வித்தியாசமான மரங்கள்-different trees
வணக்கம் நண்பர்களே!
இந்த உலகில் 3 trillion-கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. அந்த மரங்களில் மிகவும் அற்புதமான மற்றும் வித்தியாசமான(different trees) இதுவரை காணாத 10 மரங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
10.RAINBOW EUCALYPTUS
RAINBOW EUCALYPTUS இந்த மரம் இந்தோனிசியா மற்றும் பிலிப்பைபைன்ஸ் நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த மரத்தின் தோற்றம் வானவில் போன்ற வண்ணங்களை கொண்டுள்ளது அதாவது அந்த மரத்தின் பட்டைகள் சிவப்பு,மஞ்சள்,பச்சை போன்ற பல வண்ணங்களில் உள்ளன.இந்த அதிகளவில் காகித உற்பத்திக்காக விளைவிக்கப்படுகிறது.இது பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்
9.LIFE OF TREE
இந்த மரம் பஹ்ரைன் நாட்டில் ஒரு பாலைவனத்தில் அமைந்துள்ளது.இந்த மரம் கிட்டதட்ட 400 ஆண்டுகள் பழமையானது இதில் அதிசயம் என்னவென்றால் இந்த மரம் பாலைவனத்தில் அமைந்தும் மிகவும் பசுமையாக காணப்படுகிறது அதுமட்டுமின்றி இந்த மரம் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 10 கி.மீ-க்கு நீர் என்பதே இல்லை எவ்வாறு இந்த மரம் இன்றளவும் பசுமையாகவே உள்ளது என்பது மர்மமாகவே உள்ளது.இந்த மரத்தை காண்பதற்காகவே வருடத்திற்கு 60,000 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள்.
8. CROOKED FOREST
ஒரு காட்டில் ஒரு மரம் வித்தியாசமாக இருந்தால் பரவாயில்லை ஆனால் இங்கு ஒரு காடே வித்தியாசமாக உள்ளது.போலாந்து நாட்டில் உள்ள இந்த crooked forest-ல் உள்ள pine மரங்கள் 60 டிகிரி சாய்ந்து காணப்படுகிறது. இந்த மரங்கள் ஏன் இவ்வாறு சாய்ந்துள்ளன என்பது இன்றளவும் எவராலும் விலக்கமுடியாத மர்மமாகவே உள்ளது.
7.DRAGON BLOOD TREE
இந்த வகையான மரம் காளான் போன்ற அமைப்பை கொண்டுள்ளது அதாவது மிகப்பெரிய இராட்சத காளான்கள் போல இருக்கும்.இந்த மரம் மடகாஸ்கர் மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகிறது.இந்த மரத்தை வெட்டும்பொழுது சிவப்பு நிற திறவியம் தோன்றுகிறது.
6.BAOBOB TREE
இந்த மரம் கிட்டதட்ட 28-லிருந்து 35 அடி விட்டம் கொண்டது இதன் உயரம் 100 அடி ஆகும் .இந்த மரம் பார்பதற்கே வித்தியாசமாகவே உள்ளது.இது ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது.இந்த மரம் வருடத்திற்கு 1000 லிட்டர் தண்ணீர் உட்கொள்ளுமாம்.
5. EL ABINO DE LA SABINA
இந்த மரம் ஸ்பெயின் நாட்டில் அதிகளவில் உள்ளது.இந்த மரத்தை பார்பதற்கு மரம் முழுவதுமாக சாய்ந்து காணப்படுகிறது.இது ஏன் இவ்வாறு உள்ளதென்றால் அங்கு அதிகளவில் காற்று வீசுவதால்தான் இந்த மரம் இப்படி உள்ளது என்று கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி இந்த மரம் காற்று வீசும் திசைக்கேற்ப தன்னைதானே மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.
4.SILK COTTON TREE (COMBODIA)
இந்த மரம் கம்போடியாவில் உள்ள மிகவும் பழமையான மரம் ஆகும். இந்த மரம் கிட்டதட்ட 3000 ஆண்டுகள் பழமையானது.இந்த மரம் அங்கோர் என்ற இடத்தில் தா புரோம் என்ற கோவிலில் அமைந்துள்ளது.இந்த மரம் உள்ள இடத்தில் இருக்கும் கோவில்கள் தவிர மற்ற இடத்தில் உள்ள கோவில்கள் அனைத்துதம் இயற்கை பேரழிவுகளால் அழிந்துவிட்டன ஆனால் இந்த மரம் இருக்கும் இடத்தில் உள்ள கோவில்கள் மட்டும் இன்றளவும் அழியாமல் உள்ளது இதற்கு காரணம் இந்த மரம் தான் என்று அனைவரும் கூறுகின்றனர்.
3.SEQUOIA SEMPERVIRENS
செக்வோயா செம்பர்வைரன்ஸ் இந்த மரம் தான் உலகிலேயே மிகவும் உயரமான மரம் ஆகும். இது சுமார் 300 அடி உயரம் கொண்டது. இது கலிபோனியாவில் உள்ள தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ளது.
2.BANYAN TREE
இந்த மரம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.இது 2000 ஆண்டுகள் பழமையானது . இது 1000 சதுர அடி பரப்பளவு கொண்டது.இது இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான மரமாக கருதபடுகிறது.
1. BAMBOO FOREST
கியோட்டோ மூங்கில்காடுகள் இது ஜப்பானில் அமைந்துள்ளது..இது ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலாதலமாக உள்ளது.இதை காண்பதற்கு மட்டும் வருடத்திற்கு 1லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.இது பார்பதற்கு மிகவும் அழகான காடுகளாக இன்றளவும் உள்ளது..
காடுகள் அழிப்பு
இந்த பூமியில் 3 TRILLION மரங்கள் உள்ளன இந்த மரங்களை நாம் வருடத்திற்கு70லிருந்து80லட்சம்மரங்களை அழித்துகொண்டிருக்கிறோம்.இதனால் பூமி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது .எனவே அனைவரும் மரம் வளர்போம்! மழை பெறுவோம்!
நன்றி
Related:வித்தியாசமான வீடுகள்