உலகின் விடைதெரியா 5 மர்மங்கள் top 5 unsolved mysteries in tamil

unsolved mysteries in the world
source:பறவைகளின் மர்ம இறப்பு
mysteries of bird death
source:pixabay

2010 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று, ஆர்கன்சாஸின் பீபே என்ற சிறிய நகரத்தில், 5,000 கருமை நிற சிட்டுகுருவிகள் கட்டிடங்கள், தொலைபேசி கம்பங்கள் மற்றும் மரங்களில் மோதி, உடனடியாக இறந்து போகின. அது நடந்தபோது அனைஙருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது இதற்கு என்ன காரணமென்று கண்டறியவே முடியவில்லை.

ஆனால் இது குறித்து ஒரு சிறு விளக்கம் கூறப்பட்டருந்தது . அதுஎன்னவென்றால் ஆர்கன்சாஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, புத்தாண்டு அன்று வெடிக்கபட்ட பட்டாசுகள் பறவைகளை பயமுறுத்தியது, இதனால் அவை இறந்திருக்கலாம் என்று கூறினர்.

அடுத்த ஆண்டு பிபியில் இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது அப்பொழுதும் நிறைய பறவைகள் இறந்துபோயின ,ஆனால் 2011 -ஆம் ஆண்டு பிபியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடிக்கபடவே இல்லை இருந்தாலும் பறவைகள் இறந்தன. இது அனைவரையும் சற்று குழப்பமடைய செய்த்து.

இதில் ஒரு சிலர் இந்த பறவைகள் இப்படி விழ காரணம் உலகம் அழிவை நோக்கி செல்கிறது என பயமுறித்தினர், மற்ற சிலரோ இது இயற்கையின் மாய விளையாட்டு இதை நாம்மால் புரிந்து கொள்ள இயலாது என பிதற்றினர். ஆனால் இன்றுவரை இந்த பறவைகள் இறந்ததற்கான அறிவியல் பூர்வமான காரணங்கள் கண்டறியமுடியாதது இந்த ஒரு நிகழ்வை விடை தெரியாத மர்மமாகவே வைத்துள்ளது.

மர்மம் நிறைந்த ஏலியன் சிக்னல்

1977-ஆம் ஆண்டு வானியலாளர் ஜெர்ரி எஹ்மான் ம ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் ரேடியோ சிக்னல் டிடெக்டரைப் பயன்படுத்தி சகிட்டேரியஸ்(SAGITTERIOUS) நட்சத்திர மண்டலத்தைச் சுற்றி நட்சத்திரங்களை ஸ்கேன் செய்யும்பொழுது அவர் 72 வினாடி கொண்ட ஒரு ரேடியோ அதிர்வெண்ணை எடுத்தார்,

அது விண்வெளியில் இருந்து வருவதை அவர் கண்டறிந்தார் .அதன் பிறகு இந்த ஒரு சம்பவம் வேற்று கிரகவாசிகள் இதனை அனுப்பியிருக்கலாம் என உலகம் முழுவதும் பரவியது

சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி இந்த ஒரு சிக்னல் நமது கிரகத்திற்கு அருகில் உள்ள வால்மீன்கள் எலுப்பிய சிக்னல் மட்டுமே ஆயவாளர்கள் கூறுகிறார்கள் . அது “வேற்றுகிரகவாசிகள் இல்லை” என கூறுகின்றனர். உண்மையில் அந்த ஒரு மர்ம சிக்னல் யார் அனுப்பியிருக்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்.

மர்ம பறக்கும்தட்டு

மார்ச் 13, 1997 அன்று அரிசோனா மீது வானத்தில் வித்தியாசமான ஒன்றை மக்கள் பார்த்தார்கள்? இது ரகசிய இராணுவ விண்கலமா? இயற்கையான நிகழ்வா? அல்லது ஒருவேளை மற்றொரு விண்மீன் மண்டலத்தில் இருந்து வந்த அன்னிய பார்வையாளர்களா அதாவது ஏலியன்களா? அது எப்படியிருந்தாலும், ஆயிரக்கணக்கான அரிசோனா மக்கள் வானத்தில் அந்த அசாதாரண மின்னும் விளக்குகளை பார்த்தனர், இதுபார்பதற்கு ஒரு V போல தோற்றமளிக்கிறது, அது மெதுவாக மேல்நோக்கி நகர்ந்தது சென்று எந்த சத்தமும் இல்லாமல் மறைந்துவிட்டது, இது பல கால்பந்து மைதானங்களின் அளவை ஒத்திருக்கும் என மக்கள் குறிப்பிடுகின்றனர். இன்றுவரை இது என்ன என்பது ஒரு விடைதெரியாத மர்மமாகவே உள்ளது.

மர்ம ஒலி கேக்கும் நகரம்

வட-மத்திய நியூ மெக்ஸிகோவில் உள்ள சிறிய நகரமான தாவோஸில், மிகவும் மர்மமான முறையில் ஒலி ஒன்று கேட்டுகொண்டே இருக்கிறது , குறைந்தபட்சம் 1990 களின் முற்பகுதியில் இருந்தே எரிச்சலூட்டும் மற்றும் மர்மமான ஒலி கேட்கிறது என கூறுகிறார்கள்.

நகரவாசிகள் 1993 இல் அங்குள்ள அரசிடம் புகார் செய்தனர், மேலும் உண்மையில் அங்கு என்னதான் நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.அந்த ஒலி மூலத்தைக் கண்டுபிடிப்பதற்கான பல முயற்சிகள் நடந்தும் ஒரு தடயமும் கிடைக்கவில்லை. இது உயர் அழுத்த வாயு பாதையா? தொழில்துறை உபகரணங்களா? குறைந்த அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சா? அல்லது இரகசியமான இராணுவப் பரிசோதனைகள் அரசாங்கத்திற்கு தெரியாதா? இதுவரை இந்த ஒரு சத்தம் மர்மமாகவே நீடிக்கிறது.

நிலாவில் கால்பதித்தது உண்மையா

moon landing

நீல் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 20, 1969 இல் தனது “மனிதகுலத்திற்கான மிகப்பெரிய தடத்தை நிலாவில் பதித்தார்” ​​அவர் உண்மையில் சந்திரனின் மேற்பரப்பில் நடந்து சென்றார் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இது ஒரு பொய்செயல் என்று கூறும் பலர் இருக்கிறார்கள், அவர்கள் நிலவில் இறங்கவில்லை, உண்மை என்னவென்றால், முழு விஷயமும் ஒரு ஹாலிவுட் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது என கூறப்படுகிறது,

மர்மமான நிழல்களில் ஏன் “சி” என்று பெயரிடப்பட்ட ஒரு பாறை உள்ளது (திரைப்படத் தொகுப்புகளில் மட்டதான் முட்டுகள் பெயரிடப்பட்டிருக்கும்) அமெரிக்கக் கொடியானது நிலவில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் சக அப்பல்லோ 11 விமானிகளால் எவ்வாறு வைக்கப்பட்டது என்பது வரை பல கேள்விகள் உள்ளன. ஆனால் நாசாவானது நிச்சயமாக, நிலவில் இறங்கும் புரளியை தொடர்ந்து மறுத்து வருகிறது,இருப்பினும் ஒரு சில கேள்விகளுக்கு இன்றுவரை நாசா சரியாக பதிலளிக்காமல் இருப்பது சற்று நம்மை சிந்திக்க வைக்கிறது.

நன்றி!