வணக்கம் இந்த பதிவில் பெருங்கடல் பற்றிய சில சுவாரஸ்யமான மற்றும் ஆச்சரியமான விசயங்களை பற்றி காண்போம்.
பெருங்கடலும் பூமியும்:
நமது பூமியை விண்வெளியில் இருந்து பார்த்தால் அது ஒரு நீல பளிங்கு போல தெரியும்! அது ஏன் என்றால் பூமியின் மேற்பரப்பு 70 சதவீதம் பெருங்கடலாக உள்ளது!.
பெருங்கடலின் வகைகள்:
இந்த உலகில் ஒரு தொடர்ச்சியாக இருக்கும் உப்பு தண்ணீரால் ஆன பெருங்கடலை விஞ்ஞானிகள் மற்றும் புவியியல் வல்லுநர்கள்ஐந்து வகையாக பிரித்துள்ளனர். அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தெற்குப் பெருங்கடல் மற்றும் ஆர்டிக் பெருங்கடல் ஆகும்.
பெருங்கடலின் ஆழம்:
பெருங்கடல் மிக ஆழமுடையவை மற்றும் பரந்து விரிந்து பரவியவை ஆகும். சராசரியாக ஒரு பெருங்கடலின் ஆழம் இரண்டு மைல் ஆகும். ஆனால் பசிபிக் பெருங்கடலில் குவாமுக்கு தென்மேற்கே சுமார் 200 மைல் தொலைவில், மெரினா அகழியில் உள்ள நீர் சுமார் ஏழு மைல் ஆழத்தில் உள்ளது. அது கடலின் ஆழமான பகுதி. இது போன்ற பெருங்கடலில் ஆய்வுக்கு ஆய்வாளர்கள் செல்லும் போது மிக கவனமாக இருப்பார்கள்!.
வானிலை கட்டுப்பாடு:
பெருங்கடல் நமது பூமியின் வானிலையை கட்டுப்படுத்த உதவுகிறது!. பூமியில் அந்த பெருங்கடலின் நீர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது அவை அந்த அந்த குறிப்பிட்ட இடத்தை மிக்க வெப்பமாகவோ அல்லது குளிராகவோ ஆகுவதை கட்டுப்படுத்தும்.
பெருங்கடலும் கடலும்:
நாம் எல்லோருக்கும் பெருங்கடல் மற்றும் கடலுக்கு வித்யாசம் தெரியாது. கடல் என்பது, பெருங்கடலின் ஒரு சிறிய பகுதி.. பொதுவாக பல பக்கங்களில் நிலத்துடன் இருப்பவை ஆகும். எடுத்துக்காட்டு: ஆப்பிரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் மத்தியதரைக் கடல், வடக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவிற்கு இடையில் பாட்டிக் கடல்.
பெருங்கடலின் உயிரினங்கள்:
ஆய்வாளர்கள் சுமார் ஒரு மில்லியன் மீன்/விலங்கு இனங்கள் உள்ளது என்கிறார்கள். ஆனால் அதில் 95 சதவீதம் முதுகெலும்பில்லாதவை என்று சொல்கிறார்கள். எடுத்துக்காட்டு: ஜெல்லி மீன், இறால்முதுகெலும்புகள் உடையவைக்கு எடுத்துக்காட்டு : பிரிஸ்டில்மவுத், இது அதிக எண்ணிக்கையில் உள்ளது, இருட்டில் ஒளிரும் ஒரு சிறிய கடல் மீன். பெருங்கடலின் சிறிய உயிரினங்கள்:
இந்த உலகில் ஏராளமான உயிரினங்கள் உள்ளது. இவ்உலகத்தின் மிகச் சிறிய உயிரினங்கள் பெருங்கடலில் தான் இருக்கிறது! அதாவது சூபிளாங்க்டன் என்னும் உயிரினங்களை நாம் உயிரியல் நுண்ணோக்கி மூலம் தான் காண முடியும்.
பெருங்கடலின் பெரிய உயிரினங்கள்:
பெருங்கடலில் தான் உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவ் உலகத்தின் மிகப்பெரிய உயிரினம் ஒரு பாலூட்டி ஆகும். அது நீல திமிங்கிலம் ஆகும். அது போக சுறா, டால்பின்கள், கடல் சிங்கங்கள் பெருங்கடலின் பெரிய உயிரினங்கள் ஆகும்!.
பெருங்கடலும் செடிகளும்:
நாம் எல்லோரும் இவ்வுலகத்தில் உயிர்வாழ முக்கிய காரணம் ஆக்சிசன்தான் இவை நிலத்தில் உள்ள மரங்களில் இருந்து தான் அதிகமாக வருகிறது என்று நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால், நிஜமாக நாம் வாழ்வதற்கு தேவையான ஆக்சிசன் பெருங்கடலில் இருந்து தான் கிடைக்கிறது! . பெருங்கடலில் உள்ள பைட்டோபிளாங்க்டன், ஆல்கா மற்றும் சில நுண்ணிய தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்வதில் இருந்து தான் அதிக ஆக்சிசன் கிடைக்கிறது!
உயிர் ஒளிர்வு:
உயிர் ஒளிர்வு என்னும் இரசாயன எதிர்வினையை பயன்படுத்தி ஆழமான பெருங்கடலில் வாழும் உயிரினங்கள் தன் உடம்பில் ஒளியை உருவாக்குகிறது. ஜெல்லி மீன், புழுக்கள், ஓட்டுமீன்கள், கடல் நட்சத்திரங்கள் மற்றும் பல மீன்களுக்கு இந்த திறன் இருக்கிறது.