vitamin b12 deficiency symptoms in tamil

வைட்டமின் பி 12 குறைபாடு அறிகுறிகள் vitamin b12 deficiency symptoms in tamil

வைட்டமின் பி12 ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் டிஎன்ஏ செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமான சத்து. விட்டமின் பி12 உடலில் குறைவாக இருக்கும் போது தான் வைட்டமின் பி12 டெபிசியன்சி உருவாகிறது. 50 வயது கடந்தவர்களுக்கும் செரிமானம் சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுகிறவர்களுக்கும் உடல் எடை குறைப்பதற்காக இர ப்பயில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் நெஞ்செரிச்சலுக்காக மாத்திரை மருந்துகள் எடுக்கிறவர்களுக்கும் அதிகமாக விட்டமின் பி12 குறைபாடு ஏற்படுகிறது.

சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு வீகன் என்று சொல்லக்கூடிய சைவ பிரியர்களுக்கும் விட்டமின் பி12 குறைவு ஏற்படுகிறது . விட்டமின் பி12 சைவ உணவுகளில் குறைவாகவும் அசைவ உணவுகளில் அதிகமாகவும் காணப்படுகிறது. விட்டமின் பி12 குறைபாடு இருக்குன்னா என்னென்ன அறிகுறிகள் இருக்கும்னு பார்ப்போம் ரத்தசோகை அனிமியா.

சிவப்பனுக்கள் எண்ணிக்கை குறையும்

உடலில் விட்டமின் பி12 குறைவாக இருக்கும் போது இரத்த சிவப்பணுகளையும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும் இதன் காரணமாக ரத்தசோகை பிரச்சனை உண்டாகும் ரத்தசோகை இருக்குன்னா என்னென்ன அறிகுறி இருக்குமோ அதே அறிகுறிகள் விட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும் இருக்கும். உதாரணமாக முகம் மற்றும் சருமம் வெளுத்து வெள்ளையாக காணப்படுவதோடு கண்கள் மற்றும் கை கால்களில் இருக்கக்கூடிய நகங்கள் வெள்ளையாக காணப்படுவதோடு பசியின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும்.

அதிக சோர்வு

அடுத்ததாக அதிக சோர்வு. விட்டமின் பி12 குறைபாடு காரணமாக சிவப்பணுக்கள் குறையும் போது செல்களின் ஆற்றல் பரிமாற்றம் குறைந்து விடும் இதன் காரணமாக அதிக சோர்வு எந்த வேலையும் செய்ய மனமின்மை எப்போதும் தூங்க வேண்டும் என்று உணர்வு மேலோங்கி இருப்பது இதுபோன்ற அறிகுறிகள் கூட விட்டமின் பி 12 குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம்.

நரம்பு மண்டல பாதிப்பு

மூன்று: நரம்பு மண்டல பாதிப்பு விட்டமின் பி 12 சத்து நரம்புகளின் வயலின் என்கிற பொருளை உற்பத்தி செய்து நரம்பை சீராக இயங்கவும்,கட்டளையை மூளைக்கு கடத்தவும் மிக உதவியாக இருக்கிறது விட்டமின் பி12 முதல் முதலில் விட்டமின் பி12 சத்து குறையும்போது நரம்புகள் சீராக இயங்காது இதன் காரணமாக கைத்தாங்கல் மரத்துப் போவது கால்கள் அரிப்போய் மற்றும் கால்களில் இருக்கக்கூடிய விரல்கள் எழுத்துக்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு அல்லது எறும்பு ஊருவது போன்ற ஒரு உணர்வோ இது வந்து சிங்கிளிங் சென்சேஷன் அப்டின்னு சொல்லுவாங்க இதுபோன்ற அறிகுறிகள் கூட விட்டமின் பி2 குறைபாட்டின் அறிகுறிதான்.

பார்வை குறைபாடு

நான்கு :கண் பார்வை குறைபாடு வைட்டமின் பி12 குறைபாடு நரம்பு மண்டலங்களின் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறதால கண்களில் இருக்கக்கூடிய நரம்புகளை எளிதில் பாதித்துவிடும் இதன் காரணமாக கண் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகளும் உண்டாகும்.

மூச்சு விடுவதில் சிரமம்

ஐந்து: மூச்சு விடுவதில் சிரமம் நுரையீரல் ஆரோக்கியத்திற்கும் உடலில் ஆக்சிஜன் பரிமாற்றம் சீராக நடைபெறவும் மிகவும் அவசியமான சத்து விட்டமின் பி2 உடலில் விட்டமின் பி12 குறைவாக இருக்கும் போது உடலுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காது இதன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் கொஞ்சம் வேலை செய்தாலே அதிகம் மூச்சு வாங்குவது இதயம் படபடப்பு இதுபோன்ற அறிகுறிகள் எல்லாம் இருக்கும்.

நாக்கு சிவந்து காணப்படுவது

ஆறு: நாக்கு சிவந்து காணப்படுவது விட்டமின் பி12 குறைபாடு நாக்கில் ஒருவகை எரிச்சல் சிவந்த புண்கள் போன்று காணப்படுவது இது போன்ற பிரச்சனைகள் இருக்கும். ஏழு: கை மற்றும் கால்களில் சிவந்த தடிப்பு ஈசிபிளவுஸ் என்று சொல்லுவாங்க விட்டமின் பி12 உடலில் குறைவாக இருக்கும் பொழுது உடலுக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காத போது ரத்த சிவப்பணுக்கள் உடலில் தேங்க ஆரம்பித்து விடும். சிவப்பணுக்கள் ஆங்காங்கே தேங்கி சிவந்த தடிப்புகளை உருவாக்கும் இது போன்ற அறிகுறிகள் கூட விட்டமின் பி2 அறிகுறியாக இருக்கலாம்.

சாப்பிட வேண்டிய உணவுகள்

விட்டமின் பி12 குறைபாடு இருக்குன்னா விட்டமின் பி12 அதிகம் நிறைந்த உணவை சாப்பிடும் போது விட்டமின் பி12 குறைபாடை தடுக்க முடியும். அசைவ உணவுகளில் விட்டமின் பி12 எதில் அதிகமாக இருக்குனு பாத்தீங்கன்னா இறைச்சி மீன் முட்டை கடல் சிப்பிகள் நண்டுகள் இறால் வகைகள் இதுபோன்ற உணவுகளில் பாத்தீங்கன்னா விட்டமின் பி12 அதிகளவில் இருக்கு அடுத்து பாத்தீங்கன்னா ஆட்டு ஈரல். இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஆட்டு ஈரலில் அடங்கியுள்ளது. சைவ உணவுகளில் விட்டமின் பி12 அதிகமாக எதில் எல்லாம் இருக்குன்னா பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் சோயா, சோயா பால் பன்னீர் காளான்கள் மற்றும் பாதாம் பருப்பு போன்ற உணவுகளில் விட்டமின் பி12 அதிகளவில் இருக்கு. இந்த உணவை எல்லாம் சரியாக சாப்பிட்டு வந்தாலே விட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்யலாம்.