ஈமு போர் பறவையிடம் மனிதன் தோற்ற கதை the great emu war in tamil

                          THE GREAT EMU WAR

the great emu war
இதுவரை மனித வரலாற்றில் நாம் நிறைய போர்களை பற்றி கேட்டிருப்போம் ஆனால் இப்படிபட்ட போரை பற்றி நீங்கள் கேட்டிருக்க வாய்பில்லை. அப்படி என்ன போர் என்று கேட்டால் மனிதனுக்கும் பறவைக்கும் இடையே நடந்த போர் இதை கேட்டவுடனே உங்களுக்கு சற்று வியப்பாக இருக்கும் ஆம் இது உண்மைதான் இதில் குறிப்பிடதகுந்த விஷயம் என்னவென்றால் ,அந்த பறவையிடம் போரிட முடியாமல் மனிதன் தோற்றதுதான்,இதைபற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் காண்போம்.
 

ஈமு போர்-emu war

source:pixabay

இப்படிபட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த போரானது ஆஸ்திரேலியாவில்தான் நடைபெற்றது .1932 இல் ஆஸ்திரேலியா இராணுவமானது ஈமு என்று சொல்லபடும் நெருப்பு கோழியை ஒத்த பறக்காத ஒரு மிகப்பெரிய பறவையுடன் போருக்குச் சென்றது. இந்த ஈமு பறவை ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவை எனலாம் .இவை பெரும்பாலும் கூட்டத்துடன் வந்து விளைநிலங்களை வேட்டையாடும் . ஆஸ்திரேலியாவின் கேம்பியன் மாவட்டத்தில் இந்த ஈமு பறவை ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது, கிட்டதட்ட 20 ஆயிரம் விவசாயிகள் இந்த பெரிய பறவைகளால் விவசாய பயிர்களை இழந்தனர். அந்த நாட்களில் ஆஸ்திரேலியா விவசாயத்தை பெரிதும் நம்பியிருந்தது. எனவே ஈமுவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைக்கு அரசாங்கம் உத்தரவிட்டது.

பத்தாயிரம் சுற்று வெடிமருந்துகளுடன் பறவைகளை துப்பாக்கியால் சுட ஒரு சிறிய இராணுவம் அனுப்பப்பட்டது. இருவருக்கும் இடையே போர் தொடங்கியது. இராணுவ வீரர்கள் இந்த ஈமுக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர், ஆனால் அதில் ஒரு ஈமு பறவையை கூட அவர்களால் கொல்ல முடியவில்லை வெடிமருந்துகள் மிடிந்த பிறகு, 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈமுக்கள் இருந்தன, எனவே இவற்றை அழிக்க அதிக செலவு ஆகும் என்பதால் அதனை அப்படியே ஆஸ்திரேலியா அரசு கைவிட முடிவு செய்தது. இதுவரை வரலாற்றில் மனிதனுக்கும் பறவைக்கும் இடையே போர் நடந்ததும் இந்த நிகழ்வுதான் அதில் பறவைகளிடம் மனிதன் தோற்கடிக்கபட்டதும் இந்த ஒரு நிகழ்வில் மட்டும்தான்.இந்த ஒரு பதிவு உங்களை வியப்பில் ஆழ்த்தியுருக்கும் என நம்புகிறேன்.