நம் மனித மூளை பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் 10 interesting facts about human brain in tamil

நம் மனித மூளை பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் (interesting facts about human brain )

human brain

வணக்கம் நண்பர்களே!  இன்றைய பதிவில் நம் மனித இனம் இவ்வளவு தூரம் பரிணாமம் அடைந்து வந்ததற்கு முக்கிய காரணம் நம் சிந்தனைகள் என்று கூறலாம் இந்த சிந்தனைகளை ஏற்படுத்திய மனித உடலின் முக்கிய பகுதியான நம்  மூளையை பற்றி நாமே அறியாத ஆச்சரியமூட்டும் தகவலை பற்றி காண்போம்

10. தலைவலிக்கு காரணம் என்ன??

நம் உடலில் பொதுவாக ஏற்படுவது என்னவென்றால் தலைவலி என்றே கூறலாம் இதற்கு காரணம் உங்கள் கழுத்து மற்றும் தலையின்  நரம்புகளுடன் இணைந்து உங்கள் மூளையில் ஒரு ரசாயன எதிர்வினையை ஏற்படுத்துகிறது இதன்காரணமாகதான்  தலைவலி ஏற்படுகிறது. நாம் அதிக சிந்தனையில் இருக்கும் போது இப்படி நடப்பதால்தான் தலைவலி ஏற்படுகிறது.

9.மூளையின் சக்தி

brain facts
ஒரு மனிதனின் மூளையில் சுமார் நூறு பில்லியன் நியூரான்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட்டுகொண்டே இருக்கின்றனர் இவை வெளிப்படுத்தும் ஆற்றலை கம்பியூட்டர்களின் மெமரியுடன் ஒப்பிட்டால் 2.5 PETA BYYTES அதாவது 2,50,000 GB ஆகும், இது ஒரு சூப்பர்கம்யூடரின் ஆற்றலுக்கு சமமானது.இவ்வவு ஆற்றல் இருந்தும் நாம் இதைபயன்படுத்துகிறோமா என்பது கேள்விகுறியே.
நமது மூளையானது 25 வாட்ஸ் வரை மின்சாரத்தை உருவாக்ககூடியது இதைவைத்து ஒரு மின்விளக்கை கூட எரியவைக்கலாம்

8. நம் மூளையை நாம் எவ்வளவு பயன்படுத்துகிறோம்

brain power
நம் மூளையை நாம் எவ்வளவு உண்மையில் பயன்படுத்துகிறோம் என்றால் பெரும்பாலான மக்கள் கூறுவது நாம் வெறும் 10 சதவீதம்தான் பயன்படுத்துகிறோம் என்பார்கள் ஆனால் உண்மையில் மனிதர்கள் நம் மூளையில் 10 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு கட்டுக்கதையே. நாம் உண்மையில் அனைத்தையும் பயன்படுத்துகிறோம். நாம் தூங்கும்போது 10 சதவீதத்திற்கும் அதிகமாக செயல்படுகிறது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

7.நம் மூளையால் எவ்வளவு வேலைகளை செய்யும்

brain
நாம் அனைவராலும் ஒரே நேரத்தில் நிறைய வேலைகளை செய்ய முடியுமா என்றால் யாராலும் செய்ய முடியாது, ஆம் நம் மூளையால் ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்ய முடியும் பல வேலைகளை நம் மூளையால் செய்ய இயலாது.

6. உங்களுக்கு 100 நண்பர்கள் மட்டுமே இருப்பார்கள்

friends
ஆம் உங்கள் வாழ்நாளில் உங்களுக்கு 100 க்கும் குறைவான நண்பர்களே இருப்பார்கள் இதற்கான காரணம் நீங்கள் புதிய நபர்களை காணும்போது பழைய நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய மூளை மறந்துவிடும் . நிறைய நண்பர்கள் உங்களுக்கு இருந்தாலும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்.

5.பகல் கனவு

dreams
இந்த உலகில் உள்ள மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தன்னுடைய வாழ்நாளில் 30% பகல் கனவு காண்பதிலேயே செலவிடுகின்றனர் இதற்கு காரணம் நம் மூளையில் ஏற்படக்கூடிய ஒரு சில வேதியியல் மாற்றங்களே ஆகும்.

4.மூளையின் அமைப்பு

brain

நம் மூளையின் மொத்த எடை 1.3 கிலோ அதுமட்டுமின்றி மூளையின் 70%  தண்ணீரால் ஆனது ,நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் மொத்த இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனில், மூளைக்கு 20%  கிடைக்கிறது

3.ஆண்களின் மூளை மற்றும் பெண்களின் மூளை

male brain and female brain

உண்மையில் ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சற்று சிறியதாக இருக்கும் என்று நிரூபித்துள்ளனர் ஆனால் ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை மிகவும் சிறப்பாக செயல்படும் தன்மைகொண்டதுு என்பதை நினைவில் கொள்ளுங்கள்்.

2.நம்மை ஏமாற்றும் மூளை

eyes
நாம் நிஜத்தில் காணக்கூடிய அனைத்து பொருட்கள் மற்றும் விஷயங்களையும் நேராக காண்பதில்லை அனைத்தையும் தலைகீழாகதான் தெரியும் நம் மூளைதான் அதனை சரிசெய்து நேராக காட்டுகிறது.

1.மூளையின் அளவு

einstein
நமது மூளை பெரியதாக இருந்தால் நாமும் சிறப்பாக செயல்படுவோம் என்று அர்தம் கிடையாது எடுத்துகாட்டாக சாதரண மனிதர்களின் மூளையை விட ஐன்ஸ்டீனின் மூளை சிறியது ஆனால் அவர்தான் உலகையே புரட்டிபோட்ட சார்பியல் கோட்பாட்டை கண்டறிந்தார்.அதுமட்டுமல்லாமல்  நம் உடலில் அனைத்து பாகங்களும் 20 வயதிலேயே வளர்ச்சி நின்றுவிடும் ஆனால் மூளை 40 ஆண்டுகள் வரை வளரும் தன்மை கொண்டது.
                                                            நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *