வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு velunachiyaar history in tamil

சிவகங்கை சீமையின் பெண்ணரசியாக வாழ்ந்து விடுதலைப் போரில் ஈடுபட்ட வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கலாம். ராணி வேலு நாச்சியார் இந்திய சுதந்திரப் போரின் முதல் வித்தானவர் இந்திய வரலாற்றிலேயே ஆங்கிலேயர்களை முதல் முதலில் எதிர்த்து போராடி அவர் வசம் இருந்த தனது நாட்டையும் வெற்றிகரமாக கைப்பற்றியவர் ராணி வேலுநாச்சியார் என்ற பெயரை கேட்டாலே அவர்களது வீரமும் ஆங்கிலேயரை எதிர்த்து நிகழ்த்திய போர்களம் தான் நினைவுக்கு வரும் அதனாலே தான் அவரை வீரமங்கை என்ற பட்டத்தை தாண்டி வீரமங்கை வேலுநாச்சியார் என்று அழைக்கின்றோம்.

வேலு நாச்சியா பிறப்பு

வேலு நாச்சியார் 1730 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் முத்து விஜய ரகுநாத செல்லமுத்து சேதுபதிக்கும் முத்தாத்தாள் நாச்சியார் அவர்களுக்கும் செல்ல மகளாக பிறந்தவர் இவர் ராமநாதபுரத்தில் அருகாமையில் உள்ள சக்கந்தி என்ற ஊரில் பிறந்தார். அரச வம்சத்திற்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் வேலு நாச்சியாரை அரச வாரிசாக ஆண் மகன் வீரத்திற்கு சற்று சளைக்காத இடத்தில் எல்லாவிதமான போர்க்கலைகளும் கற்பிக்கப்பட்டது சிலம்பம் குதிரை ஏற்றம் வாள் வீச்சு வில்வித்தை முதலான வீரக்கலைகளை திறம்பட கற்று தேர்ந்தார்.

ஓர் வீர மங்கையாகவே வளர்ந்து வந்தார் பல மொழிகள் பேசும் திறனை பெற்றவராக ஆங்கிலம் பிரென்ச் உருது போன்ற அந்நிய மொழிகளை கைதேர்ந்திருந்தார். 1746 ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதருக்கும் வேலுநாச்சியாருக்கும் இடையே திருமணம் நிகழ்ந்து அதன் பிறகு ராஜாங்கம் இல்லறம் மக்கள் என மணமகளோடு ஆன்மீகமும் கலந்து வாழ்ந்தார்கள். அவர்களுக்கு வெள்ளச்சி என்ற பெண் குழந்தையும் பிறந்தது அந்த குழந்தையை சிவகங்கை சீமையிலே கொண்டாடியது மொத்த வடுகநாத தேவர் அந்த பகுதிகளின் வீரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டார். இவரை எதிர்க்கும் திறன் எந்த எதிரிக்கும் இருக்காது. அக்காலங்களில் புகழ்பெற்ற அக்கால கட்டத்தில் தான் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் அதிகாரங்களை கைப்பற்றி வரி வசூல் செய்து கொண்டிருந்தது.

பிரிட்டிஷார் முத்து வடுகநாதரை அணுகி வலுக்கட்டாயமாக வரி கட்ட கட்டளை பிறப்பித்தபோது இவர் வரிகட்ட மறுத்துவிட்டார் மேலும் இக்கலைக் இந்திய கம்பெனிக்கு எதிராகவும் களமிறங்கினார் இவரிடம் நேரடியாக மோத முடியாது என்று அறிந்து ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை தேடினர். ஏனெனில் வளவி கலையை பற்றி நன்கு அறிந்தவர் அந்த ஜெனரல் முத்து வடிவ நாதர் தீவிர சிவ பக்தராக திகழ்ந்தார். அவர் கோயிலுக்கு செல்லும்போது ஆயுதம் ஏதும் இன்றி செல்வதுதான் வழக்கம்.

