வணக்கம் நண்பர்களே!
இன்றைய பதிவில் இந்த உலகில் மனிதருக்கு மட்டுமல்லாமல் விலங்குகளிக்கும் பொதுவான விசயம் என்னவென்றால் காதல் எனலாம் ஒரு அம்மாவுக்கு தன் பிள்ளை மூது இருப்பதும் காதல்தான் ஒரு இளைஞனுக்கு தனது பைக்கின் மீது இருப்பதும் காதல்தான் காதல் என்பது ஒரு நபர் மீதுதான் வரவேண்டும் என்று எந்தவித அவசியமும் இல்லை அநு பொருளாக இருக்கும் உங்கள் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளாக இருக்கலாம் ஏன் ஒரு செடியாக கூட இருக்கலாம் இத்தகைய சிறப்பு பெற்ற காதல் (LOVE) பற்றிய 10 சுவாரஸ்யமான விடயங்களை பற்றி காண்போம் .
காதல் குறியீடு (SYMBOL OF LOVE)
காதல் என்று சொன்ன உடனே நாம் அனைவருக்கும் மனதில் தோன்றுவது இதயம் போன்ற அமைப்பு கொண்ட இந்த குறியீடு எனல்லாம் . இந்த குறியீடு எப்படி தோன்றியது என்பது எவருக்கும் தெரியாது. இதில் பல கூற்றுகள் கூறப்படுகின்றன அதில் இருக்கும் ஒரு சில கூற்றுகளை காண்போம்.
முதலாவதாக இந்த இதயம் போன்ற குறியீடு முதன் முதலில் நம் விளையாடும் சீட்டு கட்டுகளில் வந்தது என நம்பபடுகிறது இவை முதன் முதலில் ஐரோப்பிய நாடுகளில் 14-ம் நூற்றாண்டில் முதன் முதலில் தோன்றியிருக்கலாம் என நம்பபடுகிறது.
இரண்டாவதாக இந்த குறியீடு சில்பியா என்ற கருத்தடைக்கு பயன்படுத்தபட்ட இலையில் இருந்து வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறுது.
மூன்றாவதாக இந்த குறியீடு பெண்களின் அந்தரங்கங்களை குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்த குறியீடு அன்பை உணர்த்தும் குறியீடாக இன்றுவரை மக்களால் பயன்படுத்தபட்டு வருகிறது.
அதன் பிறகு நவீன காலத்திற்கு இந்த குறியீடு 1920 ல் I LOVE NEW YORK என்ற ஒரு நிகழ்ச்சியின் மூலம் சிறப்படைந்தது.
காதல் வருவதற்கான காரணங்கள் (why do we love with someone?)
காதல் வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் முக்கிய காரணம் நம் மூளையில் சுரக்கும் டோபமைன் என்ற சுரப்பியே காரணமாகும். இந்த சுரப்பி நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்ய தோண்டும். நார் அட்ரினலின் என்ற சுரப்பி இதயத்தில் காதல் உணர்வை தோன்ற வைக்கும். பெனி பெதிலமைன் என்ற சுரப்பி காதல் உணர்வின் போது வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
சிகப்பு ரோஜா(why love represents red rose?)
காதல் என்றாலே சிகப்பு ரோஜாதான் நாம் அனைவருக்கும் மனதில் தோன்றும் . கிரீக் ரோமானிய கலாச்சாரம் படி காதல் கடவுள் முதன்முதலில் அன்பின் வெளிப்பாடாக ரோஜாவை படைத்ததாக கூறுகிறார் அதன் பிறகே சிகப்பு ரோஜாவை காதலின் அடையாளமாக உள்ளது.
காதல் அறிகுறிகள்( love symptoms)
உங்களை யாராவது காதலிக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க அவரின் கண்களை நேறுக்கு நேர் பார்க்கும்போது அவர்களின் இதயதுடிப்பும் உங்களின் இதயதுடிப்பும் ஒரே அளவில் நேர்கோட்டில் இரிந்தால் காதல் பத்திகிச்சசாம். அதுபோல் ஒரு பெண்ணை பார்த்து பேசும் போது அவரது கருவிழி 40% பெரியதாக விரிந்து காணப்பட்டால் அவருக்கும் உங்கள் மீது காதல்வர அதிக வாய்ப்புள்ளது.
