tsunami

சுனாமி எப்படி உருவாகிறது how tsunamis formed in tamil

tsunami
source:pixabay

சமீபத்திய ஆண்டுகளில், ஊடகங்களில் சுனாமிகள்(tsunami) பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்க வாய்ப்புள்ளுது, குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் 2004 இல் வந்த சுனாமி, மேலும் சமீபத்தில் ஜப்பானில், 2011 இல், புகுஷிமா அணுமின் நிலையத்தில் விபத்தை ஏற்படுத்திய சுனாமி போன்றவற்றை கூறலாம். பொதுவாக, கடலுக்கடியில் பூகம்பங்களால் சுனாமிகள் ஏற்படுகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் எப்படி? இவை கடற்கரையை நெருங்கும்போது மட்டுமே ஆபத்தானவையாக உள்ளது எது அலைகளை மிகவும் அழிவுகரமானதாக ஆக்குகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் காண்போம்.

சுனாமிகள்(tsunami) எவ்வாறு உருவாகின்றன

tsunami


சுனாமி என்பது நீருக்கடியில் நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு அல்லது விண்கல் வீழ்ச்சி போன்றவற்றால் கடலில் ஏற்படும் பெரிய அலை எனலாம் . முதல் காரணம் நீருக்கடியில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பற்றி காண்போம்.இந்த நிலநடுக்கம் பூமியின் மையபகுதியான கிரஸ்ட் என்ற பகுதியில் நடக்கும் நகர்வால் அதனைமேல் பகுதியில் இருக்கும் கண்டதட்டுகள் டெக்டானிக் பிளேட்டுகள் வேகமாக நகர தொடங்கும் இதன் காரணமாக இதானல் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி ஏற்படும்.

Related:புயல் எப்படி உருவாகிறது?


சுனாமி எப்படி பரவுகிறது?


சுனாமிகளின் சிறப்பியல்பு என்னவென்றால், அவற்றின் நீளம், அதாவது இரண்டு தொடர்ச்சியான அலைகளுக்கு இடையே உள்ள தூரம், சுமார் 10 முதல் 100 கி.மீ. இது கடலை விட மிகவும் ஆழமானது, எனவே அவை “நீண்ட அலைகள்” என்று கருதப்படுகின்றன. நீண்ட அலைகளின் ஒரு பண்பு என்னவென்றால், வேகம் அதிகமாக இருக்கும் எடுத்துக்காட்டாக, 4 கிமீ ஆழம் இருந்தால், அலையானது மணிக்கு 700 கிமீ வேகத்தில் நகரும், இது ஒரு ஜெட் விமானத்தின் வேகத்திற்கு சமம். சுருக்கமாகச் சொன்னால்: சுனாமி பாதிப்பில்லாதது, ஆனால் அதிக வேகத்தில் நகர்வதால் , சில மணிநேரங்களில் கடலைக் கடந்து கரையை கடக்கிறது.


சுனாமி கரையை நெருங்கும் போது, ​​ஆழம் குறைவதால், அதன் வேகம் குறைகிறது. எடுத்துக்காட்டாக, ஆழம் 30 மீட்டராகக் குறைந்தால், அலையின் வேகம் மணிக்கு 60 கிமீ மட்டுமே இருக்கும். அலையின் வேகம் குறைந்தால், அதன் உயரம் அதிகரிக்கிறது. தரைபகுதி தடுக்கும் போது தண்ணீர் தேங்கி அலையின் உயரத்தை அதிகரிக்கும் . இதனால் அலை கரையை நெருங்கும்போது வேகம் குறைந்து மிக உயரமனா பிரம்மாண்ட அலைகளாக மாறும்.