தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் சோழர்களின் ஆட்சி தான் சிறந்தது என்று எல்லாருமே சொல்லுவாங்க. அந்த சோழ பேரரசில் சிறந்த ஆட்சியைக் கொடுத்தது ராஜராஜ சோழன்

ராஜ ராஜ சோழனின் வரலாறு raja raja solan history in tamil

தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் சோழர்களின் ஆட்சி தான் சிறந்தது என்று எல்லாருமே சொல்லுவாங்க. அந்த சோழ பேரரசில் சிறந்த ஆட்சியைக் கொடுத்தது ராஜராஜ சோழன். அப்படி அவர் என்ன தான் சாதனை பண்ணுனாரு? ரொம்ப வீரமான மன்னனா இருந்தாலும், மக்கள் கிட்ட அன்பா பழகுனாராமே? எந்த போர்லயும் தோல்வியே பாக்காம இருந்தாராமே? அது எப்படி? அவர் எப்படி தன்னுடைய பேரரசை விரிவு பண்ணுனாரு? அவர் வெற்றியோட ரகசியம் என்ன? இதெல்லாம் பத்தி முழுசா தெரிஞ்சிக்கனும்னா இந்த பதிவை படிங்க.

ராஜ ராஜ சோழன் அறிமுகம்

விஜயாலய சோழரின் காலத்தில் தலைத்தோங்கிய சோழப் பேரரசு ராஜ ராஜச் சோழனின் காலத்தில் இன்னும் மிகப்பெரிய பேரரசாக வளர்ச்சி அடைந்தது. ராஜ ராஜ சோழன் கிபி. 985 ஆண்டில் மன்னரானார். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாலேயே என்னென்ன திட்டங்கள் கொண்டு வரனும்? அதை எல்லாம் எப்படி செயல்படுத்தனும்? எதிரிகளோடு எப்படி போரிடணும்? அப்படின்னு எல்லா திட்டங்களையும் ஏற்கெனவே வகுத்து வைச்சிருந்தாரு.

ராஜ ராஜ சோழன் அரியணை ஏறியதற்கு பிறகு இந்த திட்டங்களை எல்லாம் மிகச் சிறப்பாக செயல்படுத்தினார். அப்படி திட்டமிட்டு செயல்படுத்தி தான் இப்படியான ஒரு மகா சாம்ராஜத்தை உருவாக்கினார்.

சோழனின் பொற்காலம்

ராஜ ராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழி வர்மன். கிபி. 957 முதல் 973 வரை சோழ தேசத்தை ஆட்சி செய்த சுந்தர சோழச் சக்கரவர்த்தி – வானமா தேவி ஆகியோர் தான் இவரது பெற்றோர்கள். தன் பெற்றோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் தான் அருண்மொழி வர்மன். ராஜ ராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் தான் சுந்தர சோழருக்கு பிறகு அரியணை ஏறுகிற நிலை இருந்தது. ஆனால் அவர் ஒரு சதியின் மூலமாக கொல்லப்பட்டதால் ராஜ ராஜனுக்கு அரியணை ஏறும் உரிமை வந்தது. நாட்டு மக்களின் ஆசையும் அதுவாகவே இருந்தது‌.

ஆனால், ராஜராஜ சோழன் அதை விரும்பல. தன்னுடைய சித்தப்பா உத்தம சோழன் இருக்கும் போது தான் அரியணை ஏறுவது முறையில்லை என்று உத்தம சோழருக்கு தன்னோட அரியணைய விட்டுக் கொடுத்துட்டாரு. இவரோட இந்த பெருந்தன்மையான செயல், மக்கள் இவர் மேல வச்சிருந்த அன்ப இன்னும் அதிகப்படுத்துச்சு. உத்தம சோழன் இறந்த பிறகு ராஜ ராஜ சோழன் அரியணை ஏறினார்.

