தமிழ் கலாச்சாரத்தின் அறிவியல் காரணங்கள் facts about tamil culture in tamil

      facts about tamil culture

facts about tamil culture

நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் பல்வேறு நடைமுறைகளை அன்றுமுதல் இன்றுவரை நாம் பின்பற்றுகிறோம் ஆனால் அதற்கான காரணங்கள் என்ன என்பதை நாம் ஆராய்வதே இல்லை, அப்படி நாம் பின்பற்றக்கூடிய பண்பாடுகளுக்கு பின்னால் இருக்ககூடிய ஒரு சில அறிவியல் காரணங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

 

10.காக்கை உணவு வைப்பது

crow eating
நம் முன்னோர் மக்கள் முதல் இன்றைய மக்கள் வரை பின்பற்றகூடிய ஒரு பழக்கம் என்னவென்றால் நாம் உணவு உண்பதற்கு முன்பாக அந்த உணவை காக்கைக்கு வைப்பது, இது இன்றுவரை நடைமுறையில் உள்ளது ஏன் நாம் காக்கைக்கு சோறு வைக்கிறோம் என்பது நம்மில் பாதி பேருக்கு தெரிவதே இல்லை இதற்கான காரணம் மின்சாரம் கண்டுபிடிக்காத காலத்தில் சரியான வெளிச்சம் இல்லாதாதால் சமைக்கும் பொழுது விஷமுள்ள பூச்சிகள் அதில் விழுந்து விட்டால் உணவு விஷமாகிவிடும் இதனை கண்டறிவதற்காகதான் காக்கைக்கு உணவு வைக்கிறார்கள் காக்கையால் உணவில் விஷம் உள்ளதா என்பதை கண்டறிய முடியும் இதனால்தான் காக்கைக்கு உணவு வைக்கப்படுகிறது.
 

9. கண்திரிஷ்டி கட்டுதல்

கண்திரிஷ்டி

நமது கிரமாங்களில் இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளது அது என்னவென்றால் வீட்டின் வாசலில் கண் திரிஷ்டி  கட்டுதல்  இது உண்மையில் கண்திருஷ்டிக்காக கட்டபடுவதில்லை பல வருடங்களுக்கு முன்பு நம் நாட்டில் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் மக்கள் அதனால் பாதிப்படைந்தனர் ஏதாவது பூச்சிக்கள் மக்களை தாக்கினால்  அவர்களுக்கு உடனடியாக முதலுதவி வழங்கவேண்டும் என்பதற்காக வீட்டின் வாசலில் விஷத்தை முறிக்ககூடிய எலுமிச்சை மற்றும் மிளகாய் அனைவரும் எடுத்து உடனடியாக பயன்படுத்தும் வகையில்  வாசலில் கட்டப்படுகிறது.

8.வடக்கில் தலை வைத்து படுக்ககூடாது

sleeping
 
நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் இந்த வார்தையை கூறியிருப்பார்கள் அது என்னவென்றால் வடக்கு திசையில் தலை வைத்து படுக்க கூடாது என்பதுதான் இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால் வடக்கு திசையில் எப்போதும் காந்தபுலம் அதிகமாக இருக்கும் நாம் வடக்கில் தலை வைத்து படிக்கும்போது இந்த காந்த புலத்தால் நம் மூளையில் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட வாய்புள்ளது இதனால்தான்  இவ்வாறு கூறுகிறார்கள்.
 

7.கோலம் போடுவது 

கோலம்
 
`நம் வீட்டில் அதிகாலையில் எழுந்து பெண்கள் கோலம் போடுவது வழக்கம் உண்டு  இந்த கோலம் எதற்காக போடப்படுகிறது தெரியுமா இந்த கோலம் அரிசி மாவால் செய்யபட்டிருக்கும் நம் முன்னோர்கள் அனைத்து உயிரினங்களும் மதிக்ககூடியவர்கள் இந்த அரிசி மாவை எறும்புகள் போன்ற சிறிய உயிரினங்கள் மற்றும் பறவைகள் உண்டு உயிர்வாழும் அதுமட்டுமின்றி நாம் அதிகாலையில் எழுவதால் சூரியனிலிருந்து வரக்கூடிய கதிர்கள் நம் உடலுக்கு ஆரோக்கியமழிக்கும்.
 
