ஆதித்ய கரிக்காலனை கொன்றது யார் ? aditya karikalan death mystery in tamil

ஆதித்ய கரிக்காலனை கொன்றது யார் ? aditya karikalan death mystery in tamil

சோழர் சரித்திரத்தில் மிக திருப்பு முனையான சம்பவமாகவும் இதுவரை தீராத புதிர்களை கொண்டதாகவும் ஆதித்த கரிகாலனின் கொலை சம்பவம் விளங்குகிறது. இந்த கொலை எப்படி நடந்தது கொலையை செய்தவர்கள் இதனை நாட்களுக்குள் தண்டிக்கபடாதது ஏன்? என்பதை பற்றி காண்போம்.

விஜயால சோழனின் தொடங்கும் பிற்கால சோழ வம்சத்தில் பிறந்த இரண்டாம் பராந்தக சோழன் எனப்படும் சுந்தர சோழனின் மூத்த மகன்தான் ஆதித்த கரிகாலன் சுந்தர சோழனுக்கு பராந்தகன் தேவி அம்மன், வானமாதேவி என இரண்டு மனைவிகள் இருந்தன அதில் வானமாதேவி என்ற மனைவிக்கும் சுந்தர சோழனுக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன முதலாவதாக ஆதித்த கரிகாலனும் இரண்டாவதாக குந்தவையும் மூன்றாவதாக அருள் மொழியும் பிறந்தனர் சோழநாட்டு வரிசைப்படி பார்த்தால் சுந்தரசோழன் பட்டத்திற்கு உரியவர் அல்ல கண்டராதித்த சோழன் இறக்கும்போது அவருடைய மகனான மதுராந்தக உத்தமசோழன் சிறுவனாக இருந்ததால் அவருடைய தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்திற்கு வந்தார்.

அவரும் உடனே இருந்ததால் அவருடைய மகனான சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார் சுந்தர சோழனின் ஆட்சிக்காலம் முடிவதற்குள்ளாகவே கண்டராதித்தரின் மகன் மதுராந்தக உத்தம சோழனுக்கு ஆட்சி செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டிருந்தது சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்த கரிகாலன் சிறுவயதிலேயே வீரத்துடன் விளங்கினார் பாண்டிய நாட்டு மன்னனான வீரபாண்டியனை போரில் வென்றான் என்பதனை ஆனைமங்கலச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

ஆதித்தன் மனுக்குலத்தின் ஒளி போன்றவன் மதம் கொண்ட யானை களோடு சிங்கக்குட்டி விளையாடுவது போன்று வீரபாண்டியன் போர் செய்தான் என்கிறது ஆனைமங்கலச் செப்பேடுகள்.

இதையடுத்து கிபி 967 ஆதித்த கரிகாலனுக்கு இளவரசர் பட்டம் கட்டப்பட்டது. ஆனால் இளவரசர் பட்டம் சூட்டப்பட்ட 3 ஆண்டுகளிலேயே அதாவது கிபி 969 லேயே அவர் கொல்லப்பட்டார். இந்த சோகம் தாங்காமல் அடுத்த சில மாதங்களிலேயே ஆதித்த கரிகாலனின் தந்தையான சுந்தரசோழன் உயிரிழந்தார்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் நீங்களும் மிக முக்கியமான சம்பவங்களில் ஒன்று கடம்பூர் அரண்மனையில் நடக்கும் சதி மற்றொன்று கடம்பூர் அரண்மனையில் நடக்கும் ஆதித்த கரிகாலனின் கொலை. நாவலைப் பொறுத்தவரை ஆதித்த கரிகாலனைக் கொன்றதாக பெரிய பழுவேட்டரையர் ஒப்புக்கொள்கிறார். மறைந்திருந்து நந்தினியை கொள்வதற்காக எரிந்த கத்தி ஆதித்த கரிகாலன் மீது பட்டு அவன் இறந்து விட்டதாக கூறுகிறார்.

உண்மையில் ஆதித்த கரிக்காலனை கொன்றவர்கள்

இதற்கு பிராயச்சித்தமாக தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டே இறக்கிறார். ஆனால் ஆதித்த கரிகாலனின் கொலை குறித்து வரலாற்று காட்டும் குறிப்புகள் வேறு விதமாக உள்ளன. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள உடையார் குடியில் அனந்தீஸ்வரர் என்ற சிவன் கோயில் இருக்கிறது இந்த சிவன் கோவில் கருவறையின் மேற்குப் புறத்தில் ஒரு சாசனம் காணப்படுகிறது ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட இந்த சாசனம் ஆதித்த கரிகாலன் கொலையை அடுத்து கொலை தொடர்புடைய அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறது.

சோமன் அவனுடைய தம்பி ரவிதாசன் அவருடைய தம்பி பரமேஸ்வரன் ஆகிய மூவரும் யார் இவர்கள் எதற்காக இந்த கொலையை செய்தனர் என்பது அடுத்த கேள்வி இதில் பஞ்சவன் பிரமாதிராஜன் என்பதே பாண்டிய நாட்டு அந்தண அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் பட்டத்தை குறிக்கிறது.

இவர்கள் யாருக்காக இந்த கொலையை செய்தனர் வீரபாண்டியனின் மரணத்திற்கு பழி வாங்க இந்த கொலை செய்யப்பட்டது என்பது ஒரு கூற்,று தான் பதவிக்கு வரவேண்டும் என்பதால் உத்தம சோழனை பட்டத்து இளவரசராக்க ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ய சதி செய்தான் என்பது இன்னொரு கூற்று.

ராஜராஜ சோழனும் குந்தவையும் இந்த கொலைக்கு பின்னணியில் இருந்தார்கள் என்பது சிலரின் கருத்தாக இருக்கிறது. உத்தமசோழனுக்கு அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். ஆதரவாக ஆட்களைத் திரட்டி கொண்டு இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினார் வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான் என தனது சோழர்கள் நூலில் குறிப்பிடுகிறார் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி. ஆனால் பிற்கால சோழர்கள் எழுதிய தீ.வை சதாசிவ பண்டாரத்தார் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. ராஜராஜ சோழன் தன் சிறிய தந்தையாகிய உத்தமசோழனுக்கு நாட்டை பிரிவதில் விருப்பமுள்ள வரையில் தான் அதை மனதால் கூட விரும்புவதில்லை என தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அறிய தெரிகிறது.

கொலை புரிந்தோரில் ஒருவனுக்கும் அவனை சார்ந்தோருக்கும் கிடைத்த தண்டனை இராசராசன் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது உடையார்குடிக் கல்வெட்டால் அறியப்படுகிறது.

மறைவில் நிகழ்ந்த அக்கொலையில் தொடர்புடைய வரையார் என்பதை ஆராய்ந்து பார்த்து அனைவருக்கும் தண்டனை விதிப்பதற்குள் சில ஆண்டுகள் கழிந்து இருக்கலாம் அதற்குள் உத்தம சோழன் ஆட்சி வகித்து இருக்கலாம். இதனால் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் தண்டனை விதிக்கும்படி நேர்ந்தது இயல்பே. உடையார்குடி கல்வெட்டு சாசனம் என்பது ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை ஒரு வரியில் கூறும் கல்வெட்டு என்று அக்கறை பற்றிய செய்திகளையோ அல்லது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை பற்றி விவரிக்கும் சாசனம் ஆகாது என குறிப்பிட்டுள்ளார் பாலசுப்பிரமணியம்.

Related: Raja Raja cholan History in tamil