db cooper unsolved mystery

உலகையே உலுக்கிய டி.பி கூப்பரின் வழக்கு D B cooper unsolved mystery in tamil

                        D B Cooper unsolved mystery

db cooper unsolved mystery
வணக்கம் நண்பர்களே!  இன்றைய பதிவில் நாம்  நம்முடைய வாழ்நாளில் திருட்டுகளை பற்றி கேள்விபட்டிருப்போம் ஆனால் நீங்கள் கேள்வியே படாத உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடிய  ஒரு வித்தியாசமான திருட்டு அதாவது  எந்த அளவுக்கு வித்தியாசமானது என்றால் , ஒரு தனிமனிதன்  ஒட்டு மொத்த  விமானத்தையும்  ஹைஜக் செய்து பணத்தை திருடி பல்லாயிரம் அடி உயரத்திலிருந்து விழுகிறான் உண்மையில் இந்த மனிதர் யார் கீழே விழுந்தவன் உயிர்பிழைத்தானா  அவனை கண்டுபிடித்தனரா, கிட்டதட்ட 47 வருடங்கள் ஆகியும் FBI -ஆல் கூட கண்டுபுடிக்க முடியாத ஒரு விடை தெரியாத இந்த வழக்கை பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம் .

யார் இந்த டி.பி கூப்பர்

1971-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள போர்லாண்ட் சர்வதேச  விமான நிலையத்தில்  கையில் ஒரு சூட்கேசை வைத்துகோண்டு 70-களில் உள்ள ஒரு கோட்டு சூட்டை போட்டுகொண்டு கிட்டதட்ட 40 வயது இருக்க கூடிய ஒரு மதிப்பிற்குரிய நபர் வருகிறார் விமானம் எண் 305-ல் டேன் கூப்பர் என்ற பெயரில் அந்த நபர் அமெரிக்காவின் மற்றொரு பகுதியில் உள்ள வாஷிங்டனுக்கு டிக்கெட் எடுக்கிறார் மதியம் சுமார் 2.40 மணிக்கு விமானம் பறக்க ஆரம்பிக்கிறது இந்த டேன் கூப்பரும் தன்னுடைய சீட்டு எண் 18-ல் அமருகிறான்.

flight db cooper
 
விமானம் பறக்க ஆரம்பிக்கிறது கூப்பர் விமானத்தில் உள்ள ஒரு கேபினில் தனக்கு ஒதுக்கபட்ட கடைசி சீட்டில் அமர்ந்து கொண்டு அங்கு இருக்கும் மற்ற பயணிகளை சுற்றி முற்றி பார்க்கிறான் ஒரு சில நிமிடங்கள் இப்படியே கடக்கிறது பிறகு அந்த கூப்பர் தான் வைத்திருந்த ஒரு சீட்டை எடுத்து அந்த விமானத்தில் உள்ள பனிப்பெண்ணான புளோரன்ஸ் என்ற பெண்ணிடம் கொடுக்கிறான் அந்த சீட்டை வாங்கி அந்த பெண் பார்க்கிறாள் அவள் முகத்தில் ஒரு பதற்றம் அப்படியே அதிர்ச்சியுற்று நிற்கிறாள் அப்படி என்ன அந்த சீட்டில் எழுதியுள்ளான் இந்த கூப்பர் என யோசித்தால் அந்த சிறிய சீட்டில் இருந்தது நான் ஒரு பாமை வைத்துள்ளேன் சத்தம் போடாமல் என் அருகே உட்காறு என இருக்கிறது.
 
 
அருகே அந்த பனிபெண்ணும் செல்கிறாள் அப்பொழுதுதான் அவளுக்கு மற்றுமொரு அதிர்ச்சியும் காத்திருந்தது அதுஎன்னவென்றால் அந்த கூப்பர் தன்னுள் வைத்திருந்த சூட்கேசை திறக்கிறான் அதனுள் மிகவும் சக்திவாய்ந்த டைனமைட் குச்சிகள் இருந்தன . அந்த கூப்பர் பனிபெண்ணிடம் தனக்கு 20 இலட்சம் அமெரிக்க டாலர்களும் இரண்டு பின்புற மற்றும் முன்புற பாராசூட்டுகளும் வேண்டும் அதுமட்டுமில்லாமல் நான் தரைஇறங்கியவுடன் ஒரு  லாரியும் அங்கு இருக்க வேண்டும் என கூறுகிறான் அந்த பனிப்பெண் மற்ற பனிப்பெண்களுக்கும் மற்றும் பைலட்டுகளுக்கும்  இந்த விஷயத்தை கூறுகிறாள் இப்படியே 1.30 மணி நேரம் கடக்கிறது விமானமானது சீட்டல் டகோமா விமான நிலையத்தில் தரையிரங்கமால் வானில் வட்டமடித்தபடியே சுற்றுகிறது ஒரு வழியாக மாலை 5.40 மணிக்கு சீட்டல் விமான நிலையத்தில் விமானம் தரையிரக்கபடுகிறது .
 
