பொதுவாக விண்வெளிபாறைகள்(asteroid) என்பதுவிண்வெளியில் இருக்கூடிய வெடித்து சிதறிய கிரகங்கள் அல்லது பாகங்கள் ஆகும் .இது உருவளவில் பெரிதாகவும் மிகசிறியதாக கூட இருக்கலாம் இது விண்வெளியில் மிக வேகமாக பயணிக்ககூடும்.இவை விண்வெளியில் நிறைய இருக்கும் அப்படி இருக்கூடிய பாறைகள் எந்த நட்சத்திரத்தாலும் ஈர்க்கபடாமல் விண்வெளியில் அப்படியே சுற்றிவரும் அப்படி வரும்போது அவை பல கோள்கள் மீது மோதும் .
அப்படி விண்வெளி பாறை ஒன்று வரும் 18ஆம் தேதி பூமியை கடந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
7482 என்ற பெயரிடப்பட்ட இந்த விண்வெளி பாறையை கடந்த 1994ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர் 3- ஆயிரத்து 280 அடி விட்டம் கொண்ட இந்த பாறை 18ஆம் தேதி பூமியை கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பூமியில் இருந்து 12 லட்சம் மைல்கள் தூரத்தில் கடந்து செல்லும் என்றும் இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இதன்பிறகு 2105ஆம் ஆண்டு தான் பூமிக்கு அருகில் வரும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்வெளிபாறையானது உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவை விட பெரியது இது பூமியை தாக்கினால் 2 நிமிடங்களில் பூமி முழுவதும் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது . இப்படி வருடா வருடம் பல விண்வெளி பாறைகள் பூமியை நெருங்குவது சகஜமாகிவி்ட்டது