மானுக்கு ஜோம்பி வைரஸ் deer zombie virus in tamil

கனடாவில் ஒரு சில மான்களுக்கு CWD-எனும் ஒரு வகை வைரஸ் பரவுதாக அந்நாட்டை சேர்ந்த ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் போன்ற பகுதிகளில் உள்ள விலங்குகள் நல வாரியம் குறிப்பிட்டுள்ளது. இந்த வைரசை deer zombie virus என்றும் அழைக்கின்றனர். இந்த வைரஸால் மான்களுக்கு என்னவாகும் இது மனிதர்களுக்கும் பரவுமா என்பதை விரிவாக காண்போம்.

ஜோம்பிகளாக மாறும் மான்கள்-deer zombie virus

 deer zombie virus in tamil

இந்த CWD- என்பது Chronic wasting disease ஹரோனிக் வேஸ்டிங் நோய் என்பது மான், , கலைமான், சிகா மான் மற்றும் கடமான்களை பாதிக்கும் ஒரு பிரியான் நோயாகும். இது கனடா மற்றும் அமெரிக்கா, நார்வே மற்றும் தென் கொரியா உட்பட வட அமெரிக்காவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அறியவகை நோய் முதன் முதலில் 1960-ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டறியபட்டது அதன்பிறகு கனடாவிலும் மற்ற சில நாடுகளிலும் கண்டறியபட்டது .

இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்கு நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்த ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம், இந்த நோயால் பாதிக்கபட்ட மான்கள் கடுமையான எடை இழப்பு (விரயம்), தடுமாற்றம், கவனமின்மை மற்றும் பிற நரம்பியல் ஆகியவை அறிகுறிகள் ஆகும் . CWD-ஆனது அனைத்து வயது விலங்குகளையும் பாதிக்கலாம் மற்றும் சில பாதிக்கப்பட்ட விலங்குகள் எப்போது வேண்டுமானலும் இறக்கலாம். CWD விலங்குகளுக்கு ஆபத்தான ஒரு நோயாகவே கருதப்படுகிறது இந்த நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை.

தொடர்புடையவை; ஜோம்பு வைரஸ் இருப்பது உண்மையா

zombies

இன்றுவரை, மனிதர்களுக்கு இந்த நோய்த்தொற்று வந்ததாக எந்த தகவலும் இல்லை. இருப்பினும், சில விலங்கு ஆய்வுகள், CWD-யால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணும் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும் குரங்குகள் போன்ற சில வகையான மனிதரல்லாத விலங்குகளுக்கு CWD ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆய்வுகள் மனிதர்களுக்கு ஆபத்தாக இருக்கலாம் என்ற ஒரு வித கவலையை எழுப்புகின்றன. 1997 முதல், உலக சுகாதார அமைப்பு அனைத்து அறியப்பட்ட ப்ரியான் நோய்களின் முகவர்களை மனித உணவுச் சங்கிலியில் நுழையவிடாமல் வைத்திருப்பது முக்கியம் என்று பரிந்துரைத்துள்ளது.

source:CDC