top 10 sports in the world in tamil

                             top 10 sports

top 10 sports
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் உலகில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக மக்களால் பார்க்ககூடிய ஒரு 10 விளையாட்டுகளை  பற்றி காண்போம்.
 

1.FOOTBALL

football top 10 sports

கால்பந்து இந்த விளையாட்டு இரண்டு அணிகளுக்கிடையே பதினொரு வீரர்களுடன் விளையாடும் விளையாட்டு. கால்பந்து உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டாக கருதப்படுகிறது, உலகிலேயே அதிக ரசிகர்கள் கொண்ட விளையாட்டும் இதுதான்.ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து மிகவும் பிரபலம். 4 வருடங்களுக்கு ஒரு முறை கால்பந்திற்கு உலக கோப்பை நடத்தப்படும் இதில் பல்வேறு நாடுகள் கலந்துகொள்ளும்.

2.CRICKET

cricket top 10 sports

கிரிக்கெட் என்பது இரண்டு அணிகளுக்கிடையே பதினோரு வீரர்களைக் கொண்ட ஒரு மட்டை மற்றும் ஒரு பந்துடன் விளையாடும் விளையாட்டு. அவர்கள் விளையாடும் மைதானம்  22 மைல் நீளம் இருக்கும். உலகில் இராண்டாவதாக அதிக இரசிகர்கள் கொண்ட விளையாட்டும் இதுதான். கிரிக்கெட் ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலம்.கிரிக்கெட்டுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை நடத்தப்படும்.

3.BASKETBALL

basketball

கூடைப்பந்து உலகில் அதிகம் விளையாடிய மற்றும் பார்க்கப்பட்ட விளையாட்டுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது தலா ஐந்து வீரர்களுடன் இரண்டு அணிகளுக்கு இடையே விளையாடப்படுகிறது, அங்கு அவர்கள் 18 அங்குல விட்டம் மற்றும் 10 அடி உயரம் கொண்ட ஒரு வளையத்தின் மூலம் கூடை பந்தை விளையாடுகிறார்கள்.இந்த விளையாட்டில் சுவாரஸ்தியத்திற்கு பஞ்சமே இருக்காது.

4.HOCKEY

 

ஹாக்கி என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு, இது உலகெங்கிலும் விளையாடப்படும் மற்றொரு பிரபலமான விளையாட்டாகவும். இது இரண்டு அணிகளால் விளையாடப்படுகிறது, இந்த விளையாட்டின் மற்றொரு பதிப்புதான் ஐஸ் ஹாக்கி இதுவும் உலகில் மிக பிரபலமான விளையாட்டாக உள்ளது.

5.TENNIS

 

டேபிள் டென்னிஸ்,  இரண்டு நபர்களுக்கிடையில் அல்லது நான்கு வீரர்களிடையே விளையாடப்படுகிறது.  இந்த விளையாட்டின் முக்கிய குறிக்கோள் பந்துகளை இடைவிடாமல் அடிப்பது எனலாம்.

6.TABLE TENNIS

TABLE TENNIS

பார்ப்பதற்கு மிக எளிமையாக இருந்தாலும் உண்மையில் கடினமான விளையாட்டுதான் இந்த  டேபிள் டென்னிஸ் இது பிங் பாங் என்றும் அழைக்கப்படுகிறது, இது 2 வீரர்களுக்கிடையில் அல்லது நான்கு பேருக்கு இடையில் விளையாடப்படலாம்.

7.BASEBALL

BASEBALL

பேஸ்பால் ஒரு பேட் மற்றும் பந்துடன் விளையாடப்படுகிறது, இதில் இரண்டு அணிகளும் 9 வீரர்களும் இருப்பர். கிரிக்கெட்டைபோன்று சற்று மாற்பட்டதாக இருக்கும்.

8.AMERICAN FOOTBALL 

அமெரிக்க கால்பந்து பட்டியலில் இருக்கூடிய வித்தியாசமான விளையாட்டு, இது பொதுவாக அமெரிக்காவில் கால்பந்து என்றும் மற்ற நாடுகளில் கிரிடிரான் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விளையாட்டை தலா பதினொரு வீரர்களுடன் 2 அணிகள் விளையாடுகின்றன.இது பார்க்க கிட்டதட்ட ரக்பி விளையாட்டு போல் இருக்கும்.

9.RUGBY

rugby
 

ரக்பி ஸ்பெயின் மற்றும் பிரான்சில் மிகவும் பிரபலமான விளையாட்டு. 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட  இந்த விளையாட்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அதன் செல்வாக்கை நிறுவியது, பின்னர்  உலகம் முழுவதும் பரவியது. இந்த தரவரிசையில் இருக்கும் மிக கடினமான விளையாட்டும் இதுதான்.

10.GOLF

golf
 

கோல்ஃப் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று மட்டுமல்ல, ஆடம்பர விளையாட்டாகவும் அறியப்படுகிறது. அதே நேரத்தில்  இந்த விளையாட்டின் விதிகள் மற்றும் விதிமுறைகளை என்பது மிகவும் கடினம் எனலாம்.

 
                                                                        நன்றி!

REALTED: top 10 பணக்காரர்கள்