பிரிட்டிஷ் ஜெனரல் தனது ஆங்கில குறுக்கு புத்தியை நீட்டினார் 1782 ஆம் ஆண்டு மன்னர் வழக்கம் போல் காளையார் கோயில் ஈசனை வழிபடுவதற்காக சென்றிருந்தார் இந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஆங்கிலேயர்கள் மன்னர் பூஜை ஈடுபட்டிருக்கும் போது நவாப் படைகளும் ஆங்கில படைகளும் கோவிலை சுற்றி வளைத்தது மறைமுகமாக மறைந்திருந்து சுட்டு வீழ்த்தினார் காளையார் கோவிலிலும் காளையார் கோவில் கோட்டையும் நவாப் படைகளின் வசமாகியது. தன் கணவர் தந்திரமாக கொலை செய்யப்பட்டது அறிந்த வேலு நாச்சியார் கணவரின் உடல் மீது சபதம் செய்தார் தன் கணவரை சுட்டுக் கொன்ற ஜோசப் மித்துடன் ஆங்கிலேயர்களையும் நவாப் படைகளையும் இந்த மண்ணை விட்டு விரட்ட உறுதி ஏற்றார்.

மருது சகோதரர்களின் அறிவுரையின்படி வேலு நாச்சியார் மறைமுகமாக வாழ்ந்து வந்தார் தேவகோட்டை அருகில் உள்ள சக்கரபதி கோட்டை அரண்மனை ஒரு வாயில் கோட்டை பழமாத்தூர் கோட்டை பாண்டியன் கோட்டை அரியகுறிச்சி கோட்டை என பல இடங்களில் தனது போர் பயிற்சி ஈடுபட்டு வந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக திட்டங்களையும் தீட்டி வந்தார் இந்த கோட்டையில் எல்லாம் பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் கிடங்குகளாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். வாள் வேல் வளைவி என ஆயுதங்கள் பதுக்கப்பட்டு இருந்ததாக கூறியுள்ளனர்.

இந்த கோட்டைகளை ராணி தேர்வு செய்யப்பட்டு கொண்டிருந்ததாக எல்லா கோட்டைகளும் காடுகளுக்கு நடுவில் அமைந்திருந்ததும் உள்ளே ஊடுருவ முடியாதவாறு ஒப்புதலை அறநாக இருந்ததாகவும் இதன் காரணமாக அந்நியர்கள் எளிதில் நுழைய முடியாத இடமாக இருந்ததாகவும் கோட்டைகளை தேர்வு செய்திருக்கிறார். வரலாற்றில் முக்கிய இந்த கோட்டைகள் இன்று அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதை வேதனை ராணி வேலுநாச்சியார் இறுதியாக தலைமறைவாக விருப்பாச்சி கோட்டையில் தங்கி இருந்ததாகவும் அங்கு அவருக்கு கோபால நாயக்கர் உதவி புரிந்ததாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். திருப்பாச்சி பாளையத்தை ஆட்சி புரிந்த கோபால நாயக்கர் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அக்காலங்களில் அடைக்கலம் தந்துள்ளார் அதன்படி ராணி அவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.

ஒரு நாள் ராணி வேலு நாச்சியார் தனது படைத்தளபதி அண்ணா மருது சகோதரர்களுடன் காளையார் கோவிலில் தனது கணவருக்கு அஞ்சலி செலுத்தி திரும்பும்போது ஆங்கிலேயர்கள் அறிந்து கொள்கின்றனர் வீரர்களுடன் விரைந்து அரியாங்குறிச்சி வழியாக ராணி செல்கிறார் வழியில் கன்னிப்பெண் ஒருத்தி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறாள். அவளது பெயர் உடையாள்.

