உலகில் நடந்த ஐந்து மர்மமான விஷயங்கள் top 5 mysterious things in the world in tamil

     உலகில் நடந்த பத்து மர்மமான விஷயங்கள்

mystery events
souce:freepik

என்னதான் இந்த உலகம் 21 நூற்றாண்டில் இருந்தாலும் இன்றுவரை அறிவியலால் கூட விளக்கமுடியாத பதில் தர இயலாத விஷயங்கள்  நடந்து கொண்டுதான் இருக்கின்றன, அப்படி இந்த உலகில் நடந்த 5 மர்மமான விஷயங்கள்(top 5 mysterious things) பற்றி இந்த பதிவில் காண்போம்.

1.வாய்நிச் கையெழுத்து பிரிதி 


இதுவரை இருக்கூடிய கூடிய புத்தகங்களில் மிகவும் மர்மம் நிறைந்த புத்தகம் எதுவென்றால் இந்த வாய்நிச் கையெழுத்து பிரிதி தான் இதற்கான காரணம் காரணம் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்துகள் மற்றும் வரைபடங்கள் நம் பூமியில் காணாத மிகவும் வித்தியாசமானதாக இருந்துள்ளது. அதனால் இன்றுவரை இந்த புத்தகத்தில் என்ன குறிப்பிட்டுள்ளார்கள் என்பது தெளிவாக எவருக்கும் தெரியாது. இந்த புத்தகம் தற்போது போலாந்தில் உள்ள புத்தக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது இதில் குறிப்பிடபட்டுள்ள படங்கள் மற்றும் தாவரங்கள் ஏலியன்களாக இருக்கலாம் என்றும் மக்களால் நம்பபட்டு வருகிறது.

2.கொலையாளி ஜாக் தி ரிப்பர் 

 
 

உலகையே உலுக்கிய  கொலைகளை செய்து இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத ஒரு கொலையாளிதான் இந்த ஜாக் தி , 1888-ல் லண்டன் மாநாகரத்தின் பயங்கரமான சீரியல் கொலைகாரனாக கருதபட்டவன்தான் இந்த ஜாக் தி ரிப்பர். இவன் 1888 முதல் 1891 வரை கிட்டதட்ட  வருட காலத்தில் தொடர்ச்சியாக 11 பெண்களை கொலைசெய்துள்ளான் இதில் குறிப்பிடதகுந்த விஷயம் என்னவென்றால் இவன் கொலை செய்த அனைத்து பெண்களும் விபச்சாரிகள். இன்றுவரை இவன் யார் எதற்காக இந்த கொலைகளை செய்தான் என்பது மர்மமான விஷயமாகவே கருதப்படுகிறது.

3. மேரி செலஸ்டல் பேய் கப்பல்

 

இந்த கப்பலானது ஒரு அமெரிக்க கப்பல் கிட்டதட்ட 150 ஆண்டுகளுக்கு முன் நிலக்கரியை ஏற்றி சென்றது அதன் பிறகு இந்த கப்பலில் சென்ற எந்த ஊழியர்களையும் காணவில்லை ஆனால் கப்பலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை இன்றுவரை அந்த கப்பலில் பயணம் செய்த ஊழியர்கள் என்ன ஆனார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை கப்பலை ஆய்வு செய்தபோது கப்பலில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை பிறகு ஏன் இவர்கள் கப்பலை விட்டு சென்றார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

4.1000 வருடங்களிக்கு முன்பே விண்வெளி உடை

 
 
கி.பி 1102 இல் எபிஸ்கோப் டி சலாமாங்காவால் கட்டப்பட்ட அற்புதமான ஐரோனிமஸ் கதீட்ரலுக்குள், நாசா விண்வெளி வீரர் மற்றும்  புராண விலங்குகள் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. இது எப்படி சாத்தியமானது  என்பது ஒரு புதிராகவே உள்ளது உண்மையில் இது ஆயிரம் வருடத்திற்கு முன்பு  உருவாக்கபட்டதா அல்லது கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்யும்பொழுது இப்படிபட்ட சிலையை உருவாக்கினார்களா என்பதற்கும் தெளிவான ஆதாரம் இல்லை.

5.விமானம் MH 370

 
 

மலேசியாவில் இருந்து சீனாவை நோக்கி MH 370 என்ற விமானம் 239 பயணிகளை ஏற்றிகொண்டு வானில் பறந்தது ,பறந்த ஒரு சில நிமிடங்களில் நடு வானில் அந்த விமானம் மறைந்தது இதுவரை அந்த விமானத்திற்கு என்ன ஆனது அந்த விமானத்திற்குள் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.