உடல் எடை

உடல் எடை அதிகரிக்க இத பண்ணுங்க

Spread the love
உடல் எடை

வணக்கம்! இன்றைய பதிவில் உடல் எடையை எவ்வாறு அதிகரிப்பது என காணலாம் நம்மில் பெரும்பாலானோர் உடல் எடை குறைவாகவோ அல்லது உடல் எடை அதிகமாகவே உள்ளோம் எனவே எவ்வாறு உடல் எடையை அதிகரித்து வலுவான உலை பெறுவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

உடல் எடை அதிகரிப்பதற்கான குறிப்புகள்:

உடல் எடை அதிகரிப்பது என்பது நமது உடலில் உள்ள தசைகளை அதிகரிப்பதாகும். நமது உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் மூன்று விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும்.

உணவு, வழக்கமான உடற்பயிற்சி, உடல் சூடு.

  1. உடல் எடையை அதிகரிக்க உணவு மிகவும் முக்கியமானது. புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் உண்ண வேண்டும். அப்போதுதான் உடல் தசைகள் வளரும்.

எடை அதிகரிப்பதற்கான உணவுகள்:

முதலில், பன்னீர். 100 கிராம் பனீரில் 19 கிராம் புரதம் உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த புரத மூலமாகும்.
இரண்டாவதாக, சோயா பால், சோயா துண்டுகள், சோயா பீன்ஸ் போன்ற சோயா பொருட்களில் அதிக புரதம் உள்ளது.

மூன்றாவதாக, முட்டை. ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளது. நீங்கள் ஒரு நாளைக்கு ஆறு முட்டைகள் கூட சாப்பிடலாம்.

நான்காவதாக, பால். 500 மில்லி பாலில் 17 கிராம் புரதம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. நமது எலும்புகளுக்கு பலம் தருகிறது.

ஐந்தாவதாக, மீன். 100 கிராம் மீனில் 20 கிராம் புரதம் உள்ளது. மீனில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நமது மூளை மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சிறந்த செயல்பாட்டிற்கு உதவுகிறது.

ஆறாவதாக, கோழி மார்பகம். 100 கிராம் கோழி மார்பகத்தில் 25 கிராம் புரதம் உள்ளது.

ஏழாவதாக, பருப்பு பொருட்கள். பச்சைப்பயறு, சன்னா, கருப்பு உளுந்து ஆகியவற்றில் புரதச்சத்து அதிகம்.

ஆரோக்கியமான தின்பண்டங்கள்:

முதலாவதாக, வேர்க்கடலை, 100 கிராம் வேர்க்கடலையில் 560 கலோரிகள் மற்றும் 20 கிராம் புரதம் மற்றும் 15 கிராம் கொழுப்பு உள்ளது. நிலக்கடலையில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் எனப்படும் நல்ல கொழுப்புகள் மட்டுமே உள்ளன.

இரண்டாவதாக பேரீச்சம்பழம், உலர் திராட்சை, எள்ளு மிட்டாய் போன்றவற்றையும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

மூன்றாவதாக வாழைப்பழம். நீங்கள் விரைவாக உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்.

  1. வழக்கமான உடற்பயிற்சி: அதிக உணவு சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது தவறு. ஒரு நாளைக்கு குறைந்தது 2 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். புஷ்அப்ஸ், புல்அப்ஸ், ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறும்.
  2. உடல் சூடு: உங்கள் உடல் சூடு அதிகமாக இருந்தால் நீங்கள் உண்ட உணவு உங்கள் உடலில் இருக்காது. அதிகாலையில் 3-4 கிளாஸ் தண்ணீரைக் குடியுங்கள், உங்கள் உடலில் உள்ள நச்சுகளை அகற்றவும், உங்கள் உடலை குளிர்விக்கவும். சோற்றுக்கத்தாழை ஜூஸ் குடிக்கலாம். மாலையில் தயிர் சாப்பிடுங்கள். உடல் சூட்டைக் குறைக்க இதைத் தொடர்ந்து சாப்பிடுங்கள் .

நீங்கள் ஆணாக இருந்தால், உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், சுயஇன்பம் செய்வதை நிறுத்துங்கள். உங்கள் உடல் சோர்வடையும், நீங்கள் உடற்பயிற்சி செய்ய மாட்டீர்கள். உங்கள் உடல் விந்தணு உற்பத்திக்கான சக்தியை எடுத்துக் கொள்ளும். எனவே வேகமாக எடை அதிகரிப்பதற்கு சுயஇன்பம் செய்வதை நிறுத்துங்கள்.

தொடர்புடையவை: ஆபாச படங்களால் ஏற்படும் பாதிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *