கண் பார்வை அதிகரிக்க டிப்ஸ்:

  

கண் பார்வை குறைபாடு இன்றைய காலத்தில்  சின்ன குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் கண்ணாடி பயன்படுத்துவதை பார்கின்றோம். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தீற்கள் என்றால் கம்யூட்டர் லேப்டாப்பில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கின்றது இரவு நேரம் விழித்திருந்து மொபைல்போன் பயன்படுத்துவது சாப்பிடும் உணவில் கண்களின் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துகள் இல்லாமல் இருப்பது சர்க்கரை நோய் அதிக இரத்த கொதிப்பு போன்ற காரணங்களால் கூட கண் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகிறது. கண்களில் ஏற்படக்கூடிய அதிக வறட்சி, எரிச்சல், கண்களில் கண்ணிர் வருவது, லேசான கண் மங்குதல் இது போன்று கண்கள் காட்டகூடிய ஆரம்ப அறிகுறிகளை அலட்சியமாக என்னும்போது தான் கிட்டப்பார்வை தூரப்பார்வை குறைபாடு கண்களில் புறை வளருதல் இது போன்ற கண் சம்மந்தமான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்பாக அமைந்துவிடுகிறது. இன்றைக்கு இந்த விடியோவில் இது போன்ற கண் பிரச்சினைகள் வராமல் இருப்பதை தடுக்கவும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் என்ன மாதிரியான டிப்ஸ் கடைப்பிடிக்கலாம் என்பதை இந்த விடியோவில் பார்க்கலாம்.  அதனால் மிக மிக பயனுள்ள இந்த வீடியோவை முழுவதுமாக பாருங்கள்

கண் உடற்பயிற்சி

          படத்தில் இருப்பது மாதிரியாக பயிற்சி செய்யவேண்டும் தலையை அசைக்காமல் கண்விழியை மட்டும் அசைத்து இந்த பயிற்சியை செய்யவேண்டும். படத்தில் இருப்பது போன்று கண்களை வலப்பக்கம் சிறிது நேரமும் இடப்பக்கம் சிறிது நேரமும் மேல் கீழ் என இந்த பயிற்சியை செய்யவேண்டும் இந்த பயிற்சி செய்வதன் மூலம் கண் பார்வை திறன் அதிகரிக்கும், கண்ணின் வறட்சி தடுக்கப்படும் கண்ணுக்கும் மூலைக்குமான செயல் திறன் அதிகரிக்கும் மற்றும் கண் குறைபாடு போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க இந்த பயிற்சி உதவுகிறது. நிறைய கண் மருத்துவமனைகளில் கூட இந்த படம் இருப்பதை உங்களால் காண முடியும் கண்டிப்பாக  இந்த பயிற்சியை செய்து பாருங்கள்.

2.சூரியனை பார்க்கிறது

      காலையில் வரக்கூடிய இலஞ்சுறியனை வெறும் கண்களால் பார்ப்பது தான் இந்த பயிற்சி. இந்த பயிற்சி சூரியனை காலையில் எழுந்தவுடன் பார்க்கும்போது உங்களின் காலில் காலணிகளை அணியக்கூடாது பூமிக்கும் பாதத்திற்கும் நேரடியான தொடர்பு இருக்கவேண்டும் சூரியன் உதித்து காலையில் ஒரு மணி நேரமும் மாலையில் சூரியன் மறைவதற்கு முன்பு ஒரு மணி நேரமும் இந்த பயிற்சியை செய்ய வேண்டும் மற்ற நேரங்களில் சூரியனை வெறும் கண்களால் பார்க்க கூடாது இந்த பயிற்சி செய்வதன் மூலம் கண் பார்வைத்திறன் பல மடங்கு அதிகரிக்கும் கண்களுக்கு நிறைய ஆற்றல் கிடைக்கும் அதுமட்டும் இல்லாமல் மூலையில்

செரட்டோனின் என சொல்லக்கூடிய ஹார்மோன் உற்பத்தி செய்யவும் தூக்கத்துக்கு உதவக்கூடிய மெலட்டோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த பயிற்சி உதவுகிறது கண் பார்வை திறனை அதிகரிக்கவும் உடலின் ஆரோககியத்தை மேம்படுத்தவும் இந்த பயிற்சியை யோகாவில் ஒரு முக்கியமான பயிற்சியாக பார்க்கின்றார்கள் கண் பார்வை சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கணும் என எண்ணுபவர்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்

