காதலில் வெற்றி பெற இத பண்ணுங்க 20 best love tips in tamil

உங்க காதலில் நீங்க வெற்றி பெற ஒரு சில வழிமுறைகள் பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

நம் மனதுக்கு நெருக்கமான ஒருவர் நம்முடைய காதலை ஏற்று அவருடைய காதலை சொல்லும்போது அளவில்லா சந்தோசத்தை அடையும் தருணமாக தோன்றும்.

அவர்களை விட்டு பிரிய மனம் வராது, அவர்களுடன் நேரம் போதுமானதாகவே இருக்காது, பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பது போல் தோன்றும். மேலும், கிடைக்கும் நேரமெல்லாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும்.

நமக்கு பிடித்தது, பிடிக்காதது என்று இதுவரை நேர்ந்த அனைத்து விதமான எண்ணங்களையும், துணையிடம் ஒன்றுவிடாமல் பகிர்ந்துகொண்டால் தான்… அவர்களுக்கு மோட்சமே கிடைக்கும் என்ற அளவிற்கு அவர்களின் சிந்தனை இருக்கும்.

20 best love tips in tamil

ஆனால், ஒரு சில நேரத்தில் இப்படி இருப்பதும் பிரச்சனையாக வர வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் வைத்திருப்பது நல்லது. இது என்ன அந்த அளவிற்கு பிரச்சனைக்குரிய விஷயமா…? என தோன்றக்கூடும். உறவில் எப்போதும் சின்ன சின்ன புரிதல் இன்மையும் கூட பெரிய அளவில் பிரிவுகளுக்கு காரணமாகிறது. இதை பற்றிய விளக்கத்தை தற்போது காணலாம்.

ஒருவருக்கொருவர் பாராட்டுங்கள் சிறிய விஷயங்கள் செய்தாலும், அதை மதித்து பாராட்ட மறந்துவிடாதீர்கள். அந்த பாராட்டு இன்னும் புதியவற்றை செய்யத் தூண்டும். ஒருவேளை உங்களுக்கு அவர்கள், செய்த அந்த செயல் பற்றிய விஷயங்கள் தெரியவில்லை என்றால், அதை பற்றி அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அத்துடன், அதை பற்றி அவர்களிடம் அடிக்கடி பேசி பாராட்டவும் மறந்துவிடாதீர்கள்.

உங்களுக்கானவருடன் நேரம் செலவிட மறந்திட வேண்டாம். ஒருவேளை உங்களுக்கு தலைக்கு மேல் வேலை இருந்தாலும், உங்களுக்கு என்று இருக்கும் காதலனோ/ காதலியோ தான் மிகவும் அவசியமானவர்களாவார்கள். உங்களுக்கு நேரம் இல்லை என்று தோன்றினால், நீங்கள் நேர நிர்வாகத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

20 best love tips in tamil

உங்கள் காதலி அல்லது காதலனை முழுமையாக நம்புங்கள். ஒருவேளை உங்களுக்கு நம்பிக்கை குறைபாடு இருந்தால், அந்த உறவில் நீங்கள் நீடிப்பதில் பலனில்லை. இதை நாம் பல திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். நிஜவாழ்க்கையிலும் இது அவசியமானது தான். உங்களுக்கு சந்தேகம் தோன்றினால், உங்கள் காதலன் அல்லது காதலியிடம் பேசி அதை உடனே சரி செய்துக்கொள்ளுங்கள். இதுபோன்றவை மனதிற்குள் அடக்கி வைத்துக் கொண்டால் மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கும்.

உங்கள் துணையின் நண்பர்களை பற்றி அதிகம் பேசுவதை தவிருங்கள். உங்கள் துணைக்கு நண்பர்களுடன் இருப்பது பிடித்திருக்கும் வேளையில், அதில் உங்களுக்கு ஈடுபாடில்லை என்றால் மட்டும், அதனை உங்கள் துணையிடம் சொல்லி புரிய வையுங்கள்.

அதனைவிடுத்து உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால், அவர்களை பற்றிய உங்களின் தவறான ஒப்புதலை உங்கள் துணையிடம் கூறுவது சரியானதாக இருக்காது. உங்களுக்கு பிடித்தவராக இருந்தாலும் துணையின் முன்பு அதிகமாக புகழுவதும் கூடாது.

