nano technology in tamil

நானோ தொழில்நுட்பம் என்றால் என்ன? what is nano technology in tamil

                          நானோ தொழில்நுட்பம்

nano technology
source:azonano

வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் எதிர்காலத்தில் உலகையே மாற்றக்கூடிய மிகப்பெரிய மற்றும் அறிய தொழில்நுட்பமான நானோ தொழில்துட்பம்(nano techmology) பற்றிதான் காணப்போகிறோம்.

நானோ தொழில்நுட்பம் தோற்றம்-nano technology explanation

நானோ தொழில்நுட்பம் என்ற பெயரில் இந்த நானோ என்ற பெயர் கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது என குறிப்பிடுகிறார்கள் இதில் நானோ என்பது மிகச்சிறியது என பொருள்தரும். எந்த அளவுக்கு சிறியது என்றால் நம் மனித முடியை விட பல ஆயிரம் மடங்கு சிறியது எனலாம். குறிப்பட்டு கூறவேண்டும் என்றால்  10^-9 என்ற மிகச்சிறிய அளவில் கண்டுபிடிக்கும் தொழில்நுடபம் இதனைதான் நானோ ஸ்கேல்(NANO SCALE)  எனவும் கூறுவர்.  இந்த     நானோ தொழில்நுட்பத்தை 1959 ரிச்சர்ட் பெஃய்மன் என்ற ஆய்வாளர் THE PLENTY OF ROOM AT THE BOTTOM என்ற ஆராய்ச்சி கட்டூரையை வெளியிடுகிறார். அந்த கட்டூரையில் அவர் முக்கியமாக குறிப்பிடுவது அணுவின் மாற்றங்களை எதிர்காலத்தை மாற்றலாம் என்பதுதான்.

நானோ தொழில்நுட்பம் என்றால் என்ன? (what is nano technology)

nano technology tamil

நானோ டெக்னாலஜி என்பது  மிகச்சிறிய அணுக்களில் அவற்றின் அமைப்பில் ஒரு சில மாற்றங்ளை ஏற்படுத்தி அவற்றை வேறொரு தனிமமாக மாற்றுவதோ அல்லது அந்த அணுக்களின் பண்புகளை மாற்றவதை தான் நானோ தொழில்நுட்பம் என்கிறார்கள். இவை அனைத்தும் மிகச்சசிறிய அளவிலேயே நாடேபெறும் நாம் மேலே பார்த்துபோல்  இவை நானோதுகள்களில்தான் நடைபெறுகின்றன(NANO PARTICLES) இந்த நானோ துகள்களின் அளவு வெறும் 1 நானோ மீட்டரில் இருந்து 100 நானோ மீட்டர் வரை இருக்கும்.

நானோ தொழில்நுட்பம் உருவாக்கபடும் விதம்(nano technology manufacturing process)

nano technology

இந்த நானோ தெழில்நுட்பம் இரண்டுவிதமாக உருவாக்கப்படுகிறது ஒன்று TOP TO BOTTOM APPROACH  மற்றொன்று BOTTOM UP APPROACH எனலாம் . 

 
இந்த TOP TO BOTTOM APPROACH  என்பது பெரிய அளவில் இருக்ககூடிய அணுதுகள்களை 100 நானோ மீட்டருக்கு குறைவாக உடைப்பது எனலாம். இதற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு ஒரு மிகப்பெரிய பாறையை செதுக்கி கற்சிலையாக மாற்றுவது.
இரண்டாவது BOTTOM UP APPROACH இந்த முறையில் மிகசிறியதாக இருக்கூடிய  துகள்களை ஒன்றுசேர்த்து ஒரே அணுக்களாக மாற்றுவது . இதற்கான எடுத்துக்காட்டு ஒரு கழிமண்ணில் ஒரு மண்சிலையை உருவாக்குவது எனலாம்.

