நாம் உண்மையென நினைத்த பொய்கள் 10 lies you still beleive in tamil

                      10 LIES YOU STILL  BELEIVE

10 lies you beleive
நம் வாழ்வில் நிறைய விடயங்களை கேள்விபட்டிருப்போம் அப்படி கேள்விபட்ட விடயத்தை நாம் உண்மையெனவும் நம்பியிருப்போம் ஆனால் அது பொய்யாக இருக்கும் அப்படி நாம் உண்மையென நம்பிய 10 பொய்களை(lies you still beleive) பற்றி காண்போம்.

1.டைனோசர்

டைனோசர்கள் நாம் படத்தில் காண்பதுபோல சிங்கத்தை விட பயங்கரமாக கர்ஜிக்கும் திறன் கிடையாது அது வெறும் படத்திற்காக எடுக்கபட்டதே.
டைனோசர்களின் உண்மையான குரல் ஒரு பூனையின் குரல் போன்று மிகவும் மெலிசாக காணப்படும் இதற்கான காரணம் தற்போது வரை கிடைக்கபெற்ற புதைபடிம எலும்புகளை வைத்து ஆய்வுசெய்யும்பொழுது டைனோசர்களுக்கு குரல்வலை மிகவும்சிறியதாக இருப்பதால் அவற்றின் குரல் ஒரு பறவையின் குரலை ஒத்தே இருக்கும் என குறிப்பிடுகிறார்கள்.
அன்றுமுதல் தற்போதுவரை கர்ஜனை செய்ய கூடியவை பாலூட்டி விலங்குகளாகவே இருந்துள்ளனர் எ.கா ; சிங்கம்,புலி,கரடி,சிறுத்தை ஆனால் டைனோசரோ ஒரு பல்லியினம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
 

2. மாடும் சிகப்பு நிறமும்

காளைகளுக்கு சிகப்பு நிறத்தை கண்டால் கோபம் வரும் என கூறுவார்கள் ஆனால் உண்மையில் காளைகளுக்கு நிறத்தை பிரித்தறியும் திறன் கிடையாது அதாவது காளைகளுக்கு அனைத்து நிறங்களும் ஒரே மாதிரியாகதான் தெரியும்.

3.சூடான நீர்

நாம் நினைத்திரிப்போம் குளிர்ச்சியான நீரை விட சூடான நீர் குளிர்ச்சியடைய நீண்ட நேரம் ஆகும் என்று ,ஆனால் உண்மையில் குளர்ச்சியான நீரை விட சூடான நீர் மிகவும் விரைவாக உரையும் தன்மை கொண்டது இந்த நிகழ்வைதான் எம்பாபே நிகழ்வு என குறிப்பிடுகின்றனர் இதற்கான காரணம் நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட தன்மையை கொண்டுள்ளன அவை சாதாரணமாக இருப்பதை விட சூடாக இருக்கும்போது அந்த துகள்களின் மாறுபாடு காரணமாக உறைகிறது.

4.ஹீல்ஸ் காலணிகள்

heels

பெண்கள் அனைவரும் ஹீல்ஸ் அணிவது வழக்கம் உண்மையில் இந்த காலனிகள் பெண்களுக்காக உருவாக்கபட்டதா என்று கேட்டால் கிடையாது கி.மு 10 ஆம் நூற்றாண்டில் பிரெஷ்ய படை இராணுவ வீரர்களுக்கு இந்த ஹீல்ஸ் காலணிகள் முதன் முதலில் அறிமுகபடுத்தபட்டது இதற்கான காரணம் போரில் எதிரிகளை விட உயரமாக இருந்தால் அவர்களை சுலபமாக வீழ்த்தமுடியும் அதுமட்டுமின்றி எதிரிகளின் நகர்வுகளை எளிதாக கண்கானிக்க முடியும் இதானால் இவை அறிமுகபடுத்தபட்டன. இதனை பெண்கள் பயன்படுத்த காரணம் இயற்கையாகவே பெரும்பாலான பெண்கள் ஆண்களை விட உயரம் குறைவாகவே இருந்தனர் இதனால் காலப்போக்கில் இதனை பெண்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர் 20 ஆம் நூற்றாண்டில் பிரபல காலணி நிறுவனம் ஒன்று இந்த காலணிகளை உலகெங்கும் மீண்டும் பிரபலமாக்கியது.

5.பிரமீடு

pyramid
உலகில் பிரமீடுகள் நிறைய நாடுகளில் காணப்படுகின்றன ஆனால் பெரும்பாலான மக்கள் பிரமீடு என்றாலே எகிப்து என நினைக்கின்றனர் ஆனால் எகிப்தில் ஏற்படும் பிரமீடுகளின் எண்ணிக்கை 118 சூடானில் 200-க்கும் மேற்பட்ட பிரமீடுகள் காணப்படுகின்றன.

6.தூக்கம்

sleep

அனைத்து மக்களும் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என அவசியமில்லை தூக்கம் என்பது அவரவரின் உடல்நிலையை பொறுத்தது சிலருக்கு தூங்குவதற்கு 3-4 மணி நேரம் மட்டுமே போதுமானது சிலருக்கு 10 மணி நேரம் தூங்கினால் கூட பத்தாது.

7.சூரியன்

sun

 

சூரியனின் நிறம் உண்மையில் ஆரஞ்சு கிடையாது அதன் உண்மையான நிறம் வெள்ளை நாம் சூரியனை ஆரஞ்சு நிறத்தில் காண காரணம் நம் பூமியில் உள்ள சிறிய துகளின் மீதி சூரிய ஒளிகற்றைகள் சிதறடிக்கபட்டு அதிக அலைநீளத்தை கொண்ட ஆரஞ்சு மற்றும்சிகப்பு நிறமாக நம் கண்களுக்கு தோற்றமளிக்கிறது. 
 

8.மரங்கள்

trees

இந்த உலகில் அதிக அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி மரங்களால் தான் வருகிறது என நாம் நினைப்போம் ஆனால் உண்மையில் இந்த உலகில் 70% அதிகமான ஆக்ஸிஜன் உற்பத்தி கடலில் இருந்துதான் வருகிறது.

9.இண்டர்நெட்

internet
அதிவேக இண்டர்நெட் செயற்கைகோள் மூலமாக இணைக்கப்படுகிறது என நம்புகிறோம் ஆனால் உண்மையில் ஆழ்கடல் கண்ணாடி இழை கேபிள் மூலமாகதான் இணைக்கப்படுகிறது.

10.நியூட்டன்

newton
source:pixabay


நியூட்டன் ஆப்பிள் மரத்தின் அடியில் ஈர்ப்பு விசையை கண்டறிந்தார் என்று கூறுவர் ஆனால் நியூட்டன் வாழ்ந்த காலத்தில் தற்போது எப்படி கொரோனா உள்ளது அதுபோன்று புபானிக் பிளேக் என்ற நோய் பரவியிருந்தது இதனால் அவர் வீட்டை விட்டு கூட
அதிகம்செல்லவில்லை,  இந்த ஆப்பிள் மரத்தை ஒரு எடுத்துகாட்டாகவே குறிப்பிடுகிறார் இதைதான் நாத் இவ்வளவுநாள் உண்மையென நம்பியிருக்கிறோம்.

 
                                                                              நன்றி!