லாச்னஸ் மான்ஸ்டர் பற்றிய தகவல்கள் lochness monster mystery in tamil

 LOCHNESS MONSTER

lochness monster in tamil
source:BBC.com

இந்த லாச்னஸ் மான்ஸ்டர் என்பது பல நூறு ஆண்டுகளாகவே மக்களால் நம்பபடும் ஒரு உயிரினம் எனலாம் உண்மையில் இந்த உயிரினம் உள்ளதா அல்லது இது ஒரு கட்டுகதையா என்பதை இந்த பதிவில் காண்போம்.

crypto zoological creatures- lochness monster

இந்த crypto zoological creatures என்பது பழங்காலத்தில் வாழ்ந்ததாக இதிகாசங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடபட்டிருக்கும் ஆனால் அந்த வகை உயிரினங்கள் வாழ்ந்ததற்கான எந்த வித ஆதாரங்களும் இருக்காது. எடுத்துகாட்டாக டிராகன் என்ற உயிரினம் வாழ்ந்ததாக சீனர்கள் நம்புகின்றனர் அதுபோல நம் தமிழ் பண்பாட்டில் இருக்கும் யாழி என்ற மிருகமும் இவ்வுலகில் வாழ்ந்ததாக குறிப்பிடுகிறார்கள் ஆனால் இவை வாழ்ந்ததற்கான எந்த சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை . இவைகளை போலவே இந்த லாச்னஸ் மான்ஸ்டரும் வாழ்ந்ததாக குறிப்பிடப்படுகிறது.

லாச்னஸ் மான்ஸ்டர் கண்டுபிடிப்பு

lochness

இந்த லாச்னஸ் மான்ஸ்டர் என்பது  முதன் முதலில் கி.பி 560 மக்களால் அடையாளம் காணப்பட்டதாக குறிப்பிடுகின்றனர். இந்த lochness monster ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஏரியில் இருந்ததாகவும் அந்த உயிரினம் அங்குள்ள மீனவர்களை காத்து வந்ததாகவும் செயின் ஒலம்பா என்ற நாடோடி

அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த உயிரினம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைய காரணம் மேலே நீங்கள் காணும் இந்த புகைப்படம் தான் இது 1934-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டேய்லி மெயில் என்ற பத்தரிக்கை நிறுவனத்தில் பனியாற்றும் ராபர்ட் வில்சன் என்ற நபரால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் அப்போது செய்திதாளின் முதல் பக்கத்திலும் இடம்பெற்றது. இந்த ஒரு புகைப்படம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது அன்றுவரை கட்டுகதையாக இருந்த லோச்னஸ் மான்ஸ்டர் உண்மை என மக்கள் நம்ப ஆரம்பித்தனர்.

லாச்னஸ் பெயர்காரணம்

lochness
source:pixabay

இந்த லாச்னஸ் மான்ஸ்டரின் பெயரில் லாச்- என்பது ஏரி என்று ஸ்காட்லாந்து மொழியில் பொருள் நெஸ் என்பது அந்த ஒரு ரியின் பெயர் எனவே இந்த லாச்னஸ் என்ற வார்த்தைக்கு ஒரு ஏரி என்றுதான் அர்த்தம் சொல்லபோனால் இந்த மான்ஸ்டருக்கு பெயரே வைக்கப்படவில்லை எனலாம்.

லாச்னஸ் ஒரு டைனோசரா

1933-ஆம் ஆண்டு ஃபைசர் என்ற நபர் அந்த லாச்னஸ் மான்ஸ்டரை முழுமையாக பார்த்ததாக குறிப்பிட்டார் அவர் பார்த்ததை வைத்து படமாக வரைந்ததில் அந்த ஒரு மான்ஸ்டரானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் உலகில் வாழ்ந்த  டைனோசர்களின் இனமான பிலசியோசாரஸ் என்ற ஒரு வகை இனம் போல் இருந்தது. இந்த டைனோசர்தான் இந்த ஏரியில் இன்னும் உயிருடன் இருப்பதாக பலரும் நம்ப ஆரம்பித்தனர். ஆனால் இந்த உயிரினம் ஆனது 66-மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

லாச்னஸ் தேடுதல்வேட்டை

1930-ஆம் ஆண்டு லாச்னஸ் பற்றிய வெளிவந்த டெய்லி மெயில் என்ற பத்திரிக்கை நிறுவனத்தின் செய்தி உண்மையா என பலரும் ஆய்வு செய்தனர் கிட்டதட்ட 30-ஆண்டுகளுக்கு பிறகு 1970-ல் அந்த பத்திரிக்கையில் வெளிவந்த புகைப்படம் மற்றும் செய்தி பொய்யானது என கண்டறிந்தனர். அதன் பிறகு 2018-ஆம் ஆண்டு அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி  அந்த ஏரியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து  நீரை எடுத்து அதனை சோதனை செய்கின்றனர். அந்த நீரில் உள்ள டி என் ஏ வைத்து உயிரினங்களை கண்டறியலாம் . அப்படி டி என் ஏக்களை ஆய்வு செய்ததில் வித்தியாசமாக எந்த ஒரு உயிரினத்தின் டி என் ஏ வும் இல்லை என நியூசிலாந்து நாட்டில் உள்ள பல்கலைகழகம் தனது அறிக்கையை வெளியிட்டது.

லாச்னஸ் என்பது ஒரு விலாங்கு மீனா? 

ஏரியில் எடுக்கபட்ட டி என் ஏ மாதிரியில் அதிகமாக காணப்பட்ட டி என் ஏ இந்த விலாங்கு மீனின் டி என் ஏ என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே அந்த ஏரியில் நிறைய விலாங்கு மீன் இருப்பது நமக்கு புரிகிறது அப்படி மிகப்பெரிய அளவில் இருக்கூடிய ஒரு விலாங்கு மீனை கூட மக்கள் இந்த லாச்னஸ் மான்ஸ்டர் என்று நம்பலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இதன் மூலமாகவே இந்த லாச்னஸ் மான்ஸ்டர் என்பது ஒரு கட்டுகதை என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இவை ஏன் திரும்ப திரும்ப பேசப்பட காரணம் இவற்றை பல பேர் வியாப்பார யுக்தியாக பயன்படுத்துகின்றனர் அதன் மூலம் அவர்கள் லாபம் காண்கின்றனர்.

                                                                   நன்றி!