கிராஃபின் மற்றும் கார்பன் நானோகுழாய்

graphene

இந்த நானோ தொழில்நுட்பத்தில் அனைவராலும் பேசப்பட்வது கிராஃபின் மற்றும் கார்பன் நானோ குழாய்கள் எனலாம் .

கிராஃபின்
graphene

 

இந்த கிராஃபினை அனைவரும் எதிர்கால உலகத்தை ஆளும் பொருள் என குறிப்பிடுகின்றனர் அதுமட்டுமின்றி இதுதான் உலகில் கண்டுபிடிக்கபட்ட மிக அறியவகை பொருள் என அழைக்கப்படுகிறது. இது இப்படி அழைக்கபட காரணம் இதுதான் உலகில் இருக்கூடிய மிகவும் மெலிதான மற்றும் சக்திவாய்ந்த மற்றும்  மீட்சிதன்மைகொண்டதாகவும் உள்ளது. இந்த கிராபின் எந்த அளவுக்கு மெலிதானது என்றால் ஒரு அணுத்துகள் எந்த அளவுக்கு இருக்குமோ அந்த அளவுக்கு மெலிதானது இந்த கிராபின் அதனுடைய நீளத்தில் 25% நீட்சியடையும் தன்மை கொண்டது , இவை எந்த அளவுக்கு உறிதியானது என்றால் வைரத்தை விடவும் உறியானது எனவும் கூறப்படுகிறது.
pencil
இந்த கிராபின் நாம் தினமும் பயன்படுத்தக்கூடிய பென்சிலில் கூட உள்ளது என குறிப்பிடுகிறார்கள். அதாவது பென்சிலின் நுனி பகுதியில் கார்பனால் ஆன கிராபைட் உள்ளது அதிலும் இந்த கிராபின்  இருக்கும்,வெறும்  0.03 கிராபைட்டில் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட கிராபின் அடுக்குகள் இருக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த கிராபைட்டில் இருந்து கிராபினை பிரித்தெடுக்க ஆய்வாளர்கள் தலையை பிய்த்து கொண்டிருந்த நேரத்தில் 2004-ஆம் ஆண்டில்  இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்ஸடர் பல்கலைகழகத்தில் பணியாற்றிய DR, KONSTATNTIN NOVOSELOV AND PROFFESSOR ANDRE GEIM ஆகிய இரண்டு பேராசிரியர்கள் மிகவும் எளிமையாக ஒரு விளக்கத்தை கொடுத்தனர் அது என்னவென்றால் ஒரு ஒட்டுதன்மை கொண்ட டேப்பில் பென்சிலை வைத்து கிறுக்கி அதை ஒரு பேப்பரில் ஒட்டி எடுத்தனர் இப்படி செய்த போது அந்த டேப்பில் உள்ள கார்பன் அணுக்கள் இரண்டாக பிரிந்தன  இப்படி பிரிந்த அணுக்கள் தான் கிராபின் இவற்றை கண்டறிந்ததற்காக இவர்களுக்கு 2010-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கபட்டது.
elephant
இந்த கிராபின் வலிமையானது என்பதற்கு ஆய்வாளர்கள் கூறிம் எடுத்துகாட்டு ஒரு யாணையை பெண்சில் மீத நிற்க வைத்து அதனை இந்த கிராபின் மீது வைத்தால் இந்த கிராபின் நீட்சியடையுமே தவிர உடையவோ கிழியவோ செய்யாது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவை மின்சாரத்தையும் மிக வேகமாகவும் மற்றும் திறன்படவும் கடத்துகிறது.

நானோதொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்

nano

இந்த நானோ தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்படுகிறது எனலாம். இந்த நானோ தொழில்நுட்பத்தை வைத்து மாசுக்களை தடுக்கலாம் உப்பு நீரை நண்ணீராக மாற்றலாம், மருத்துவத்தில் புற்றுநோய் இருதய நோய் மூளைகட்டிகள் போன்றவற்றை குணப்படுத்தலாம், விவசாயத்தில் நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உரங்களை பயன்படுத்தலாம் என்று கூறிகொண்டே போகலாம்.

