ஐ. நா அறிவித்த சிகப்பு எச்சரிக்கை global red alert in tamil

             ஐ. நாவின் கோட் ரெட் எச்சரிக்கை-global red alert

code red united nations
global red alert source:pixabay

வணக்கம் நண்பரகளே! இன்றைய பதிவில் மனிதனால் ஏற்படுத்தபட்ட காலநிலை மாற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் அதுமட்டுமல்லாமல் ஐ.நா விடுத்துள்ள சிகப்பு எச்சரிக்கை பற்றியும் காண்போம்.

 

ஐ,நாவின் எச்சரிக்கை

un global red alert
 உலக காலநிலைகளில் மனிதனின்  காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எதிர்வரும் பல  நூற்றாண்டுகளுக்கும் தொடரக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம் குறித்த நிபுணர்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.  காலநிலை மாற்றம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஒன்று ஐ.நாவால் வெளியிடப்பட்டது இந்த பூமி அதிகளவு வெப்பமடைந்ததற்கு மனிதர்களே காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதற்கு உடனடியாகவும் விரைவாகவும்  நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்துவரும் 10 ஆண்டுகளில்  10.5 டிகிரி செல்சியஸ்வரை புவிவெப்பம் உயரக்கூடும் என எச்சரிக்கிறது . அதுமட்டுமல்லாமல் கடல் மட்டம் 2 அடி வரை உயரக்கூடும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது, தற்போது வெளியிடப்பட்ட அறிக்கை மனித இனத்திற்கான சிவப்பு எச்சரிக்கை எனவும் அடுத்த வரக்கூடிய ஆண்டுகள் மனிதர்களுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது. பிரித்தானியாவின் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள  காலநிலை மாற்றத்திற்கான  உச்சி மாநாட்டில் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின்  செயலாளர் அண்டோனியோ குட்ரஸ் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
 

காலநிலை மாற்றம்

global red alert
 
 

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு தொழிற்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சியானது யாரும் எதிர்பாராத வகையில் புவிவெப்பமடைய காரணமாக அமைந்தது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது ஆர்டிக் பகுதியில் பனிகட்டிகள் உருகின பெரும் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு உலகெங்கும் வந்தன அதுமட்டுமில்லாமல் மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டு பெரும் சேதங்களை ஏற்படுத்தின. இதற்கெல்லாம் காரணம் நாம் அன்றாட பயன்படுத்தக்கூடிய கார் ,பைக், ஏ.சி,ஃபிரிட்ஜ் என்று சொல்லிகொண்டே போகலாம். புவி வெப்பத்தை நம்மலால் கட்டுபடுத்த முடியவில்லை என்றால் வருங்காலத்தில் மனித இனம் பேரழிப்பை சந்திக்கூடும் என ஐ.நா கூறுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புவி வெப்பமடைந்ததால் கடந்த ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியா, பிரேசிலின் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்தன தற்போது துருக்கி மற்றும் கிரீஸில் காடுகள் தீயில் கருகி சாம்பலாகுகின்றன. இத்தோடு மட்டும் இல்லாமல் துரிவ பகுதிகளில் உள்ள பனிகட்டிகள் உருகி நம் நாடு இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை ,மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் அடுத்து வரக்கூடிய 100 ஆண்டுகளில் நீரில் மூழ்கும் என குறிப்பிடுகிறார்கள். இவற்றையெல்லாம் தடுக்கவேண்டும் என்றால் ஒருவரால் மட்டும் முடியாது உலக மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் நடக்கூடிய பேரழிவுகளை தடுக்கலாம்.

 
 
                                                                            நன்றி!