கோஹினூர் வைரத்தின் சாபம்
கோஹினூர் வைரம்(kohinoor diamond) என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க மாட்டார்கள் எனலாம், ஏனென்றால் உலகிலேயே விலை மதிக்க முடியாத பொருளாக தான் இந்த கோகினூர் வைரம் அழைக்கப்படுகிறது. முகலாய அரசர்கள் பஞ்சாபின் ராஜாக்கள் பிரிட்டிஷ் அரசு என பல நூற்றாண்டுகளாக பல பேரிடம் கைமாற்றபட்டு தற்போது இங்கிலாந்தில் உள்ள TOWER OF LONDON அருங்காட்சியகத்தில் வைக்கபட்டுள்ளது.. இந்த வைரம் பல ரகசியங்களையும் மர்மங்களையும் மட்டுமல்லாமல் பல கட்டுக் கதைகளைக் கொண்டது அது பற்றி இதுவரை பலரும் அறியாத உண்மைகளை தான் இன்றைய பதிவில் நாம் காண இருக்கிறோம்.
விலையுயர்ந்த வைரம்
கோஹினூர் வைரம் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரமாக கருதப்படுகிறது ஆனால் அது உண்மையில்லை அப்போது இந்த கோஹினூர் வைரம் கிட்டதட்ட 190 கேரட் அளவு மதிப்பு கொண்டது. அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசு கோஹினூர் வைரத்தை எடுத்த பொழுது அதைவிட விலையுயர்ந்த இரண்டு வைரங்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது . அதில் ஒன்றுதான் தாரியானூர் வைரம் மற்றோன்று ஓர்லோவ் என்ற வைரம் இவை இரண்டுமே கோஹினூர் வைரத்தை விட விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது. இந்த இரண்டு வைரங்களும் தற்போது இந்தியாவில் இல்லை.
வைரத்தின் தோற்றம்
கோஹினூர் வைரம் கண்டுபிடிப்பு
![]() ![]() |
source:pixabay |
கோஹினூர் வைரத்தின் சாபம்
இந்த வைரம் என்பது உலகிலேயே இந்தியாவில்தான் முதன் முதலில்கண்டுபிடிக்கப்படுகிறது இந்தயாவில் கோல்கொண்டா என்ற பகுதியில்தான்முதன்முதலில் வைரம் கண்டுபிடிக்கபட்டது என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த கோஹினூர் வைரத்தை வைத்திருந்த எந்த ஒரு ஆண் மகனும் அவனுடைய ராஜ்ஜியமும் செழிப்பாக இருந்ததாக சரித்திரமே இல்லை என குறிப்பிடப்படுகிறது. இந்த வைரத்தை கைப்பற்றிய பல அரசர்களும் தோல்வியை தழுவி தனது ராஜ்ஊயத்தை இழந்து தன்னுடைய வாழ்நாளின் இறுதி நாட்களை மிகவும் கொடூரமாக கழித்தனர் என வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள்.
அலாவுதின் கில்ஜியும் கோஹினூர் வைரமும்
![]() ![]() |
source:wikipedia |
பாபர் காலத்தில் வைரம்
கில்ஜி இறந்த பிறகு இந்த வைரமானது பாபருக்கு செல்கிறது ஆனால் பாபர் இந்த வைரத்தை தொடவில்லை என குறிப்பிடுகின்றனர் அதன் பின்னர் பாபர் மகன் ஹுமாயூன் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் இந்த ஒரு கோஹீனூர் வைரத்தின் மீது ஆசை கொண்டு அதை பயன்படுத்தியதால் பாபர் உருவாக்கிய மாபெரும் சாம்ராஜ்ஜியமும் அழிந்தது ஹுமாயுன் தன்னுடைய கடைசி காலத்தை ஒரு நாடோடியாக கழித்து இறந்துபோனார் என்பதும் குறிப்பிடதக்கது.
ஷாஜாகானும் கோஹினூர் வைரமும்
நம் அனைவருக்கும் தெரிந்த தாஜ்மஹாலை கட்டிய ஷாஜாகனும் இந்த கோஹினூர் வைரத்தால் ஈர்கப்பட்டார் இவருடைய காலத்தில் அந்த வைரம் இவரிடம்தான் இருந்தது இவருடைய இறுதி நாளும் மிக மோசமாகவே இருந்தது எனலாம் தன்னுடைய மனைவியை இழந்து வாடினார் அதுமட்டுமல்லாமல் தன்னுடைய மகன் ஔரங்கசீப்பாலேயே கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார் . இதன் பிறகு முகலாயர் ஆட்சி என்பது இந்தியாவிற்குள் முடிவுக்கு வந்தது எனலாம்.
நாதிர்ஷாவும் வைரமும்
அன்றைய காலகட்டத்தில் இந்தியாவை போர்தொடுத்த பெர்ஷியாவின் மன்னர் நாதிர்ஷா இந்த கோஹினூர் வைரத்தை கைபற்றினார் அவர் இந்த வைரத்துக்கு கோஹினூர் வைரம் என்ற பெயரையும் சூட்டினார். இந்த கோஹினூர் என்ற வார்த்தைக்கு மலையளவு ஒளி வீசும் ஒரு ரத்தினம் என்று பொருள்படும். இவரும் அந்த ஒரு சாபத்தால் தாக்கப்பட்டார் எனலாம் அதன்பிறகு இந்தியாவில் உள்ள சீக்கியர்களிடம் இந்த வைரம் கிடைக்கப்பெறுகிறது.
பிரிட்டிஷிடம் சென்ற வைரம்
அதன் பிறகு 1800-களில் இந்த வைரம் பிரிட்டிஷ் அரசிடம் செல்கிறது இந்த வைரத்தைதான் இங்கிலாந்து மாகராணி தனது கிரிடத்தில் வைத்துள்ளார். அன்று முதல் இன்றுவரை இந்த வைரத்தை இங்கிலாந்தை சேர்ந்த அரச குடும்பம்தான் சொந்தம் கொண்டாடுகிறது. இந்தியா பல முறை இந்த வைரத்தை கேட்டும் அவர்கள் இதை தர மறுத்து விட்டார்கள்.