ஏன் பிப்ரவரி 14(why feb 14th)
காதலர் தினத்தை பிப்ரவரி 14 -ம் தினத்தில் கொண்டாட காரணம் 200 வருடத்திற்கு முன்பு குழந்தைகள் பிறப்பதற்காக பெண்களுக்கு ஒரு மருந்து தருவதற்கான விழாவாக ஒரு தினத்தை கொண்டாடுவர் . அந்த தினத்தையே தற்போது காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
காதல் ஒரு போதை(love is a drug)
ஒரு சிலர் உண்மையாக விரும்பி காதலித்திருப்பார்கள் .எதிர்பாராதவிதமாக அவர்கள் பிரிந்துவிட்டால் அவர்கள் மிகவும் வருந்துவர் அதிக தனிமையில் இருப்பர் அதனால் மனதளவில் அதிகம் பாதிக்கபடுவர். இது ஒரு நோய் ஆகும் இதைதான் heart broke syndrome என்று சொல்லப்படுகிறது.
காதலிப்பவர்கள் சில நாட்களில் தங்கள் நண்பர்களை மறந்துவிடுவர் அவர்களிடம் எந்த தொடர்ப்பும் இல்லாமல் இருப்பர் . இது கம்மிடட் இருப்பவர்களின் அறிகுறி ஆகும்.
காதல் செய்வது என்பது ஒரு அடிமையான செயலாகும். இது அடிக்கடி மீண்டும் செய்ய தோண்டும். இதற்கு காரணம் நம் மூளையில் தோண்றும் டோபமைனே(DOPOMINE) காரணம்.
இந்த உலகில் காதலிக்க தெரியாதவர்களும் இருக்கின்றனர் இந்த உலகில் இருக்கும் அனைவருமே காதலிப்பதில்லை இவ்வாறு இருப்பவர்கள் obsessive compulsive disorder (OCD) and schizophrenia, என்ற அறியவகை நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர்களால் காதலை உணரவே முடியாது என்பது கவலைக்குறியது.
காதலுக்கு கண்ணில்லை
இந்த காதல் மனிதர்கள் மீது மட்டுமில்லாமல் பொருள்கள் மற்றும் விலங்குகள் போன்ற அனைத்தின் மீது அன்பு கொள்வதுமே காதல் ஆகும்.
காதலுக்கான பரிசுகள்
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக பரிசு பொருள்களை வாங்குகிறார்களாம் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஆண்களை விட பெண்கள் 35% அதிகமாக பரிசுபொருள்களை வாங்குகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிறுவயது காதல்
அதாவது உங்கள் பள்ளி பருவ முதலே நீங்கள் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டால் அந்த ஒரு உறவானது இறுதிவரை மிகசிறப்பாக இருக்கும் என உளவியலின் படி நிரூபனமாகிறது.
நல்லவனாக இருக்காதீர்
பெரும்பாலும் பெண்கள் நல்ல மற்றும் கணிவான அப்பாவியான ஆண்களை தனது வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க மாட்டார்கள் ஏனென்றால் பண்டைய காலத்திலிருந்து பெண்ணை காத்து அவளை வழிநடத்துபவன் மீதே பெண்கள் ஈர்க்கபடுவார்கள் அதானல்தான் அப்பாவியான ஆண்களை பெண்கள் கழட்டிவிட்டுவிடுவார்கள்.
காதல் வர எவ்வளவு நேரமாகும்
ஒருவரின் மீது உங்களுக்கு காதல் வர வெறும் 4-நொடிகளே போதுமானது எனலாம். ஆனால் உங்கள் வாழ்க்கை துணையை வெறும் 4 -நொடிகளில் தேர்ந்தெடுப்பது என்பது உங்களுக்கு அந்த அளவுக்கு நன்மையை தராது எனவே சற்று சிந்தித்து செயலாற்றுங்கள் நண்பர்களே!