ravanan history in tamil

இராவணனின் மறைக்கபட்ட வரலாறு ravanan history in tamil

வணக்கம்! நம்மில் பெரும்பாலானோருக்கு இராமயணம் பற்றிய கதைகளை கேட்டிருப்போம் படித்திருப்போம் ஆனால் அதில் மூடி மறைக்கபட்ட வரலாறு பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இராமயணம் கதையை படிக்கும்போது நம்மில் பெரும்பாலானோர் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்றும் பெண்கள் மீது மோகம் கொண்டவர் என்றுதான் நினைக்க தோன்றும் ஆனால் உண்மையில் அவரை ஒரு கொடிய அரக்கன் போல சித்தரித்துள்ளனர். உண்மையில் இராவணன் யார் அவர் மக்களுக்காக செய்த நன்மை மற்றும் அவருடைய வரலாறு பற்றி இந்த பதிவில் காண்போம்.

இராவணன் வரலாறு

ravanan history in tamil

பண்டைய காலத்தில் இலங்கையை ஆண்ட நாகர் இனத்தை சேர்ந்த கைகைசிக்கும் ஏகர் இனத்தை சேர்ந்த வஜ்ரவாக்கும் பிறந்தவர்தான் இந்த இராவணன்.இவருடன் உடன்பிறந்தவர்கள்தான் கும்பகர்ணன்,சூர்பனகை மற்றும் விபீஷனன் ஆவர். உண்மையில் இராவணன் என்பது அவருடைய இயற்பெயரா என்றால் அது உண்மையில்லை இராவணனின் இயற்பெயர் சிவதாசன் மற்றும் நிலவழகி பாண்டியன் என்பதுதான் இயற்பெயர். அவருடைய எதிரிகள்தான் இவருக்கு இராவணன் என்ற பெயரை சூட்டியுள்ளனர் ஆனால் இதிகாசங்களில் இவருடைய பெயரையே மாற்றி ஒரு அரக்கன் போல சித்தரித்துள்ளனர்.

இராவணனின் ஆட்சி

இதுவரை இலங்கையில் யாரும் காணாத அளவுக்கு இலங்கையை உச்சத்திற்கு கொண்டுசெல்கிறார் இராவணன், படைபலத்திலும் சரி செல்வத்திலும் சரி இலங்கையானது இராவணன் ஆட்சியில் செல்வ செழிப்பாக இருந்தது என வராலறுகள் குறிப்பிடுகின்றன. அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் இராவணனை கடவுளாக பார்த்தனர் என்று கூறப்படுகிறது இதற்கு ஒரு சில சான்றுகளும் காணப்படுகின்றன இந்தியாவிலும் கூட ஆந்திரா மற்றும் உத்திரபிரதேசத்தில் இருக்கும் பழங்ககுடியின மக்கள் இன்றும் இராவணனை கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர்.

தீவிர சிவபக்தன் இராவணன்

சிவ பக்தியில் இராவணனை மிஞ்ச எவருமில்லை என்றே சொல்லலாம் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் சிவனுக்காக 6 கோவில்கள் கட்டபட்டாதாக வராலாறுகள் கூறுகிறது. ஒருமுறை இராவணன் தனது கை நரம்புகளை அறுத்து அதன் மூலம் வீனைசெய்து இசையை வாசித்து ஆதிசிவனிடம் இருந்து ஈஸ்வரன் என்ற பட்டத்தை பெற்றார்.

இராவணனுக்கு பத்து தலையா?

இராவணன் பத்து தலை கொண்ட அரக்கன் என சித்தரிக்கபட்டுள்ளது ஆனால் உண்மையில் கலைபத்தில் சிறந்தவன் இராவணன் என்பதே வரலாறு அதாவது கலைகள் பத்தும் தன்னகத்தே கொண்ட ஒரே தலைவன் இராவணன் என்பதுதான் உண்மை. அவ்கள் திறமைபெற்ற 10 கலைகள் கீழே

  • மனோத்துவம்
  • மருத்துவம்
  • மந்திரம்
  • தந்திரம்
  • அரசியல்
  • இசை
  • வானசாஸ்திரம்
  • இலக்கியம்
  • விஞ்ஞானம்
  • ஜோதிடம்

இந்த பத்துகலைகளிலும் இராவணன் திறமைபெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன இதைதான் இராவணனுக்கு பத்து தலைகள் என கூறுகின்றன ஒவ்வொரு தலையும் ஒரு கலையை மட்டுமே குறிக்கிறது. இதில் இசைக்கலையில் அதிக ஞானமும் ஆர்வமும் கொண்டவர் இராவணன். இசைக்கென்றே தனக்கென ஒரு யாழ் இசைக்கருவியை உருவாக்கி சிவ பாடல்களை பாடியுள்ளார்.

