எலான் மஸ்கின் டெஸ்லா ரோபோ tesla humanoid robot project in tamil

                                  மனித ரோபோக்களை உருவாக்கும் எலான் மஸ்க்

elon musk tesla humanid robot
 

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அவர்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் புதிய புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை உலக மக்களின் முன்னிலையில்  வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது மனிதர் போன்ற ரோபோக்களை உருவாக்க இருப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார் இந்த ரோபோக்கள் மனிதன் செய்யக்கூடியவேலைகளை செய்யும் என்றும் இதனை அடுத்த வருடம் டெஸ்லா அறிமுகபடுத்தபட உள்ளது எனவும் அவர் கூறியுள்ளர்

TESLA HUMANOID ROBOT

tesla humanoid robot
 
 
 இந்த டெஸ்லா ரோபோ ஆனது  ஐந்து அடி எட்டு இன்ச் உயரம் கொண்டது கிட்டதட்ட இதன் எடை 55 கிலோ இதனால் 20 கிலோ எடை கொண்ட பொருட்கள் வரை தூக்க முடியும் , 8 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இந்த ரோபோ கார் வடிவமைப்பு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என எலான்மஸ்க் கூறியுள்ளார் வருங்காலத்தில்  ஒரே பணிகளை திரும்ப திரும்ப  செய்யும் மனிதர்களுக்கு சலிப்பு  ஏற்படும் பட்சத்தில் அந்த பணிகளுக்கு  இந்த வகையான ரோபோக்களை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

ரோபோட் செயல்படும் விதம்

டெஸ்லா ரோபோ
 
இந்த ரோபோ ஆனது படத்தில் வரும் ரோபோக்கள் போல நாம் சொல்கின்ற செயலை செய்கிற ரோபோ எனலாம் எடுத்துகாட்டாக ஒரு பொருளை எடுத்து வா என்று இந்த ரோபோவிடம் கட்டளையிட்டால் இந்த ரோபோ அதனை செய்யும். இதற்குள் டெஸ்லா காரில் பயன்படுத்திய மென்பொருள் மற்றும் எக்ட்ரானிக்சையே பயன்படுத்தியுள்ளார்கள். இந்த ரோபோக்களை வைத்து தொழிலற்சாலைகளில் மனிதன் செய்ய முடியாத வேலைகளை கூட எளிதாக செய்யலாம் என எலான்மஸ்கு கூறுகிறார், நாம் கட்டளையிட்டால் அனைத்து வேலைகளை செய்யுமா என்றால் கிடையாது இதற்குள் அவர்கள் PROGRAM செய்த  அந்த செயல்களை மட்டுமே இந்த ரோபோக்கள் செய்யும்இப்படிதான் இந்த ரோபோக்கள் இந்த செயலெகளை செய்யும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு அவர்கள் பயன்படுத்தக்கூடிய சிப் ஆனது மிக அதிநவீன முறையில் உருவாக்கபடும் எனவும் கூறப்படுகிறது.
இதன் வழியாக நாம் அறிவது என்னவென்றால் வருங்காலத்தில் மனிதர்கள் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இந்த ரோபோக்கள் செய்யப்போகிறது என்பதே நிதர்சணமான உண்மை