அதுவரைக்கும் சோழ சாம்ராஜ்யத்தில் எந்த ஒரு மன்னனும் செய்யாத சாதனைகளை ராஜராஜ சோழன் செய்தார். அதனால் தான், ராஜ ராஜ சோழன் காலத்தை “சோழர்களோட பொற்காலம்” னு சொல்றாங்க. சோழர்களுக்கு மட்டுமில்ல, தென்னிந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமான காலம், ராஜ ராஜனோட காலம் தான்

போரில் குவித்த வெற்றிகள்

ராஜ ராஜ சோழன் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு சேரரின், கேரள நாட்டோடு பெரும் பேர் நடந்தது. இது தான் அவர் ஆட்சி பொறுப்பேற்று நடத்திய முதல் போர். இந்த போரில் சோழர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. ராஜ ராஜ சோழன் போர் களத்தில் நின்று வாள் சுழற்றி போரிட்டால் வெற்றி கிடைக்காமல் என்ன செய்யும்? இந்த வெற்றிக்கு பிறகு, “காந்தளூர் சாலை கலமறுத்த ராஜ ராஜ சோழன்” என்ற பட்டம் பெற்றார்.

பின்னாளில் உதகைக் கோட்டைக்கு சென்ற இராஜராஜனின் தூதுவனை அந்நாட்டார் அவமதித்து சிறையிலடைத்தனர். இதில் பெரும் கோபமும் ஆத்திரமும் கொண்ட ராஜ ராஜன், பெரும் படை திரட்டிக் கொண்டு 12 மணி நேரத்தில் 18 காடுகளைக் கடந்து சென்று உதயகிரி கோட்டையை தீயிட்டு எரித்தார். மிகப்பெரிய மதில்களைக் கொண்ட உதயகிரி கோட்டைக்குள் சூரியனை போல கம்பீரமாக நுழைந்து பகைவர்களைச் சுட்டெரித்து, அக்கோட்டையை அடையாளமே இன்றி தரைமட்டமாக்கி அழித்து அதன் மீது தன் வெற்றிக் கொடியை நாட்டிவிட்டு, தன்நாட்டு தூதுவனை விடுவித்தார் ராஜ ராஜ சோழன்.

இதனை,
தூ தற்காப் பண்டு
பகலொன்றில் ஈர் ஒன்பது சுரமும்
கொண்டு மலை நாடு கொண்டோனும்
ஏறிப் பகல் ஒன்றில் எச்சுரமும்
போய் உதகை தூறித்
தன் தூதனை நோக்கினோன்
மத கயத்தால் ஈர் ஒன்பது சுரமும்
அட்டித்து உதகையைத்தீ
உயித்த உரவோன்

என ஒட்டக்கூத்தர் தன்னுடைய பாடல் வழி அழகாக பாடியிருக்கிறார். இது போக கலிங்கத்துப் பரணியிலும் உதயகிரி போர் வெற்றி குறித்த பாடலை ஜெயங்கொண்டார் மிக அழகாக எழுதியிருப்பார்.

கடல் கடந்து போர் செய்த சோழன்

ராஜ ராஜ சோழனுக்கு‌ கடல் கடந்து போய் போர் செய்யணும்னு ரொம்ப நாளாக ஆசை இருந்தது. அதனால், இலங்கை நாட்டின் மீது போர் தொடுத்துச் சென்றார். ஈழ நாட்டில் கொடுமையான ஆட்சி செய்த சிங்கள மன்னனை அடக்கி, சோழர்களின் நிலையான அரசை அங்கு அமைத்தார்.

அந்த நேரத்துல இலங்கையோட மன்னனா இருந்தவன் ஐந்தாம் மகிந்தன். மகிந்தனின் படைகள், ராஜ ராஜனின் படைகள எதிர்த்து நிற்க முடியாம சிதறி ஓடிடுச்சு. இதுக்கு மேல இங்கு இருந்தா ராஜ ராஜன் கையால சாகுறது தான் வழி னு தெரிஞ்சு, ஐந்தாம் மகிந்தன் எங்கேயோ ஓடி ஒளிஞ்சிட்டான். ஈழ அதன் பின்பு நாடு முழுவதையும் கைப்பற்றினாரு ராஜ ராஜ சோழன். இதன் மூலமா “கடல் கடந்து வெற்றி கண்ட ராஜராஜ சோழன்” னு எட்டு திசைகளிலும் அவருடைய புகழ் பரவத் தொடங்கியது.