அவள் ராணிக்கு தண்ணீர் கொடுத்து உதவுகிறாள். பின்னர் வேலு நாச்சியார் தன்னை ஆங்கிலப்படைகள் பின்தொடர்வதாகவும் அவர்கள் கேட்டால் சென்ற திசையை கூறி விடாதே எனவும் கூறி செல்கிறார் அவர்கள் சென்ற சற்று நேரம் கழித்து பின்னாலேயே ஆங்கிலப்படைகளும் வருகிறது அவர்கள் உரையாடி ராணி குறித்து விசாரிக்கின்றனர். அவளும் ராணி குறித்து விஷயம் எனக்கு தெரியும் ஆனால் கூற மாட்டேன் என்று பொய் கூறாமல் உண்மையை சொல்கின்றாள் நீ சொல்லவில்லை என்றால் உன்னை துண்டு துண்டாக வெட்டி விடுவோம் என ஆங்கிலேயர்கள் எச்சரித்தும் அவள் கூற மறுத்துவிட்டால் தன் உயிரே போனாலும் தனது ராணியை காட்டிக் கொடுக்க மாட்டேன் என அஞ்சாமல் ஆங்கிலேயரிடம் கூறுகிறாள் சிவகங்கை சீமையின் பெண் அல்லவா அவள் அவளது பேச்சில் கோபமற்ற ஆங்கிலேயர்கள் கைகளைத் துண்டிக்கின்றனர் உண்மையைக் கூற மறுக்கிறாள் பின் கால்களை துண்டிக்கின்றனர் அப்போதும் கூற மறுக்கின்றாள் ஒரு கட்டத்தில் அவளது தலையையும் ஆங்கிலேயர்கள் தூண்டிக்கின்றனர் அவளைக் கொன்று விடுகின்றனர்.

துண்டு துண்டாக வெட்ட பட்டம் தனது தேசத்தின் நன்மைக்காக தன்னை காட்டி கொடுக்காத அந்த பெண்ணை குறித்து வேலு நாச்சியார் கேள்விப்படுகின்றார். அங்கு விரைந்து வந்து தனது கண்ணீரை அஞ்சலியாக்கி அவள் வெட்டப்பட்ட இடத்திலேயே ஒரு கோவில்லையும் நிர்வாகம் செய்து வெட்டுடையாள் காளி என்ற பெயரை சூட்டி அதில் வைர தாலியையும் அவளுக்கு சமர்ப்பிக்கிறாள். இந்த கோவில் தான் இன்று தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில். இன்று கிராம தெய்வமாக காட்சியளிக்கும் இவளது வீரத்தை போற்றும் விதமாக தெய்வமாகிய சிவகங்கை மக்கள் வழிபடவும் தொடங்கினர்.

1772 ஆம் ஆண்டு வேலு நாச்சியாருக்கு சோதனைக்குரிய காலமாக இருந்தது கொல்லங்குடி பனங்குடி பாவுனேரி திருபுவனம் மலைக்கோட்டை மேலூர் திருமலை திண்டுக்கல் விருப்பாச்சி என்ன பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்தார் வேலுநாச்சியார் விருப்பாச்சி கோட்டையில் இருக்கும் போது இவர் ஹைதர் அலியின் உதவிய நாடி கடிதம் எழுதுகிறார் விருப்பாச்சி கோட்டையில் தங்கி இருந்த வேலு நாச்சியார் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் கோட்டையில் தங்கி இருக்கின்றனர் ஹைதர் அலியை சந்திக்கின்றனர் அங்கு வேலுநாச்சியார் ஹைதர் அலியிடம் ஆங்கிலேயர் எதிர்ப்பு குறித்து விளக்கி பேசினார் இவரது திறமைகளை கண்டு வியந்த ஹைதர் அலியும் உதவி பெறுவதற்கு முன் வருகிறார் பிறகு ராணி வேண்டிய 12 பீரங்கிகள் 500 துப்பாக்கிகள் சில குதிரை வீரர்களை அனுப்பி வைத்தார்கள்.

