இதுவரை கேள்வியே படாத! விசித்திரமான உண்மைகள் top 5 strange things in the world in tamil

                  விசித்தரமான உண்மைகள்-strange things

strange things

 

 பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்க வேண்டிய சூழலுக்கு பழக்கப்பட்ட நாம்  இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் இருக்கக்கூடிய சுவாரசியமான பல விஷயங்களை கவனிக்கதவறவிட்டோம்  அப்படி கவனிக்க தவறிய  சில வித்தியாசமான உண்மைகள் பற்றி இந்த பதிவி்ல் காண்போம் .

முயல் தீவு

ஜப்பானில் முயல்களால் நிரம்பிய ஒரு தீவு உள்ளது. இந்த தீவு இரண்டாம் உலகப் போரின்போது சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்கள், விஷ வாயு போன்றவற்றை சோதிக்க ஒரு இராணுவத் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.  அதன்பிறகு விஷத்தின் விளைவுகளை சோதிக்க, இராணுவம் முயல்களைப் பயன்படுத்தியது என்று கூறப்படுகிறது, இதன் விளைவாக, இன்று நூற்றுக்கணக்கான முயல்கள் தீவு முழுவதும் சுற்றித் திரிந்து பெரிய  சுற்றுலாத் தலமாக உள்ளது.

கழிவறை பேருந்து

poop bus

ஆம், நீங்கள் படித்தது சரியே , மனித மலம் மற்றும் உணவு கழிவுகளால் முழுமையாக இயங்கும்  ஒரு இயற்கை எரிவாயு பேருந்து உள்ளது. 40 இருக்கைகள் கொண்ட பயோ-பஸ் 2014 இல் தென்மேற்கு இங்கிலாந்தில் மக்கள்  சேவைக்காக அறிமுகபடுத்தபட்டது . இது மனித மலம், கழிவு நீர் மற்றும் உணவு கழிவுகளை சுத்திகரிப்பதன் மூலம் அதற்கு தேவையான எரிவாயுவை  உருவாக்குகிறது இது முழுவதுமாக  பயோமீதனால் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இன்று ஐரோப்பாவின் மற்ற பகுதிகளில் இதே போன்ற பேருந்துகள் உள்ளன; அதனால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உலகின் விசித்திரமான விஷயங்களில் இதுவும் ஒன்று.

பன்றிகள் கடற்கரை

piggy beach

முயல் தீவு மிகவும் வித்தியாசமானது என்று நீங்கள் நினைத்திருந்தால், அதைவிட விசித்திரமானதுதான் இந்த பன்றிகள் கடற்கரை அதாவது காட்டுப் பன்றிகளின் காலனியால் வசிக்கும் ஒரு தீவு! எனலாம், பன்றிகள் கடற்கரை என்று அழைக்கப்படும் இந்த மக்கள் வசிக்காத தீவு பஹாமாஸ் மாவட்டத்தின் எக்ஸுமாவில் அமைந்துள்ளது.   இதில்  வேடிக்கை என்னவென்றால் இந்த பன்றிகள் கடலில் நீந்தி உல்லாச குளியல் போடுவதை  விரும்புகின்றன; இவை  எப்படி இங்கு வந்தார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை என்றாலும், இந்த பன்றிகள் காரணமாகவே  இந்த தீவு  ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கிறது  என்பது மட்டும்  உண்மை.

5-வயதில் அம்மாவான சிறுமி

 

1933 இல் பிறந்த லீனா மதீனா என்ற 5-வயது சிறுமி , மருத்துவ வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்ட மிகவும் இளைய தாய் ஆவார்: அவர் 5 வயதில், 7 மாதங்கள் மற்றும் 21 நாட்களில் ஒரு குழந்தையை  பெற்றெடுத்தார். சிறுமிக்கு 2 வயதாகும்போது மாதவிடாய் தொடங்கியது என கூறப்படுகிறது; அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் இந்த குழந்தையை ஆய்வுக்கு உட்படுத்த  ஒப்புதல் கேட்டிருந்தது ஆனால்  பெரு அரசாங்கம் லீனா மற்றும் அவரது மகனை ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி இல்லை என  ஆணை பிறப்பித்தது, அதற்காக இந்த வழக்கு கைவிடப்பட்டது, இன்றுவரை  தந்தையின் அடையாளம் தெரியவில்லை. இந்த 5 வயது சிறுமிதான்  உலகின் இளைய தாயானாள், அதனால்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உலகின் 10 விசித்திரமான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

உலகின் மிகப்பெரிய மார்பு கொண்ட பெண்

world biggest boob women

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா இந்த உலகில் இருக்கூடிய பெண்களில் 80 %-க்கும் மேற்பட்டோர் தவரான சைசில் பிராவை அணிந்து வருகின்றனர்.உங்கள் மார்பகத்துக்கு  ஏற்றவாறு ஒரு ப்ராவைக் கண்டுபிடிக்க நீங்கள் போராடினால், ஜார்ஜியாவின் அட்லாண்டாவைச் சேர்ந்த அன்னி ஹாக்கின்ஸ்-டர்னரைப் பற்றி சிந்தியுங்கள்.

ஹாக்கின்ஸ்-டர்னர், 57,  இவரின் உள்ளாடை அளவு ஒரு மிகப்பெரிய 102ZZZ என கூறுகிறார் , இவருக்கு கடினமாக இருப்பது பிரா ஷாப்பிங் மட்டுமல்ல.
அவருடைய மார்பகங்கள் ஒவ்வொன்றும் 65 பவுண்டுகள் எடை கொண்டவை அதாவது ஒரு மார்பகத்தின் எடை மட்டும் 30 கிலோ இருக்கும் , இன்னும் மார்பகங்கள் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன.
இதில் குறிப்பிட தகுந்த விடயம் என்னவென்றால் இவரின் மார்பகம் இயற்கையாகவே பெரிதானது இவர் எந்த வித செயற்கை முறைகளிலும் ஈடுபடவில்லை இதனால் இவ் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.