10 facts about olympic games
ஒலிம்பிக் என்பது தற்போது உலக நாடுகள் அனைத்தும் பங்கேற்கும் சிறந்த விளையாட்டுகளை நடத்தக்கூடிய ஒரு அமைப்பாகும். உலகில் நிறைய விளையாட்டுகள் இருப்பினும் இந்த ஒலிம்பிக்கை பல்வேறு நாடுகள் மற்றும் உலக மக்கள் அனைவரும் சிறப்பாக கருதுகின்றனர்.
ஒலிம்பிக் வரலாறு(OLYMPIC HISTORY)
இந்த ஒலிம்பிக் போட்டிகள் 27 ம் நூற்றாண்டுகளிலேயே கிரேக்கர்களால் ஆரம்பிக்கப்பட்டது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே 776 ம் நூற்றாண்டிலேயே கிரீஸ் நாட்டில் மவுண்ட் ஓலிம்பியா என்ற இடத்தில் ஒருநாள் போட்டியாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு முன்னர் பொழுதுபோக்கு விளையாட்டுளை தொகுத்து ஒலிம்பிக் விளையாட்டாக மாற்றினர். போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ஆலிவ் இலைகளில் கிரீடம் வைத்து அதனை பெருமை படுத்தினர். அப்போதைய காலகட்டதில் ஆண்கள் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்றினர் பெண்கள் போட்டிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை.
பெண்களுக்கான ஒலிம்பிக்(WOMEN OLYMPIC)
பெண்களுக்குகென்று தனியாக கெரா என்ற போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. அன்றைய ஒலிம்பிக்கில் ஓட்டபந்தயம்,மல்யுத்தம்,ஈட்டி எறிதல் கல்லை எறிதல் போன்ற பல போட்டிகள் இருந்தது , பெண்கள் முதன்முதலாக ஒலிம்புக்கில் 1912-ஆம் ஆண்டுதான் ஆண்களுக்கு இணையாக பங்கேற்றனர். அப்போதெல்லாம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் நடத்தபட்டது போட்டி நடைபெறும்போது எந்த வித போரும் நடக்கக்கூடாது என்றும் அமைதியான சூழலில் மட்டுமே போட்டிகள் நடைபெற வேண்டும் என்று ஒப்மந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதெல்லாம் வீரர்களை அத்லோஸ் என்று அழைத்தனர் பிறகு அதுவே ஆங்கிலத்தில் அத்லெட்ஸ் என்று அழைக்கப்பட்டது.
ஒலிம்பிக் தோற்றம்(ORIGIN OF OLYMPIC)
கிரேக்கர்களின் கடவுளான ஜியஸ் மகன் ஹெர்குலிஸ் என்பவர்தான் இந்த ஒலிம்பிக்கை தோற்றிவிருக்கலாம் என்று கிரேக்கர்களால் கூறப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியை 393 ல் தியோடோசிஸ் என்ற மன்னர் தடை செய்தார். பிறகு நவீன ஒலிம்பிக்கின் தந்தை பியரி டி குபர்டின் என்பவர் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்து தற்போதைய ஒலிம்பிக்கை உலகிற்கு வழங்கினார்.
ஒலிம்பிக் தீபம்(OLYMPIC FIRE)
முதல் ஒலிம்பிக் 1896 ல் ஏதேன்ஸ் நகரில் அனைத்து நாடுகளின் முன்னிலையில் நடைபெற்றது. ஒலிம்பிக் தீபத்தை 1928 ல் ஆம்ஸெடர்டம் என்ற ஒலிம்பிக் போட்டியில் முதலாக ஏற்றப்பட்டது. அடுத்ததாக ஒலிம்பிக் கொடிக்கு வருவோம் இந்த கொடியில் 5 வளையங்கள் மற்றும் 6 நிறம் இருக்கும் அவை நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை , சிவப்பு , வெள்ளை ஆகியவை ஆகும். 5 வளையம் 5 கண்டங்களை குறிக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டி இதுவரை உலக போர் காரணமாக 3 ஆண்டுகள் நடைபெறவில்லை . வருகின்ற ஒலிம்பிக் 2021 ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளது
பண்டைய கால ஒலிம்பிக் போட்டி(ANCIENT OLYMPICS)
பண்டையகால கிரேக்க விளையாட்டு வீரர்கள் ஸ்பான்சர்ஷிப்பிற்கோ , பாதுகாப்பு அல்லது ஃபேஷன் பற்றியோ கவலைப்படவில்லை ஏனெனில் அவர்கள் போட்டியில் நிர்வாணமாக போட்டியிட்டனர். ஆம் பண்டைய கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அனைவரும் உடலில் உடையின்றி நிர்வாணமாகதான் பங்கேற்றனர்.இதில் குறிப்பிட தக்க விடயம் என்னவென்றால் அன்றைய போட்டிகளில் பெண்கள் பங்கேற்கவில்லை மற்றும் பெண்கள் பார்வையாளராகவும் அனுமதிக்கபடவில்லை.
பதக்கங்களை கடிப்பது ஏன்
விருது வழங்கும் விழாவின் போது ஒலிம்பியன்கள் பதக்கங்களைக் கடிப்பதை , பார்திருக்கலாம் அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள் என்று யோசித்தீர்களா? இது கடந்த காலத்தில் வணிகர்கள் ஒரு நாணயம் உண்மையானது என்பதை கடித்து பரிசோதிப்பார்களாம் உண்மையான தங்க நாணயத்தில் பல்லின் அச்சு படாது போலியானவற்றில் பல்லின் அச்சு இருக்கும் இவ்வாறு தான் இதனை பரிசோதிப்பார்களாம் .