தொடர்புடையவை: கல்கி அவதாரம் உண்மையா

இராவணனின் கல்வியறிவு

இராவணன் பல்வேறுகலைகளில் சிறந்தவர் என்பதை நாம் மேலே கண்டோம் அதில் குறிப்பாக மருத்துவத்திலும் அதிக திறன்பெற்றவராக இராவணன் இருந்துள்ளார் . மருத்துவம் சார்ந்த நிறைய புத்தகங்களையும் எழுதியுள்ளார் அதில் குறிப்பிட தக்க புத்தகங்கள் நாடி பரிக்‌ஷா என்ற ஆயுர்வேத புத்தகத்தையும் அர்க சாஸ்திர புத்தகத்தையும் எழுதியுள்ளார் .குமார தந்திரேயா புத்தகத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கான மருத்துவ குறிப்புகளையும் அவர் எழுதியுள்ளார்.

இராவணனின் குடும்பம்

இராவணனின் மனைவி மண்டோதரி எனப்படும் வண்டார்குழலியும் தீவிர சிவ பக்தை ஆவார் இவர்கள் இருவருக்கும் பிறந்தவர்கள்தான் மேகநாதன் எனப்படும் இந்திரஜித் மற்றும் அக்‌ஷய குமாரன் ஆவர்.

இராவணனின் கோட்டை

இந்த உலகின் 8-வது அதிசயம் என கூறப்படும் இலங்கையில் சிகிரியா என்னும் இடத்தில் இருக்கும் இராவணின் கோட்டைதான் உலக அதிசயமாக பார்க்கபடுகிறது. ஏனெனில் இந்த கோட்டையான ஒரு மலையை உடைத்து உருவாக்கியுள்ளனர் இதன் உயரம் மட்டும் கிட்டதட்ட 660-அடி ஆகும் இதன் மேல்பக்கத்தை அப்படியே ஒரு கோட்டைபோல வடிவமைத்துள்ளனர். 200 வருடங்களுக்கு முன்னர் வரை இதை அனைவரும் ஒரு மலை என்றே நினைத்தனர் அதன் பிறகு அதனை ஆராய்ச்சி செய்யும்போதுதான் இது நமது பாட்டன் இராவணின் கோட்டை என தெரியவந்தது. இன்று இது இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக இருந்து வருகிறது இலங்கைக்கு சென்றால் கண்டிப்பாக சென்று பாருங்கள் இது உங்களை ஆச்சரியபடுத்தும்.

இவ்வாறு இராவணனின் புகழ் பற்றி பேசிக்கொண்டே போகலாம் அந்த அளவுக்கு அவர் சிறந்தவர். ஆனால் ஒரு சில வட இந்திய காப்பியங்கள் இராவணனை தவறாக சித்தரித்து அவரை அரக்கன் காண்பிக்கின்றன. உண்மையை கூற வேண்டுமென்றால் வெற்றி யாருக்கு கிடைக்கிறதோ அதற்கேற்றவாறு வராலாறுகள் மாற்றி அமைக்கப்படும் அதுபோலதான் இராவணனின் வரலாறும் மாற்றியமைக்கபட்டுள்ளது. இன்றளவும் இராவணனுக்கு வட இந்தியாவிலேயே நிறைய கோவில்கள் உள்ளன அரக்கன் என்ற ஒருவரை யாரும் கடவுளாக வழிபடமாட்டார்கள் எனவே வரலாறுகளின் உண்மைதன்மையை நாம் அறிந்துகொள்வது அவசியம். தொலைக்காட்சிகளும் ஒரு சில புத்தகங்களும் லாப நோக்கத்திற்காக வரலாற்றை திரித்து கூறுவார்கள் எனவே அனைத்திலும் ஆய்வுகளை மேற்கொள்வது மிக அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.