db cooper
 
விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இங்கு நடந்த ஒரு விஷயம் கூட தெரியாது அனைத்து பயணிகளையும் விரைவாக வெளியேற்றுகின்றனர் ஆனால் கூப்பரோ தான் அமர்ந்திருக்கு சீட்டை விட்டு நகர கூட இல்லை விமானிகளுக்கும் பனிப்பெண்களுக்கும் பயம்வேறு இவன் பாமை வெடிக்க வைத்துவிடுவானோ என்று ஒருவழியாக அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறுகின்றனர். பிறகு கூப்பர் கேட் டதொகையும் பாராசூட்டுகளையும் பைலட்டுகள் வாங்குகின்றனர் . தற்போது 7 நபர்கள் மட்டுமே விமானத்தில் உள்ளனர் கூப்பரையும் சேர்த்து, தற்போது  அந்த விமானத்தில் பணியாற்றுபவர்கள் கூப்பரை தவிர வேறு யாரும் இல்லை  , தற்போது கூப்பர் ஒரு புதிய நிபந்தனைகளை விதிக்கிறான் அது என்னவென்றால் விமானம் மெக்ஸிகோ நோக்கி செல்லவேண்டும் அதுமட்டுமின்றி விமானத்தின் டர்பைன்கள் சற்று திறந்திருக்க வேண்டும் என கூறுகிறான் விமானம் மீண்டும் பறக்க ஆரம்பிக்கிறது அவன் கேட்ட அனைத்து நிபந்தனைகளையும் செய்கின்றன விமானம் பறந்து கொண்டிருக்கிறது ஒரு சில நிமிடங்களில் அங்கு இருந்த கூப்பரை காணவில்லை பனிப்பெண்கள் கூப்பரை தேடுகின்றனர் ஆனால் அவனும் காணவில்லை அவன் வைத்திருந்த அந்த பாம் பெட்டியும் காணவில்லை இதன் பிறகு அந்த கூப்பர் என்ன ஆனான் என்பது இன்றுவரை எவருக்கும் தெரியாது இவன் ஆகாயத்தில் இருந்து குதித்தானா இல்லையெனில் வேறு எதாவது  சம்பவம் அந்த விமானத்தில் நடந்ததா என்று யாருக்கும் தெரியாது.
 

தேடுதல் வேட்டை ஆரம்பம்

 
இந்த நிகழ்வு நடந்த ஒரு சில நாட்களுக்கு பிறகே இந்த சம்பவம் பற்றி உலகிற்கு தெரியவருகிறது அனைத்து அமெரிக்க ஊடகங்களும் இதை பற்றி பேசுகின்றன உலகெங்கும் இந்த கூப்பர் பற்றி பேசப்படுகிறது யார் இந்த கூப்பர் எப்படி இவன் தப்பித்தான் விமானநிலையத்தின் பாதுகாப்புகளை கடந்து எப்படி பாமை உள்ளே கொண்டு வந்தான் இவன் தீவிரவாதியா இல்லையென்றால் தனிமனிதனா என மக்கள் பேச ஆரம்பிக்கின்றன இந்த வழக்கை FBI எடுத்து விசாரிக்கின்றனர்.
 
fbi
 
முதலில் fbi விமானத்தில் அவன் பயன்படுத்திய ஒரு சில பொருட்களை கண்டறிந்து அதனை ஆய்வுசெய்கின்றனர் . இரண்டாவதாக அந்த விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளையும் வரவழைத்து கூப்பரின் உருவத்தை ஓவியமாக வரைகின்றனர் பயணிகள் சொல்லி வரையபட்ட கூப்பரின் படமும் விமானத்தில் பனிபுரிந்த பனிப்பெண் கூறிய படமும் கிட்டதட்ட ஒன்றாக இருந்ததால் கூப்பர் என்பவன் இப்படிதான் இருப்பான் என ஒரு முடிவுக்கு வருகின்றனர்.
 