ஈழ நாட்டு போருக்கு பிறகு இலங்கையில் ஒரு நிலையான ஆட்சியை ஏற்படுத்தினார் ராஜ ராஜன். இதற்கு முன்பு இலங்கையைக் கைப்பற்றிய மன்னர்கள் எல்லாருமே, சில பகுதிகளை மட்டுமே பிடிச்சு ஆட்சி செஞ்சாங்க‌. ஆனா, சோழர்கள் இலங்கை தேசம் முழுவதையுமே கைப்பற்றிட்டாங்க. அதனால தலைநகரத்த அனுராதபுரத்துல இருந்து பொலன்னறுவை என்ற இடத்திற்கு மாத்திட்டாங்க.

ராஜ ராஜ சோழனின் சிறப்புகள்

ராஜ ராஜ சோழனுக்கும், மற்ற மன்னர்களுக்கும் இருக்கின்ற வித்தியாசம் என்ன வென்றால், போர் நடந்தாலும், புதிய நாட்டை கைப்பற்றினாலும் அந்த மக்களுக்கு எந்த வித கஷ்டங்களும் கொடுக்க மாட்டாரு. போர் ஒரு பக்கம் நடந்தாலும், மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்காத அளவுக்கு ஏற்பாடு பண்ணிடுவாரு. இந்த ஒரு நல்ல குணம் ராஜராஜ சோழன் மதிப்ப மக்கள் மத்தியில அதிகப்படுத்துச்சு. எதிரி நாட்டு மக்கள் கூட இவர் தான் தங்கள் நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியவர். இலங்கை நாட்டை வெற்றி கொண்டதை, கொண்டாடுகிற வகையில், பொலன்னறுவையில் ஒரு பெரிய சிவன் கோயிலைக் கட்டி எழுப்பினார் ராஜ ராஜன்.

அதன் பிறகு கங்கர்களோட கங்கபாடி நாடு, நுளம்பர்களோட நுளம்பாடி நாடு, ஆகியவை சோழ நாட்டோடு இணைக்கப்பட்டது. பின்னாளில் மைசூரையும் கைப்பற்றினார் ராஜ ராஜன். பிறகு கொங்கு நாட்டில் இருந்து, காவிரியைத் தாண்டி தடிகைபாடி யென்னும் நாட்டைத் தாக்கி மிகப்பெரும் வெற்றி கொண்டார். அவர் கைப்பற்றிய கங்க நாடுகளில் அடுத்த நூறாண்டு காலத்திற்கு சோழர்களின் ஆதிக்கம் இருந்தது என்றால் அது தான் இராஜ இராஜ சோழன் அடைந்த வெற்றிக்கு அடையாளம். வடதிசை நாடுகளிலும் ராஜ ராஜனின் வெற்றிக் கொடிகள் பறந்தன. ராஜ ராஜனின் வாளும், வேலும் பட்ட இடமெல்லாம் வெற்றி கிடைத்தது. அவர் அடைய நினைத்த நாடுகளிலெல்லாம் சோழர் கொடியே பறந்தது.

சிறந்த கப்பல்படைகள்

இதற்கெல்லாம் பிறகு மீண்டும் கடல் கடந்து மாலத்தீவு சென்று, பெரும் போரிட்டு வெற்றி கண்டார் ராஜ ராஜன். இது தான் ராஜ ராஜ சேழனோட கடைசிப் போராகவும் இருந்தது.

இப்படி கடல் கடந்து போய் பல நாடுகள்ல போர் செஞ்சு, வெற்றியும் அடைஞ்ச ராஜ ராஜனோட கப்பற்படை ரொம்ப ரொம்ப வலிமையா இருந்துச்சு. அவரு மனசுக்குள்ள வச்சிருந்த திட்டத்துல ரொம்ப முக்கியமான திட்டம் கப்பற்படை பற்றியது தான்‌. அவர் நினைச்சது மாதிரியே கப்பல் படைய ரொம்ப பலமுடையதா ஆக்கிட்டாரு. ஆனாலும் அவர் காலத்தில இருந்தத விட, அவரது மகன் ராஜேந்திர சோழனுடைய காலத்துல கப்பற்படை இன்னும் மிகப்பெரிய பலத்தை அடைந்திருந்தது. இந்த கப்பல் படைகள வைச்சு தான் ராஜ ராஜ சோழன் கடல் கடந்து போய் பல வெற்றிகள் குவிச்சிட்டு வந்தாரு.