நானோ எலக்ட்ரானிக்ஸ்

nano technology
இந்த நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போதைய மொபைல் பொன்களில் பயன்படுத்தும் சிலிக்கானால் ஆன டிரான்சிஸ்டர்களை விட சிறப்பாக செயல்படும் கிராபினை பயன்படுத்தலாம்.இந்த கிராபின்களை பயன்படுத்தி  தற்போதைய பேட்டரிகளைவிட 10% அதிக தன்மை கொண்ட பேட்டரிகளையும் வேகமாக ரீசார்ஜ் செய்யும் மொபைல்போன்களை உருவாக்கலாம். அதுமட்டுமல்லாமல் உலகிலேயே அதிவேகமாக செயல்படும் குவாண்டம் கம்பியூட்டர்களுக்குகூட இந்த கிராபினை பயன்பட்த்தலாம் என்று குறிப்பிடுகிறார்கள். அதுமட்டுமல்லமால்  டிரான்பிரன்ட் டிஸ்பிளேகள், வளையும் தன்மைகொண்ட டிஸ்பிளேகள் போன்றவற்றையும் இந்த நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கலாம்.

விண்வெளிக்கு லிஃப்டு 

space lift

இந்த நானோ தொழில்நுட்பத்தின் மூலம் விண்வெளிக்கே நம்மால் லிப்டு கட்ட முடியும் என கூறுகிறார்கள் . இந்த சிந்தனை முதன் முதலில்1979 -ஆம் ஆண்டு  THE FOUNTAIN OF PARADISE என்ற புத்தகத்தை எழுதிய SIR ARTHUR CLARKE அவர்களால் தோற்றுவிக்கபட்டது. இவர் அந்த புத்தகத்தில் மனித எடையை தாங்கும்  பேப்பரால் ஆன ஒரு பொருளை உருவாக்கமுடிந்தால் அதைவைத்து நம்மால் வின்வெளிக்கு லிப்ஃடு உருவாக்கமுடியும் என கூறினார். அன்றைய காலகட்டத்தில் அனைவரும் இது நியூட்டன் விதிக்கு அப்பாற்பட்டது என கூறினர், ஆனால் தற்போது இது சாத்தியமாக வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் . அதற்கு காரணம் இந்த கிராஃபின் எனலாம் ஒரு பேப்பரை போன்ற எடையின்மையும் இரும்பை போன்ற கடினமான தன்மையும் கொண்டிருப்பதால் இது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

கடல் நீரை நண்ணீராக்கும் நானோ தொழில்நுட்பம் 

desolation

இந்த நானோ தெழில்நுட்பத்தில் இருக்கூடிய கிராபின் மற்றும் கார்பேன் நானோ குழாய்கள் மூலம் கடல் நீரை கூட நண்ணீராக மாற்றமுடியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் இது கடல் நீரில் உள்ள உப்பை வடிகட்டி தூய நீராக தருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் 2018-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கிராபினை பயன்படுத்தி கடல் நீரை நண்ணீராக மாற்றினர் அதுமட்டுமின்றி கடல் நீர்மட்டுமல்லாமல் மாசடைந்த நீரை கூட மிக குறைந்த செலவில் சுத்திகரிக்கலாம் என கூறுகிறார்கள்.

IRON MAN உடை

iron man armor

இந்த நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அயன் மேன் சூட்டுகளை உருவாக்க முடியுமா என்றால் இல்லை ஆனால் இரும்பை போன்ற உடைகளை உருவாக்க முடியும் நாம் ஏற்கனவே அறிந்தது போல் கிராபின் மிகவும் சகுதிவாய்ந்ததாக இருப்பதால் அதை இராணுவத்தில் கூட பயன்படுத்தலாம்.