3.வெள்ளரி கண் பேக்

      பொதுவாகவே கண்சார்ந்த பிரச்சைகள் ஏற்படுவதற்கு கண்களில் ஏற்படக்கூடிய அதிகப்படியான வறட்சியும் வீக்கமும் தான் காரணம் இதை தடுப்பதற்கு உதவக்கூடிய ஒரு பேக் என்றால் அது இந்த வெள்ளரி கண் பேக் தான். இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் படத்தில் இருப்பது போல வெள்ளரிக்காயை வட்டம் வடிவத்தில் வெட்டிகொள்ளுங்கள் இந்த வெள்ளரிக்காயை கண்களில் வைத்து ஒரு 15 நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அதன்பிறகு இந்த வெள்ளரிக்காய்களை நீக்கிவிடலாம் இந்த வெள்ளரி கண் பேக் செய்வதன் மூலமாக கண்களில் உருவாக்கக்கூடிய அதிகப்படியான வர்ட்சியை தடுக்க முடியும்.இதனால் கண்களுக்கு நல்ல குளிர்விக்கும் விளைவுகளை தரும் மற்றும் கண் நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதன் மூலமாக கண்களின் ஆரோக்கியம் மேம்படும். இந்த வெள்ளரி கண் பேக்கை வாரம் 1 முதல் 2 முறை செய்தால் கூட போதும் கண் சார்ந்த எந்த ஒரு பிரச்சனையும் வராது.

4.டிஜிட்டல் திரையை தவிர்க்கவும்

     கம்யூட்டர்,லேப்டாப், மொபைல்போன் போன்றவற்றில் இருக்ககூடிய

திரையை தான் டிஜிட்டல் திரை என்று கூறுகிறோம் இதிலிருந்து வரக்கூடிய அதிகப்படியான வெளிச்சம் கண்களில் இருக்கக்கூடிய ரெட்டினா செல்களை சேதம் செய்கிறது. இதன் விளைவாக கண் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு அதனால் டிஜிட்டல் திரையில் அம்பலமாகும் வெளிச்சத்தை உங்களால் எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்துக்கொள்ள வேண்டும். கம்யூட்டரில் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்பவர்கள் கம்யூட்டர் திறைகளுக்கு திரையுறை பயன்படுத்துவது மற்றும் அரை மணிநேரத்திற்கு ஒரு முறை இடைவெளி எடுத்து கண்களுக்கு ஓய்வு கொடுப்பது இடை இடையே கண்களை அடிக்கடி சிமிட்டுவது முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவுவது இதுபோன்ற விஷயங்களை செய்வதன் மூலமாக டிஜிட்டல் திரைலிருந்து வரக்கூடிய பாதிப்புகளை தடுக்கலாம்

5.கண் ஆரோக்கிய உணவுகள்

       கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கண்களுக்கு வைட்டமின்-A என சொல்லக்கூடிய கரட்டினோடின் சத்தும் வைட்டமின்-E என் சொல்லக்கூடிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இது இரண்டும் மிகவும் அவசியமான சத்து நாம் சாப்பிடக்கூடிய தினசரி உணவில் இந்த சத்துகள் அதிகம் நிறைந்த கேரட்,கீரைகள்,குடைமிளகாய், பப்பாளிப்பழம்,மீன்,முட்டை, பாதாம்,சர்க்கரைவள்ளிகிழங்கு போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதின் மூலமாக கண் சார்ந்த பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கலாம் இதைத்தவிர அரிசி வகைகளில் திணை அரிசியில் அதிகப்படியான கரட்டினோடின் சத்து நிறைந்துள்ளது இந்த 10 உணவுகளையும் அன்றாட உணவில் சாப்பிட்டு வந்தாலே  கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

     இந்த 5 டிப்சயும் தொடர்ந்து பின்பற்றி வந்தாலே போதும் கண் சம்மந்தமான எந்த ஒரு பிரச்சனையும் வராமல் பாதுகாக்க முடியும். ஏற்கனவே கண் சார்ந்த பிரச்சினைகள் இருந்தால்கூட அதிலிருந்து வெளிவருவதற்கும் இந்த 5 டிப்சும் ரொம்பவே உதவியாக இருக்கும்.

தொடர்புடயவை : தொப்பை குறைய இத பண்ணுங்க