இன்றைய தொழில்நுட்பத்துக்கு நம்முடைய நாட்டோட கப்பற்படை மிகப் பெரியதா இருக்கலாம். ஆனா 1000 வருஷங்களுக்கு முன்னாடி ஒரு நாட்டோட கப்பல் படைய, எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாம மிகப் பெரியதா பலப்படுத்தி; அந்த கப்பல் படைகளக் கொண்டு கடல் கடந்து பல தேசங்களுக்கு சென்று அந்த நாடுகள்ல வெற்றி கொடி நாட்டுனாரு இராஜ‌ இராஜன். இது சாதாரண விஷயம் கிடையாது. எளிமையா செய்ய முடியாத மிகப்பெரிய சாதனை இது.
இராசகேசரி வர்மன், மும்முடிச் சோழன், சோழ நாராயணன், கேரளாந்தகன், சிங்களாந்தகன், பாண்டிய குலாசனி, அழகிய சோழன், செயங்கொண்டான், திருமுறை கண்ட சோழன், காந்தளூர் கொண்டான், ராஜ பாண்டியன், சோழகுல சுந்தரன், திருமுறை கண்ட சோழன் இப்படி ஏராளமான பட்டப்பெயர்களையும் பெற்றிருந்தாரு, இராஜ இராஜ சோழன்.

ராஜ ராஜ சோழன் மக்களின் நிலங்களை எல்லாம் முறையாக அளந்து, அதற்கான செயலாளர்கள நியமித்து, நிலவரி வசூல் செய்தார். அதன் பிறகு, கிராம சபை உருவாக்குவது; அதை மேம்படுத்துவது என்று பல திட்டங்கள் வகுத்தாரு.

இலக்கியம், கட்டடக்கலை, விவசாயம் அப்படின்னு எல்லா துறைகள் லயுமே மிகப்பெரிய தடம் பதிச்சிருந்தாரு, ராஜ ராஜன். அவர் கால் பதித்து வெற்றி பெற்ற துறைகள் ஏராளம். தென்னிந்திய வரலாற்றிலேயே ராஜ ராஜ சோழனோட நிர்வாகத்திற்கு இணை யாருமே கிடையாது. அந்த அளவிற்கான நிர்வாக திறமை மிகுந்த மன்னர் தான், ராஜராஜ சோழன்

தலைசிறந்த மன்னன்

இவர் சைவ சமயத்தை சார்ந்தவராக இருந்தாலும் எந்த ஒரு மதத்தையும் தாழ்வாக நடத்தியதில்லை. எல்லா மதத்தையும் சமமாக மதித்து அவர்களுக்கான உதவிகளை செய்யுறதுல ராஜ ராஜனுக்கு இணை வேறு யாருமே கிடையாது. சிவ பெருமானுக்கு கோவில் கட்டியது போல, விஷ்ணு பெருமானுக்கும் கோவில்கள் கட்டி இருக்காரு. புத்த கோவில்களை சீரமைத்து இருக்காரு. இப்படி சமய வேறுபாடு பார்க்காமல் எல்லா சமயத்திற்கும் பொதுவான ஒரு மன்னனாக விளங்கியவர் தான் ராஜராஜ சோழ‌ன்.

இத்தனை சாதனைகள் செஞ்ச இராஜ இராஜ சோழனோட தலைச்சிறந்த சாதனை தஞ்சை பெருவுடையார் கோயில் தான்.

மனிதர்களால கட்டி முடிச்சிருக்கவே முடியாதுனு பல ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இன்னைக்கு இருக்கிற தொழில்நுட்பங்கள வச்சு கூட இப்படி ஒரு அருமையான கோவிலை கட்ட முடியாது. ஆனா, எந்த தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்துலயே தஞ்சை பெரிய கோவில ராஜ ராஜ சோழன் கட்டி முடிச்சிருக்காரு. சிவ பெருமானுடைய தீவிர பக்தனான ராஜ ராஜன், சிவ பெருமானுக்கான ஒரு அடையாளமா அமையனும்னு தஞ்சை பெரிய கோவிலக் கட்டுனாரு.

