில் ஒன்றுசேரும் அப்போது அதிகம் காற்று வீசியதால் அந்த சிலந்திகள் காற்றில் பறந்து வந்து விழுந்துள்ளது இதுதான் நாம் பார்ப்பதற்கு சிலந்திகள் மழை போல் தெரிந்துள்ளது.

உலகின் விலையுயர்ந்த 10 கார்கள் top 10 expensive cars in the world

3. வௌவ்வால் மழை

 

இந்த மழை ஆஸ்ட்ரேலியாவில் பெய்துள்ளது. வௌவ்வால்கள் இறந்து மழை போன்று கிலே விழுந்துள்ளன கிட்டத்தட்ட இலட்சக்கணக்கான வௌவ்வால்கள் வானிலிருந்து இறந்து கிலே விழுந்துள்ளன இதற்கான காரணமாக விஞ்ஞானிகள் கூறுவது அந்த காலகட்டத்தில் மிக அதிகளவு வெப்பநிலை பதிவாகி உள்ளது கிட்டதட்ட 30 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பதிவாகியது இதன் காரணமாக அதாவது இந்த வெப்பநிலையை தாங்க முடியாத வௌவ்வால்கள் இறந்து கீழே விழுந்துள்ளன இது காண்பதற்கு வௌவ்வால் மழை போல் தோன்றியதால் இதனை வௌவ்வால் மழை என்று கூறுகின்றனர்.

2.ஓனான் மழை

இந்த மழையும் ஆஸ்திரேலியாவில் பெய்துள்ளது இது மழையல்ல காண்பதற்கு மழைபோல் தோற்றமழித்துள்ளது.இதற்கு காரணமும் அங்குள்ள வெப்பநிலை குறைந்ததன் காரணமாக அந்த ஓணான்கள் அப்படியே உறைந்து மரத்திலிருந்து கீழே விழுந்தன.

1.வைர மழை

இந்த வைர மழை பூமியில் பொழியவில்லை வேற்று கிரகத்தில் பெய்தது இந்த மழைகள் venus மற்றும் 55-cancri e போன்ற கிரகங்களில் வைர மழை பெய்கிறது.இதற்கான காரணம் அங்குள்ள வளிமண்டலம் காரணமாவே  இந்த மழை  பெய்கிறது.

                                                                 நன்றி!
                            

 

..