நீங்கள் சிங்கிளாக இருந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் ஒரு நாளாவது இந்த ஒரு விஷயத்தை பற்றி யோசித்திருப்பீர்கள் அது என்னவென்றால் ஏன் எந்த பெண்ணும் உங்களை காதலிப்பதில்லை என்பதுதான் . உங்களை சுமாராக இருக்கும் ஆண்கள் கூட மிக அழகான பெண்களைளை காதல் செய்து சந்தோசமாக இருப்பார்கள் ஆனால் நீங்களோ கடைசிவரை சிங்கிளாகவே காலத்தை கழிப்பீர்கள் இதற்கான காரணம் உங்களின் வேல்யு எனலாம்.
அது என்ன வேல்யு என்று உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். இந்த வேல்யு என்பது நீங்கள் அந்த பெண்ணுக்கு உண்மையாக இருப்பதோ அல்லது பாசமாக பேசுவதோ அல்லது அழகாக இருப்பதோ கிடையாது. இந்த வேல்யு தான் ஒரு பெண்ணை உங்கள் மீது காதல் கொள்ள வைக்கும். இப்பொழுது ஒரு பெண் உங்கள் மீது காதல் கொள்ள விரும்பினால் அவளின் வேல்யு உங்களை விட குறைவாகவோ அல்லது உங்களுக்கு சமமாகவோ இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ஒரு பெண்ணை காதலில் விழ வைக்க வேண்டும் என்பதற்காக அவளை துரத்தி துரத்தி சென்று பேசுகிறீர்கள் அவளை கவர நினைத்து அவளிடம் மொக்கை வாங்குகிறீர்கள். இதனால் உங்களின் வேல்யு என்பது அந்த பெண்ணிடம் குறைகிறது.
நான் ஏற்கனவே கூறியது போல் பெண்கள் எப்போதும் தன்னை போல சமமான வேல்யு கொண்ட அல்லது தன்னை விட அதிக வேல்யு கொண்ட ஆண்கள் மீது தான் அதிக ஈர்ப்பு கொள்வார்கள். நாம் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்த வாங்கிய பொருளை தான் நாம் அதிகமாக மதிப்போம் அதுபோல்தான் இதுவும். எனவே நீங்கள் இப்படி அவளை துரத்தி செல்வதன் மூலம் அந்த பெண் உங்களுக்கு கஷ்டப்பட தேவையில்லை இதனால் உங்களின் வேல்யு குறைந்துவிடுகிது இதன் காரணமாக அந்த பெண் உங்களை காதலிப்பது என்பது மிக கடினமான ஒன்றாக அமைகிறது. எனவே நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் வேல்யு என்பது அந்தப் பெண்ணிடத்தில் மிக குறைவாக உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இனிமேலாவது பெண்களை துரத்தி செல்லாமல் உங்களின் மதிப்பை அதிகப்படுத்த பாருங்கள் நீங்கள் அவளை விட அதிக வேல்யு கொண்டவர் என்பதை அவள் உணர்ந்தால் உங்களின் மீது ஒருவித ஈர்ப்பை அவளின் மனதில் ஏற்படுத்தும்.அப்போது அந்த பெண் உங்களை கண்டிபாக்க உங்களை காதலிப்பாள்.
தொடர்புடயவை; பெண்களுக்கு எப்படி பேசுனா பிடிக்கும்