தஞ்சை பெரிய கோவில் தான் தென்னிந்தியவோட வரலாற்றிலேயே தலைச் சிறந்த அம்சமாக விளங்குகிறது. தமிழர்களோட கட்டிடக் கலைக்கு அளவில்லாத பெருமையை தேடி தந்ததும் தஞ்சை பெருவுடையார் கோயில் தான். உலகின் மத்தியில் தமிழர்களை தலை நிமிரச் செய்ததில் ராஜ ராஜச் சோழனுக்கும், அவர் எழுப்பிய தஞ்சை பெரிய கோவிலுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு.

இதுவரைக்கும் கோவில்கள் கட்டிய எல்லா மன்னர்களும் அவங்க அவங்களோட பெயர மட்டும் தான் கல்வெட்டுல பொறிப்பாங்க. ஆனா ராஜ ராஜ சோழன் அந்த கோவிலுக்காக உழைத்த ஒவ்வொருவருடைய பெயரும் பொறிச்சிருக்காரு. கோவில் கட்டுனவங்கள்ல இருந்து, வேலை பாத்தவங்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவுனவங்களோட பெயரையும் குறிப்பிட்டு இருக்காரு.

இதுல இருந்தே அவரு மக்கள் மேல வைச்சிருந்த அன்ப புரிஞ்சுக்க முடியுது. அதுக்கும் மேல எல்லோருடைய உழைப்புக்கும் அவர் கொடுத்த மதிப்பு; மக்கள் வேறு மன்னன் வேறு என்ற மனப்பான்மையே அவருக்கு கிடையாதுனு புரிஞ்சிக்க முடியுது.

தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி சொல்லனும்னா எவ்ளோவோ சொல்லிட்டே போகலாம்; அதை முழுசா இன்னொரு காணொளியில நாம பார்க்கலாம்.

கால முடிவு

இத்தனை அரிய பல சாதனைகளை புரிஞ்ச வீராதி வீரர் ராஜராஜ சோழனோட ஆட்சி கிபி. 1014 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துச்சு. ராஜராஜ சோழன் கொடுத்த ஒரு சிறந்த ஆட்சியை அதுக்கப்புறம் எந்த மன்னராலயும் கொடுக்க முடியல. ராஜராஜ சோழன் காலத்துல இருந்த சோழப் பேரரசு அடுத்த 200 ஆண்டுகளுக்கு நிலைச்சு நின்னுச்சு. இதுதான் அவரது வெற்றிக்கு அடையாளம்.

இதுவரைக்கும் தமிழக வரலாற்றுல எத்தனையோ மன்னர்கள் வந்திருக்காங்க, போயிருக்காங்க. எத்தனையோ சாம்ராஜ்யங்கள் தோன்றியிருக்கு, அழிஞ்சிருக்கு, பல காலம் நின்று நிலைச்சிருக்கு. அப்படி ரொம்ப காலம் நின்று நிலைச்ச ஒரு சாம்ராஜ்யம் தான் சோழ சாம்ராஜ்யம். சோழ வம்சம் ராஜ‌ ராஜனோட காலத்துல என்னைக்கும் அழியாத புகழை அடைஞ்சது.

தமிழ்நாட்டுல இப்படி ஒரு மன்னன் இருந்தாருனு சொல்றதுக்கே நம்ம எல்லாம் ரொம்ப பெருமைப்படணும். மார்தட்டி சந்தோசப் படணும். இராஜ இராஜ சோழனோட வீரத்தை கேட்கும் போதே நம்ம உடம்பெல்லாம் புல்லரிக்குது. அப்படி ஒரு மன்னனோட வரலாற நாம அடுத்த தலைமுறைக்கு எடுத்துட்டு போகணும். அது நம்மளோட கடமையும் கூட.

தொடர்புடையவை; தஞ்சை பெரிய கோவில் வரலாறு