கடந்த ஒரு சில வருடங்களாக சென்னையில் சரியான அளவு மழை பெய்த நிலையில் தற்போது இந்த 2021 நவம்பர் மாதத்தில் பெய்த கனமழை சென்னையை(chennai rains) சற்று பதம்பார்த்துள்ளது எனலாம் பெரும்பாலான கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை வழங்கபட்ட நிலையில் 2015-போல் வெள்ளம் வந்துவிடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர் அதைபற்றிதான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.
மழையின் அளவு
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நுங்கம்பாக்கத்தில் 21.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது, இது 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழையாகும்.
அக்டோபர் 1 முதல் தமிழகத்தில் 43% உபரி மழையும், சென்னையில் 26% அதிக மழையும் பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட மிக அதிகம்.
ஏரிகளின் நீர் இருப்பு
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, சென்னையைச் சுற்றியுள்ள பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீரை மாநில அரசு படிப்படியாக வெளியேற்றத் தொடங்கியது. செம்பரம்பாக்கத்திலிருந்து திறக்கப்பட்ட 500 கனஅடியில் இருந்து மாலையில் 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது இன்று காலை இது சற்று குறைந்து 700 கன அடியாக உள்ளது.
கனமழை தொடரும்
அடுத்த 48 மணி நேரத்தில் நகரில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் . அறிவித்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வரவிருக்கும் அதிகனமழை
வட கடலோர தமிழகம், வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் ஒரு காற்று சுழற்சி உள்ளது இது நவம்பர் 9 ஆம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது, மேலும் மாநிலத்தில் குறைந்தது அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கணித்துள்ளது. .
இதன் தாக்கத்தால், சென்னை, விழுப்புரம், கடலூர் போன்ற வடமாநிலங்களிலும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, காரைக்கால் தவிர மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களின் டெல்டா பகுதிகளிலும் நவம்பர் 8ஆம் தேதிகன முதல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெள்ளம் வருமா
தற்போது சென்னையின் பல்வேறு பகுதியில் நீரில் மூழ்கி சில சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லகூடிய இரயில்கள் தாமதமாகவும் தடம் மாற்றபட்டும் செல்கின்றன, நகரின் ஒருசில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யபெபட்டுள்ளது . ஆய்வு மையம் கூறிய கருத்தின்படி மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடித்தால் நிலைமை மோசமாக வாயப்புள்ளது எனவே நீங்கள் சென்னை வாசி என்றால் உங்களின் இடத்திற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைக்கு ஏற்ப தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்களுக்கு வலுசேர்க்கும்.
source:thehindu
sources:Imd