கண் குறைபாடு ஏற்பட காரணம் என்ன ? causes of eye problems in tamil

கண் குறைபாடு ஏற்பட காரணம் என்ன ? causes of eye problems in tamil

இந்த காலகட்டத்தில் சின்ன சிறு வயதிலேயே பெரும்பாலும் குழந்தைகள் கண்ணாடி போடுவது வழக்கமாகிவிட்டது. தொலைக்காட்சி மற்றும் கைப்பேசி அதிகமாக உபயோகிப்பதால் கண் குறைபாடு ஏற்பட காரணமாக காரணமாகிறது.விட்டமின் இ சத்து குறைவாக இருந்தாலும் கண்குறைப்பாடு ஏற்பட காரணமாக அமையும். இவற்றையெல்லாம் தடுக்க விட்டமின் ஏ, சி, கால்சியம் சத்து மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கண்பார்வை திறனை அதிகரிக்கும் பார்வை குறைபாடு, கண் எரிச்சல் இவற்றையெல்லாம் போக்குவதற்கு வீட்டு வைத்திய முறையை பற்றி பார்க்கலாம்.

நெல்லிக்காய், கடுக்காய்

இதற்கு முதலில் நெல்லிக்காய், கடுக்காய் இரண்டையும் எடுத்து இதில் இருக்கிற கொட்டைகளை எடுத்து காயவைத்து தனித்தனியாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இது பண்ண முடியலேன்னா நாட்டு மருந்து கடையில் இந்த பொடிகளை வாங்கி உபயோகிக்கலாம். இரண்டு பொடியையும் பாட்டிலில் சேமித்து வைத்து இதை இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு அரை ஸ்பூன் பொடி எடுத்து தேன் கலந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர கண் குறைபாடு சரியாகும்.

கண்பார்வை அதிகமாக இன்னொரு வழிமுறையை பற்றி பார்க்கலாம்.மிக்ஸி ஜாரில் 15 பாதாம் மற்றும் 12 பிஸ்தா சோம்பு ஒரு ஸ்பூன் சுவைக்காக இரண்டு ஏலக்காய் கல்கண்டு கொஞ்சம் இவற்றையெல்லாம் பொடி செய்து ஒரு வாரத்திற்கு பயன்படுத்துவது போல் சேமித்து வைக்க வேண்டும். இரவு தூங்க செல்லும் முன் ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு ஸ்பூன் பொடியை சேர்த்து குடிக்க வேண்டும். 48 நாள் தொடர்ந்து குடித்து வர கண் குறைபாடு நீங்கும்.

ஒரு நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. பப்பாளியில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் அடிக்கடி எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. சக்கரை வள்ளி கிழங்கு கண்பார்வையை அதிகப்படுத்தும். முட்டையில் அதிகளவு சல்பர் இருப்பதால் வாரம் இரண்டு முட்டை எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக கேரட் அடிக்கடி எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. கண் பார்வை மேம்பட காலையில் எழுந்ததுமே கண்களில் தண்ணீரை வைத்து நன்றாக இரண்டு மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். இது கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். சர்வாஹாசனம் செய்வதால் கண்களில் ரத்த ஓட்டம் மேம்படும். பார்வை திறன் அதிகரிக்கும்