மேலும் படிக்க; குமரிகண்டம் உண்மையா  
 

6.திருமணமான பெண்கள் மெட்டி அணிவது

மெட்டி அணிவது
 

நம் நாட்டில் திருமணமான பெண்கள் மெட்டி அணிவது வழக்கம் இது திருமணம் ஆணவர்களுக்கான குறியீடு கிடையாது இந்த மெட்டி அணியும் கால் விரல் பெண்களின் கர்ப்பையுடன் இணைந்திருக்கும் இது இனப்பெருக்க ஹார்மோன்களை தூண்டும். இதற்காகதான் திருமணமான பெண்கள் மெட்டி அணிகின்றர்.

 

5.பூனை குறுக்கே செல்வது

 
நமது கிராமங்களில் இதை கூறி கேள்விபட்டுருப்பீர்கள் அதாவது பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என்பது தான் இதற்கான காரணம் ஆதி மக்கள் வாகனமாக குதிரை மற்றும் மாடுகளையே வாகனமாக  பயன்படுத்தினர் இவை இரவில்  செல்லும்பொழுது பூனை குறுக்கே சென்றால் பூனையின் கண்ணை பார்த்து பயந்து ஓடி விடும் அதற்காகதான் இதனை கூறுகிறார்கள்.
 
 

4.ஹோமங்கள் நடத்துவது

homam
 
நம் நாட்டில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் ஹோமங்கள் நடத்துவதை நாம் பார்திருப்போம் இதற்கான காரணம் இந்த ஹோமங்களில்மூலிகைகள் மற்றும் அரியவகை மருத்துவகுணமிக்க தாவரங்களை போட்டு எரிப்பார்கள் இதனை சுவாசிப்பதன் மூலம் நமக்கு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
 

3.சிலைகளுக்கு அபிஷேகம்

சிலைகளுக்கு அபிஷேகம்

நம் ஊரில் உள்ள கோவில்கள் அனைத்திலும் அங்குள்ள சிலைகளுக்கு அபிஷேகங்கள் செய்யபடும் இதற்கான காரணம் அந்த சிலைகள் பல நூறு ஆண்டுகள் அப்படியே  இருக்கவேண்டும் என்பதற்காகதான்  சிலைகள் மீது அபிஷேகம் செய்யபடும்போது அவற்றினுள் பினைப்பு ஏற்படும் இதன் காரணமாக பல நூறுஆண்டுகள் ஆனாலும் அந்த சிலைகள் அப்படியே இருக்கும்.

2.பாம்பு புற்றுக்கு பால் வைத்தல்

நம் ஊரில் பெண்கள் பாம்பு புற்றுக்கு பால் வைத்து நாம் பார்திருப்போம் உண்மையில் பாம்புகளால் பாலை குடிக்க முடியாது  அவற்றின் நாக்கு இரண்டாக காணப்படும் இதனால் பாலை பாம்புகளால் குடிக்க முடியாது அதுமட்டமில்லாமல் பாம்பிடம்  பாலை செரிக்க வைக்கும் பண்பும் கிடையாது இருப்பினும் பாம்பிற்கு பால்  வைப்பதற்கான

 காரணம் பாம்புகள் இனப்பெருக்க காலத்தில் இரு வித திரவியத்தை உடம்பில் சுரக்கும் இது ஆண் பாம்புகளை ஈர்க்கும் இதனால் பாம்புகள் பெருகிவிடும் இதனை தடுப்பதற்காக பால் வைக்கபடுகிறது பால் வாசனை பாம்பின் உடலில் உள்ள வாசனையை முறித்துவிடும்.

1.வணக்கம்

 

நாம் அணைவரும் பின்பற்றகூடிய ஒரு பழக்கம் என்னவென்றால் வணக்கம் கூறுவது இதற்கான அறிவியல் காரணம் நம் கையில் உள்ள அனைத்து நரம்புகளும் நேரடியாக மூளையுடன் தொடர்பில் உள்ளது இதனால் நமக்கு ஒரு வித புத்துணர்ச்சி கிடைக்கும் நாம் மற்றொருவரோடு பேசும்பொழுது ஒரு மரியாதையையும் ஏற்படுத்தும்.

 
 
                                                                 நன்றி!