 
அடுத்ததாக கூப்பர் விமானத்தில் இருந்த இடத்தை கண்டறிந்து அங்கு ஆய்வு செய்ய முடிவெடுக்கின்றனர் போர்ட்லேன்ட் என்ற நகரில் இருந்து  சுமார் 40 கிமீ தொலைவில்தான் கூப்பர் விழுந்திருக்க வாய்ப்புள்ளது என கணித்து அங்கு அவர்களுடைய தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கின்றனர் எஃபிஐ, ஆனால் அந்த இடம் முழுவதும் காடு மற்றும் மலைகள் நிறைந்த பகுதி இதனால் அவர்களுக்கு  ஒரு தடயமும் கிடைக்கவில்லை
 
money
 
FBI- எடுத்த கடைசி ஆயுதம் அந்த 20 லட்சம் அமெரிக்க டாலர்கள் இவை அனைத்தும் சீட்டல் தேசிய வங்கியில் இருந்து அச்சிடபட்டு எடுத்து வந்தது அந்த பணத்தில் வரிசை எண்களும் தொடர்ச்சியானது இந்த எண்களை வைத்து கண்டறியலாம் என நினைத்த எஃபிஐ இந்த தகவலை பொதுவெளியில் வெளியிடுகின்றனர் இந்த வரிசை எண் கொண்ட பணத்தை கண்டால் தகவலளிக்கும் படி கூறுகின்றனர் ஆனால் ஒரு தகவலும் வரவில்லை இப்படியே 10 ஆண்டுகள் கழிகிறது 1980-ஆம் ஆண்டு வாஷிங்டன் கடற்கரையில் ஒரு சிறுவன் 5 பணக்கட்டுகளை எடுக்கின்றான் அந்த பணக்கட்டில் மட்டும் கிட்டதட்ட 5000 அமெரிக்க டால்கள் இருந்தன ஆம் நீங்கள் நினைப்பது சரிதான்  இந்த பணக்கட்டுகள் அனைத்தும் கூப்பருக்கு கொடுத்த பணகட்டுகள்தான் இவை எப்படி இங்கு  வந்திருக்கும் என்று எஃபிஐ தனது விசாரனையை முடுக்கி விடுகின்றனர் எப்படி இந்த பணகட்டுகள் இங்க வந்தன என்பதை போலிசாருக்கு ஒரு தலைவலியாக இருந்தது இதற்கான காரணம் கூப்பர் விழுந்த இடத்தில் இருந்து இந்த கடற்கரை சுமார் 27 கி.மீ தொலைவில் இருக்கிறது இதற்கு காரணமாக போலிசார் கூறுவது அவர் கீழே விழுந்த இடத்தில் ஒரு ஆறு உள்ளது அதன் வழியாக இந்த கடற்கரைக்கு வந்திருக்கலாம் என்று ஆனால் இதற்கு ஒரு தெளிவான விளக்கம் கூறப்படவில்லை.
 
db cooper mystery
 

அடுத்ததாக இந்த கூப்பர் வழக்கில் கூறப்படுவது கூப்பர் கீழே விழுந்தவுடன் இறந்திருக்கலாம் என்று இதற்கான காரணம் கூப்பர் மொத்தம் 4 பாராசூட்டுகள் கேட்டார் ஆனால் அவர் கீழே விழும்பொழுது  டம்மியாக இருந்த பாராசூட்டை எடுத்து சென்றுள்ளான் எனவே இவன் இறந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்

 
இதில் நாம் டி பி கூப்பர் என கூறியிருப்போம் உண்மையில் அந்த திருடனின் பெயர் டேன் கூப்பர் மட்டுமே அப்படி இருக்க இந்த பெயர் எப்படி வந்தது என்றால் இந்த வழக்கை விசாரித்த போலிசார் டேன் கூப்பர் என கூறுவதற்கு பதிலாக டிபி கூப்பர் என தவறாக கூறியுள்ளார் அதையே ஊடகங்களும் கூற டேன் கூப்பரை டி பி கூப்பராக மாற்றினர்
 

முக்கிய குற்றவாளிகள்

db cooper mystery
 

 

