கேரளாவில் பொழிந்த இரத்த மழை blood rain in kerala in tamil

                      blood rain in kerala

blood rain

இந்த உலகில் நடக்கும்  பல விடயங்களுக்கு நம்மால் அறிவியல் பூர்வமாக விடை கூறினாலும் சில சமயங்களில் அதி நமக்கு ஒரு வித பூரிப்பை ஏற்படுத்தும் அப்படி நம்மை வாயைபிளவைக்கும் அளவிற்கு நடந்த ஒரு நிகழ்வுதான் இந்த இரத்த மழை இந்த மழை உண்மையில் இரத்தமா, இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

மழை எவ்வாறு பொழிகிறது

blood rain kerala in tamil

இரத்த மழையை பற்றி பார்ப்பதற்கு முன்னால் மழை எவ்வாறு பொழிகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். மழை எப்படி பொழியும் என கேட்டால் அதற்கான பதில் நம் பூமியில் இருக்கூடிய நீரானது சூரியனில் இருந்து வரக்கூடிய வெப்பத்தின் காரணமாக நீராவியாக மாறுகிறது இப்படி நீராவியாக மாறிய சிறு சிறு நீர்துளிககள் மேல் நோக்கி செல்லும்போது குளிர்விக்கப்பட்டு மேகமாக மாறுகிறது . அந்த மேத்திலும் நீர்துளிகள் இருக்கும் எப்போது தரைப்பகுதியில் வெப்பம் அடைகிறதோ அப்போது அந்த மேகத்தில் இருக்கும் நீர்துளிகள் மழையாக மீண்டும் பூமியை அடைகிறது.

இரத்த மழை

இரத்த மழை

இந்த இரத்த மழை என்பது இப்போதல்ல முந்தைய காலங்களில் பொழிந்ததாகவும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பொது அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் இதனை அபசகுணமாக நினைத்தனர். பிறகு அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் வளர வளர இதற்கான முக்கிய காரணத்தை கண்டறிந்தனர்.

blood rain kerala in tamil

இரத்தமழை என அழைக்கப்படும் இந்த மழை உண்மையில் இரத்தமல்ல சிகப்பு நிறத்தில் இருக்ககூடிய ஒரு மழை எனலாம். இவை உலகில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக லண்டன் , சஹார பாலைவன பகுதிகளில்  பொழிந்துள்ளன. அதேபோல் கேரளாவில் 2001-ஆம் ஆண்டு இடுக்கி மாவட்டத்தில்  இந்த சிகப்பு மழை பொழிந்தது.

இரத்த மழைக்கு காரணம் ஏலியனா

இந்த மழையை பற்றி ஆய்வு செய்த  காட்ஃபிரி லூயிஸ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் இந்த இரத்த மழைக்கு முக்கிய காரணம் விண்வெளியில் இருந்து வந்த ஏதோ ஒரு விண்கல்லில் இருக்கூடிய ஒரு நுண்ணுயிர்களால்தான் இந்த இரத்த மழை பொழிந்தது என கூறியுள்ளனர்

ஆனால் இதனை அனைவரும் மறுத்துவிட்டனர் இந்த மழைக்கான உண்மையான காரணம் டிரென்டே போலியா ஆல்கே என்ற  மரங்களில் இருக்கூடிய ஒரு நுண்ணுயிரி இதனை சிகப்பு நிற ஆல்காக்கள் என கூட கூறலாம் ,இவை காற்றில் கலந்து மழையாக பொழிந்ததால் மழையானது சிகப்பு நிறத்தில் காணப்பட்டதே தவிர இதற்கு பின்னால் ஏலியன்களோ மனிதர்களின் சதியோ இல்லை .
                                                                   நன்றி!