அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமல்ல எது வாங்கினாலும் அது மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை ஆகும். அந்த வகையில், அட்சய திருதியை தினமான இன்று ஏராளமானோர் நகை வாங்க நகைக்கடைகளில் குவிந்து வருகின்றனர். அட்சய திருதியை என்றால் என்ன? ஏன் அன்றைக்கு நகை வாங்கினால் செல்வம் சேரும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
அட்சய திருதியை என்றால் என்ன?
அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
அட்சய திருதியை ஏன் கொண்டாடபடுகிறது ?
அட்சயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அட்சய திருதியையில் ‘குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது
அட்சய திருதியை பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நகைக்களில் தங்கம் வாங்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். நகைக்கடைகளில் தங்கம் விற்பனைக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கம் விலையும் சற்றே குறைந்துள்ளதால் நகை வாங்க மக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது.
அட்சய திருதியை வரலாறு
அட்சய திருதியை நாளில் தொடங்கப்படும் எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம். எனவேதான் புதிய வணிகத்தை தொடங்குவது, புதுவீடு குடி புகுவது, நகைகள், தானியங்கள் வாங்குவது, திருமணப் பேச்சு வார்த்தையை எடுப்பது உள்ளிட்ட சுபகாரியங்களை இந்நாளில் தொடங்க பலரும் விரும்புகின்றனர்.
இருப்பினும், இந்நாளில் கண்டிப்பாக தங்கம் வாங்கவேண்டும் என்பது பலரது உறுதியான எண்ணமாகவும் உள்ளது.இதுபோல் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் தங்கம் வாங்கிக்கொண்டே இருக்கலாம் என்றும் நினைக்கின்றனர்.
அட்சய திருதியை என்பது வெறும் தங்கம், வெள்ளி வாங்குவது மட்டுமன்று.அப்படியே தங்கம், வெள்ளி என எந்தப் பொருள்களை வாங்கினாலும் அவரவர் சக்திக்குத் தகுந்தாற்போல் தானம் செய்ய வேண்டும். இல்லாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் இவற்றை முடிந்த அளவில் தானம் செய்வது பல மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரும்.
இதுபோல் தங்க நகை வாங்க முடியாதவர்கள், அன்றைய தினம் அரிசி, கல் உப்பு, சீனி, மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்கியதற்கேற்ற பலன் கிடைக்கும் என நம்பபடுகிறது. உண்மையில், அட்சய திருதியை நாளில், முடிந்த அளவில் தான தர்மங்கள் செய்யவேண்டும் என்பதையே சாஸ்திரங்கள் வலியுறுத்தி உள்ளன.
அன்றைய தினத்தில் நீர் மோர், பழங்கள், நவதானியங்கள், அரிசி, பருப்பு, கோதுமை, ஆடை, விசிறி, பாடப்புத்தகங்கள், அன்னம், பசு ஆகியவற்றையும் தானமாகக் கொடுக்கலாம் என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இப்படி எந்த தானமும் செய்ய முடியாது என்று சொல்பவர்கள், ஒரு கைப்பிடி உணவை எறும்பு, பறவைகளுக்குத் தீனியாகப் போடலாம்.
அட்சய திருதியை அன்று இரண்டு முக்கிய விஷயங்களைப் பின்பற்றும்படி ஆன்மீகத் தலைவர்கள் கூறியுள்ளனர். இன்றைய தினம் வெண்மையான நிறங்களில் பொருள்களை வாங்கும்படி கூறியுள்ளனர்.உப்பு, சீனி, அரிசி, வெண்மை நிற பூக்கள், வெண்ணிற ஆடைகளை வாங்கும்படியும் இரண்டாவதாக, அன்னதானம் செய்யும்படியும் சொல்லி உள்ளனர்.
அட்சய திருதியையில் வெள்ளி நகைகள், வெண்மை நிற பூக்களை வாங்கலாம். வெண்ணிற உணவுகளைத் தானம் செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பாண்டவர்கள் தங்களின் வனவாச காலத்தில் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். இந்நாளில்தான் மணிமேகலை அட்சயப் பாத்திரம் பெற்றார். இந்த தினத்தில்தான் குபேரன் நிதி கலசங்களைப் பெற்றார்.
வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாகக் கருதுகிறார்கள்.ஹரியானா, பஞ்சாப்பில் அதிகமாக உள்ள ஜாட் இனத்தவர்கள் அட்சய திருதியையில் மறக்காமல் மண் வெட்டி எடுத்துக்கொண்டு வயலுக்குச் செல்வார்கள்.
இத்தினத்தில் முன்னோர்களை வழிபாடு செய்வதும் சூரியனை வழிபாடு செய்வதும் முக்கியம் என்றும் தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன.
அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, மங்களப் பொருட் களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது. ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள். கல் உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள் வாங்கலாம். மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம்.
தொடர்புடையவை: தங்கம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்
நகைகடைகளில் கூட்டம்
2 ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் விற்பனை நடைபெறுவதால் பொது மக்களும் தங்கம் வாங்க அதிக ஆர்வமாக உள்ளனர். பொது மக்களின் வசதிக்காக சென்னையில் அதிகாலை 4.30 மணி முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தங்கம் வாங்க நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.