மருத்துவத்தில் நானோ தொழில்நுட்பம்

மருத்துவத்தில் நானோ ரோபோக்களை பயன்படுத்தி இருதய நோய் புற்றுநோய் மற்றும் மூளையில் ஏற்படக்கூடிய கட்டிகளை நீக்கலாம் என நிரூபித்துள்ளனர்.புற்றுநோய் உள்ள நபரின் மீது இந்த நானோ ரோபோக்களை உள்ளே செலுத்தி அவற்றை குணமடைய செய்கின்றன. இதில் குறிப்பிட தகுந்த விடயம் என்வென்றால் எலான் மஸ்கின் நியூராலிங்க் தொழில்நுட்பம் இந்த நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் செயல்படுகிறது.

மாசுக்களை கட்டுபடுத்தும் நானோ தொழில்நுட்பம்

pollution
இந்த நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காற்று மாசுக்களை மிக விரைவாக கட்டுபடுத்த முடியும் நானோ துகள்களை வைத்து தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வாயுவை அப்படியே பிரித்தெடுக்க முடியும் அதுமட்டுமல்லாமல் நானோ மெம்ப்ரேட்ஸை பயன்படுத்தி காற்றில் இருந்து காரபன் டை ஆக்ஸைடை தனியாக பிரித்தெடுக்க முடியும்.
 

நானோதொழில்நுட்பம் மூலம் ஆற்றல்  

 

நானோ தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி நம்மால் அதிகபடியான ஆற்றலை கூட உருவாக்கமுடியும் என கூறுகின்றனர் . காற்றாலைகளில் கார்பன் நானோ குழாய்களை பயன்படுத்தவதன் மூலம் சாதாரணமாக பெறும் ஆற்றலை விட அதிகப்படியான ஆற்றலை உருவாக்கமுடியும். தற்போது சோலார் தட்டுகள் மிக விலையுயர்ந்ததாகவும் அதிக எடை கொண்டதாகவும் உள்ளது இவற்றிற்கு பதிலாக கிராபின் பயன்படுத்துவதன் எடை மற்றும் செலவுகளை குறைக்க முடியும்.

 

நானோ தொழில்நுட்பத்தின் ஆபத்துகள்

 

என்னதான் இந்த நானோ தொழில்நுட்பம் மேலே குறிப்பிட்டதுபோல் அபாரமான வேலைகளை செய்தாலும் இவற்றை உருவாக்குவது என்பது கடினம் ஏனென்றால் 100 கிராபின் தயாரிக்கவே  10,000 ரூபாய்க்கு மேல் ஆகிறது அதுமட்டுமல்லாமல் இதை உருவாக்கும் இயந்திரங்கள் மிகவும் விலையுயர்ந்தவை . இதுமட்டுமல்லாமல் இந்த நானோ தொழில்நுட்பம் பற்றிய கருத்துகள்  கடந்த 20 ஆண்டுகளில் இருந்துதான் பேசப்படுவதால் இன்றுவரை எவருக்கும் இதுபற்றிய தெளிவான அறிவு என்பது கிடையாது அதாவது இந்த தொழில்நுட்பம் இன்னும் ஆய்வுக்கூடங்களில்தான் இருக்கிறது வெளிஉலகிற்கு வர பல காலங்கள் ஆகலாம் எனவும் குறிப்பிடுகிறார்கள். இது மக்கள் பயன்பாட்டிற்கு 2070-ஆண்டுக்கு மேல்தான் வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த நானோ தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சியில் ஈட்பட்ட ஆய்வாளர் எரிக் டெக்ஸ்லர் என்பவர் இது பேராபத்தைவிளைவிக்கும் என கூறுகிறார். தொழில்நுட்பம் என்பது எப்பொதும் இரண்டும் கலந்த கலவையாகதான் இருக்கும் இவற்றை மனிதர்களாகிய நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.

 
                                                                   நன்றி!