 
இந்த வழக்கில் இதுவரை  1000-க்கும் மேற்பட்ட  மனிதர்களை கண்டறிந்தும் அவருகளை விசாரித்தும் உள்ளனர் ஆனால் இன்றுவரை அந்த கூப்பர் யாரென்று கண்டறியவில்லை சிலர் இந்த கூப்பர் கண்டா நாட்டை சேர்ந்தவன் என்றும் மற்றொரு கூட்டமோ இந்த கூப்பர் என்பவன் ராபர்ட் ராக்ஸ்ட்ரா என்ற மனிதன் தான் எனவும் கூறுகிறார்கள் யார் இந்த ராபர்ட் ரக்ஸ்டிரா இவர் அமெரிக்காவில் இராணுவ வீரராக இருந்தவர் என்றும் இவரின் மாமாவின் பெயர்தான் டேன் கூப்பர் இந்த விமான திருட்டு நடைபெற ஒருவாரத்திற்கு முன்புதான் இவர் தன்னுடைய இராணுவ பதவியை விட்டு விலகினார் என்றும் கூறப்படுகிறது, அப்படியென்றால்  இவர்தான் அந்த கூப்பர்  என நினைத்தால் அதுதான் கிடையாது அந்த பனிபெண்ணிடம் கேட்ட பொழுது இவர் இல்லை என கூறிவிட்டார்   அதுமட்டுமில்லாம் இவருக்கு டி. பி கூப்பரின் வயதை விட குறைவு எனவே இவராக இருக்க வாய்ப்பே இல்லை.
 
இந்த வழக்கில் கூப்பர் என்பவன் ஒரு அமெரிக்கன் இல்லை என எஃப் பி ஐ அடித்து கூற காரணம் கூப்பர் காசு வேண்டும் என கூறும்பொழுது எனக்கு 5000 அமெரிக்க டாலர்கள்  வேண்டும் என குறிப்பிட்டு இருப்பான் எனவே அமெரிக்கானக அவன் இருந்தால் அவன் இப்படி கூறியிருக்க மாட்டான் என்றும் கண்டிப்பாக இவன் வெளிநாட்டவனாகதான் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருகின்றனர்.
 
இரண்டாவதாக இந்த வழக்கில் சந்தேகிக்கபடும் ஒரு நபர்தான் இந்த கென்னித் பி கிரிஸ்டியன் இவரும் இராணுவத்தில் பனிபுரிந்தவர்தான் அதுமட்டுமல்லாமல் இவருக்கும் கூப்பருக்கும் கிட்டதட்ட ஒரே வயதுதான் இதுமட்டுமின்றி கூப்பர் என்பவன் இடது கை பழக்க முடையவன் அதேபோல் இவரும் இடது கை பழக்கம் உடையவர் இந்த கிரிடியனன் என்பவருக்கு ஒரு சகோதரன் இருந்ததாகவும் அவர் 1994 – ஆம் ஆண்டு இறந்ததாகவும் கூறுகிறார் ஆனால் அவர் ஏன் எப்படி இறந்தார் என கூறவில்லை இப்படி நிறைய தடங்கள் இருந்தாலும் உருவளவில் நிறைய வேறுபாடுகள் இருந்ததால் இவரும் கூப்பர் இல்லை என கண்டறிகின்றனர்.
 
மூன்றாவதாக டியன் வீபர் என்பவர் இவர் இறப்பதற்கு முன்பாக அவரது மனைவியிடம் நான்தான் டி.பி கூப்பர் என்று கூறிவிட்டு இறந்துள்ளார் . இவரின் பினுபுலத்தை ஆய்வு செய்யும் பொழுது இவருக்கு அந்த சம்பவம் நடந்த காலங்களில் உடலில் காயங்கள் இருந்தது என்றும் , இவரும் இராணுவத்தில் பணிபுருந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் கூப்பரின் தோற்றத்திற்கு கிட்டதட்ட ஒத்துபோகும் ஒரு உடலமைப்பை கொண்டவரும் இவர்தான் இவருக்கும் வயது 47 என்பதும் நம்மை சற்று யோசிக்க வைக்கிறது, ஆனால் இவரின் கைரேகை விமானத்தில் இருந்து எடுக்கபட்ட கூப்பரின் கைரேகேக்கு ஒத்துபோகவில்லை   இவரை கூப்பர் என கூறவும் சரியான ஆதரமில்லாத்தால் எஃபிஐ மீண்டும் குழப்பமடைகிறார்கள் இப்படி பல நபர்களை பல வருடங்கள் விசாரித்தும் இந்த கூப்பர் யார் என்ற தேடல் இன்றும் தொடர்கிறது
 
                                                                               நன்றி!