facts about pimples
தற்போதைய காலத்தில் இளைஞர்களுக்கு இருக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் இந்த முகப்பருக்களும் ஒன்று இது இளம் வயதினர் மட்டுமின்றி வயதானவர்களுக்கும் பாரபட்சமின்றி வருகிறது எனலாம். இவை எதனால் வருகிறது இதனை எப்படி போக்கலாம் என்பதை இந்த பதவில் காணலாம்.
முகப்பரு எதனால் வருகிறது
முகப்பருக்கள் வர முக்கிய காரணம் உங்கள் முகத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் அதிக எண்ணெயை சுரக்கும்போது அது உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்களுடன் இனைந்து சருமத்தில் இருக்கும் சிறு துவாரங்களை அடைத்துவிடும் , அப்படி அடைபட்ட பகுதியில் பாக்டிரியாக்கள் உருவாக தொடங்கும் இதன் காரணமாகதான் முகப்பரு வருகிறது.
முகப்பரு இதனாலும் வரலாம்
பரம்பரை, ஹார்மோன்கள் மற்றும் நீங்கள் பருக்களை உடைப்பதால்கூட பருக்கள் அதிகளவில் வர வாய்ப்புள்ளது . மேலும் மன அழுத்தம், உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் உங்கள் சருமத்தை நீங்கள் எவ்வாறு பராமரிக்கிறீர்கள் என்பதும் முக்கிய பங்கு பங்கை வகிக்கிறது எனலாம் . அழுக்கு நிறைந்த பாய்கள் மற்றும் தலையனைகள் கூட பருக்கள் வர காரணமாக அமையலாம்.
பருக்களின் வகைகள்
கருப்பு மற்றும் வெள்ளை நிற பருக்கள் இவை சருமத்தில் எண்ணெய்துளைகள் அடைப்பதால் இவை பருமனாக இருக்கும். ஆழமான கட்டிகள் ,நீர்கட்டிகள் போன்றவையும் பருக்களின்
அதிகம் முகத்தை சுத்தபடுத்தாதீர்
அதிகம் முகத்தை சுத்தபடுத்தினால் அதுவே பருக்கள் அதிகமாக வர வழிவகுக்கும் ஏனெனில் அடிக்கடி சருமத்தை சுத்தபடுத்துவதன் மூலம் எண்ணெய் திசுக்கள் அதிகளவில் முகத்தில் தோன்றும். எனவே தேவைபடும்போது மட்டும் முகத்தை சுத்தப்படுத்துங்கள்.
பொரித்த உணவுகளால் பருவருமா
பொரித்த மற்றும் துரித உணவுகளை உண்டால் முகபருக்கள் வரும் உங்களிடம் நிறையபேர் கூறியிருக்கலாம் ஆனால் அது உண்மையல்ல பொரித்த உணவுகளால்தான் முகப்பருக்கள் தோன்றுகின்றன என எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆனால் பெரும்பாலும் இந்த பொரித்த உணவுகளை தவிர்ப்பது உங்கள் உடலுக்கே நல்லது. பருக்கள் வராமால் இருக்க நல்ல நீர்சத்து மிகுந்த உணவுகளை மேற்கொள்ளுங்கள்.
மேக்கப் செய்தால் பருவருமா
மினரல் ஆயில் கொண்ட மேக்கப் முகப்பரு தோன்ற காரணமாக அமையும்.
உண்மையில், எண்ணெயில் செய்யப்பட்ட எதையும் முகத்தில் பயன்படுத்துவது முகத்திற்கு . அதில் உங்கள் முகத்தில் கசியும் மாய்ஸ்சரைசர் அல்லது முடி தயாரிப்புகளும் அடங்கும். அதற்கு பதிலாக, லேபிளில் எண்ணெய் இல்லாத தயாரிப்புகளைத் பயன்படுத்துங்கள்.
சூரியஒளி முகப்பருக்களை தடுக்கும்
சூரிய வெளிச்சம் முகப்பருக்களை குறைக்க உதவும்.
சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவழிப்பது முகப்பருவுக்கு நன்மை பயக்கும் சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது சிறந்தது. ஆனால் அதிக சூரிய ஒளி என்பது மோசமாக அமையாலம்: இது முகப்பரு வடுக்களை கருமையாக்கும். நீங்கள் எவ்வளவு நேரம் சூரிய ஒளியில் இருந்தாலும், சன்ஸ்கிரீன் அல்லது SPF கொண்ட எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசர் அணிவது அவசியம்.
80% பேருக்கு முகப்பரு
சமீபத்திய ஆய்வுகளின்படி இந்த உலகில் இருக்கூடிய 80% சதவீதம் பேருக்கு முகப்பருக்கள் வந்துசென்றுவிடும்.
முகப்பரு நீங்க என்னசெய்ய வேண்டும்
இந்த முகப்பரு நீங்க் எதுவும் செய்ய தேவையில்லை நீங்கள் கைகளை வைத்துகொண்டு சும்மா இருந்தால் மட்டுமே போதும் அதுவாகவே சரியாகிவிடும்.
முகப்பரு வராமல் தடுப்பது எப்படி
இந்த முகப்பருக்கள் வராமல் தடுக்க ஒரு சில வழிகள் உள்ளன
- ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே முகங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
- அதிகம் நீர்மிகுந்த உணவுப்பொரு்களை உட்கொள்ளுங்கள்
- தயவு செய்து கைகளை உங்களின் பருக்களின் மீது படாமல் பார்த்துகொள்ளுங்கள்
- உடலில் வியர்வை வராத அளவிற்கு மென்மையான ஆடைகளை உடுத்துங்கள்
- முகத்தில் எண்ணெயால் செய்யபட்ட அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவதை தவிருங்க
Related: நம் உடல் பற்றி நாமே அறியாத விசயங்கள்