அதேபோல், பிடிக்காதவராக இருந்தாலும் அவர்களையும் உங்களின் துணையிடம் தரம் தாழ்த்தியும் கூறக் கூடாது. இந்த இரண்டுமே, தற்போதுள்ள உறவில் பிரிவை ஏற்படுத்தக்கூடும். எனவே, தேவையின்றி துணையின் நண்பர்களை பற்றி பேச வேண்டாம்.

ஒரு சில திரைபடங்களில் காதலர்களாக இருக்கும் ஒருவர் தனது துணையிடம், “நீ என் மீது கொண்டுள்ள காதலை நிரூபித்துக் காட்டு” என்று கூறுவதை கேட்டு இருப்போம்.

அதற்காக காதலனோ அல்லது காதலியோ சில விந்தையான செயல்களை செய்து, தனது காதலை நிரூப்பிப்பார்கள். இது திரைப்பட காதல் என்பதால், திரைப்படங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஆனால், நிஜ வாழ்க்கையின் காதல் என்பது… அன்பு, புரிதல், நம்பிக்கை போன்ற பற்பல உணர்வுகளை கொண்டுள்ளது. இது ஒருவரை ஒருவர் அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப புரிந்துக் கொள்ளும் நிலையை உருவாக்கும்.

எப்போதும், “தனிமையாக உணர்கிறேன்” என்ற உணர்வை மாற்றி புதிய சிந்தனையை மனதில் விதைக்கும். “என்றும் எனக்காக நீ இருக்கிறாய், உனக்காக நான் இருக்கிறேன்” என்ற நேர்மறையான எண்ணத்தை சிந்திக்க வைத்து புதிய நம்பிக்கையை கொடுக்கும்.

கடினமான சூழல் ஏற்பட்டாலும், விட்டு விலகி செல்லாமல் இருங்கள். இது உறவை மேலும், வலுப்படுத்தும். ஒருவருக்கொருவர் எந்நேரத்திலும், ஆறுதலாகவும் இருங்கள். பிரச்சனைகள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. அப்படி ஒரு சூழலை நீங்கள் இருவரும் தனிப்பட்ட வகையில் சந்திக்க நேரிட்டால், ஒருவருக்கொருவர் ஆறுதல் அளியுங்கள். அது உங்கள் உறவை மேலும், வலுப்படுத்தும்.

20 best love tips in tamil

உங்களுக்கான அனைத்து முக்கிய தேதிகளையும் மறவாமல் நினைவில் கொள்ளவும். எடுத்துக்காட்டாக பிறந்தநாள், சந்தித்த நாள், போன்றவை நினைவில் கொள்ளவும். இது உங்களை தேவையற்ற விவாதங்களை தவிர்க்க செய்யும். அவ்வாறு நினைவில் இல்லை என்றால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்து கொடுக்கும் சத்தியமாக இருக்கலாம். அல்லது முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். அவர்களை நீங்கள் வெளியில் அழைத்து செல்வதாக கூறியிருந்தால் அதற்கான முக்கியத்துவத்தை நிச்சயம் கொடுங்கள் இல்லை என்றால், உங்கள் மீதான நம்பிக்கை அவர்களுக்கு நிச்சயம் குறைய வாய்ப்பு உள்ளது. ஒருவேளை ஒருவர் நம்பிக்கையை சேதப்படுத்தும் விதமாக நடந்து கொண்டால் அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். இதன் அடிப்படையில் உங்கள் காதல் வாழ்க்கையை நீங்கள் மேம்படுத்தலாம். ஆனால், இது அனைவருக்கும் பொருந்துவதில்லை. ஏனெனில், பலரும் ஒருவர் மற்றவர் மீது இருக்கும் ஈர்ப்பை கூட காதல் என்று நினைக்கின்றனர். அந்த ஈர்ப்பு சில காலத்தில் மறைந்து விடும். ஆனால், காதல் அப்படியில்லை வாழ்நாள் முழுவதும் உங்களுடன் பயணிப்பது. அதை சரியாக கொண்டு செல்வது உங்கள் கைகளிலேயே உள்ளது.

உங்கள் மனதிற்கு பிடித்தமானவரை எங்கு அழைத்து சென்றாலும் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். அவர்களை வீட்டில் விடும்போதும் கவனமாக செல்லுங்கள். யாரும் நெருங்காமல் உடன் இருந்து பார்த்து கொள்வது உங்கள் ஆண்மையின் அடையாளம் என பெண்கள் பாவிப்பார்கள்.

தொடர்புடயவை: காதல் பற்றிய மகா உருட்டுக்கள்