இதனுடன் மருத சகோதரர்களுடன் பாலைவீரர்களையும் இணைந்து போர் பயிற்சி மேற்கொள்கின்றனர். ஏழாண்டு காலம் பல கோட்டைகளை மாறி மாறி வாழ்ந்து வந்த வேலு நாச்சியார் இதற்கிடையில் ஆங்கிலேயர்களின் உதவியால் சிவகங்கையை பெற்றிருந்த நவாப் 1773 ஆம் ஆண்டு சிவகங்கையை உசேன் நகர் என்ற பெயர் மாற்றம் செய்தார் மக்கள் அதில் வரும் என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் ராணியின் வருகை எதிர்நோக்கி காத்திருந்தனர் காலமும் கனி ஆரம்பித்தது ஒரு வியூகத்தை ராணி அமைத்தார்கள் தனது படைகளை மூன்று பிரிவுகளாக பிரித்து சிவகங்கை காளையார் கோவில் என மூன்று பகுதிகளையும் கைப்பற்ற கொரில்லா போர் முறை கையாளப்பட்டது. சிவகங்கை நகரை கைப்பற்ற திட்டமிடப்பட்டது சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம் அப்பொழுது கோட்டையில் உள்ளிருக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபட மக்கள் கோட்டையில் ஒன்று கூடுவர்.

ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபட பெண்கள் கூட்டம் அலைமோதம் இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்டு வேலுநாச்சியாரும் அவருடைய பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு மக்கள் கூட்டத்தில் மாறுவேடம் இட்டு அரண்மனைக்குள் இருந்தனர் அரண்மனை கோயிலுக்குள் இருந்த ஆங்கிலேயரிடம் திரு தாக்குதல் நடத்தி அரண்மனை கைப்பற்றினார் இதே சமயத்தில் வேலு நாச்சியார் படையில் இருந்த குயிலி என்ற பெண் தன் உடலில் தீ வைத்துக் கொண்டு வெள்ளையரின் ஆயுதக்கிடங்கை அழித்து தரமாட்டமாக்கினால் சிவகங்கை அரண்மனையை கைப்பற்றிய பிறகு கோட்டை மீது இருந்த ஆங்கிலேயர் கொடியை கீழிறக்கி வெட்டு சிவகங்கை சீமையின் அனுமன் கொடி மேல் ஏற்றப்பட்டது. 1780 ஆம் ஆண்டு ஐப்பசி திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும்படை புறப்பட்டு கடும் போர் புரிந்து காளையார் கோவிலை மீட்டனர்.

வேலு நாச்சியார் தனது ஐம்பதாவது வயதில் தன் கணவனை கொன்ற ஜோசப் வித்தையும் தளபதி பாஞ்சோறையும் கொண்டு தனது சபதத்தை நிறைவேற்றி சிவகங்கை சீமையின் அரியாசனத்தில் அமர்ந்து அரசி ஆனார். ஆங்கிலப் படைகளையும் நவாப் படைகளையும் வீழ்த்தி என்ன வேலு நாச்சியார் சிவகங்கை மீண்டும் நிலை நாட்டினார்.

உசைநகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்த சிவகங்கை மீட்டதோடு மீண்டும் சிவகங்கை என்ற பெயரை சூட்டுகின்றார். 1790 ஆம் ஆண்டு தனது மகள் வெள்ளச்சி மறைவினால் மனம் உடைந்த ராணியார் இதய நோயாளி ஆனார் 1793 வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணம் மேலும் அவரை தாக்கியது. விருப்பாச்சி அரண்மனையில் தங்கி இருந்த வேலு நாச்சியார் 1796 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் நாள் அன்று இம்மண்ணுலக வாழ்வை விட்டு இறைவனடி சேர்ந்தார் அவர் பயன்படுத்திய வாள் ஈட்டி முதல் ஆன கருவிகள் என்றும் சிவகங்கை அரண்மனையில் பாதுகாக்கப்படுகிறது இவரது நினைவை போற்றும் விதமாக இந்திய அரசு 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் நாள் நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது விடுதலைப் போராட்டத்தில் எத்தனை வீரர்களும் அரசர்களும் போரிட்டு உயர்நீத்தனர் இவர் அனைவருக்கும் மணிமுடியாக இரண்டு மண்ணையும் விட்டு தன் வாழ்வின் இறுதி மூச்சு வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வேலு நாச்சியார் வியப்பின் சரித்திரத்திற்கு குறியீடு என்றாலும் அது மிகையாகாது.

தொடர்புடயவை: ராஜ ராஜ சோழனின் வாழ்க்கை வாரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *