அண்டம் வியந்த அசோகர் வரலாறு

மௌரிய சாம்ராஜ்ஜியம்:

இந்திய நாட்டின் தற்போதைய பீகார் மாநிலமே. அப்போதைய மகத நாடாகும்.“மயில்கள் மலரோடு மிதந்திருக்கும் ஒரு மெல்லிய நாட்டில் வாழ்வோரே” இம் மௌரியர்கள். அவர்கள் பாட்டாளிப்புத்ராவின் பாட்டாளிகள்.

முதல் மௌரியப் பேரரசர்:

மௌரிய சமராஜ்ஜியத்தின் முதல் பேரரசர் “சந்திரகுப்தா“. இவர் உலகே எதிர்க்கவியலாத மாவீரர் அலெக்சாண்டரை தோற்கடித்து, அன்றைய ஆங்கிலேய ஊடுருவலை இந்தியாவில் நிகழாது தடுத்தார். அவர் இந்தியாவின் பெரும் பேரரசர்களை வீழ்த்த தென்னிந்தியா வரை அவர் கைகளில் வைத்துக்கொண்டார். அவர் தனது நிறைவான ஆட்சிக்கு பின்னர் சமண சமயத்திற்கு மாறி, சரவண பெலகுழாவில் துறவியாக வாழ்ந்து உயிர் நீத்தார்.

இரண்டாம் மௌரியப் பேரரசர்:

அவருக்கு பிறகு அவர் மகன் “பிந்துசாரர்” ஆட்சிக்கு வந்தார். அவர் தன் தாய் வயிற்றில் இருக்கும் போதே அவரின் தாயார் உயிர் நீத்தாமையால், அவர் கருவை ஒரு ஆட்டின் வயிற்றில் வைத்து பத்து மாதம் கழித்து இவர் பிறந்தார். ஆகையால், இவருக்கு பிந்துசாரர் என்ற பெயர் வந்தது.

“தாய் கருவில் இருந்து கூடு பாய்ந்து ஆடுகள் கூட்டில் பிறந்தவர் பிந்துசாரர்”

பிந்துச்சாரருக்கு பன்னிரண்டு மனைவிகள் நூற்றி ஒரு பிள்ளைகள். நூறில் ஒருவரே “அசோகர்” ஆவார்.

நூறில் ஒன்றாய் இல்லாது, ஒன்றாக நில்லாது, உயர்ந்தான் அசோகன்!

பிந்துசாரரின் மகன் அசோகர்:

கி.மு.302 ல் பிந்துசராருக்கு பிறந்தவர் இந்த அசோகர். அசோகர் நீதிதுறையில் பெரும் ஒரு வல்லுநராகவும், தற்காப்பு கலைகளிலும், அரசாள்வதிலும் பெரும் வல்லமை படைத்தவராக இருந்தார்.

பிந்துசாரரின் ஆட்சி காலத்தில், அசோகர் தனது பதினெட்டாவது வயதில் இரண்டு இடங்களுக்கு ஆளுநராக பணியாமர்த்தபட்டார். 

அவர் தந்தை, அவரைப் பாட்டாளிப்புத்ராவில் இருந்து தக்ஷசீலாவிற்கு போர் புரிய அனுப்பி வைத்தார். ஆனால், அந்த போருக்கு அவரை படையுடன் அனுப்பினார்.ஆனால், ஆயுதம் என்று எதுவும் தராது அனுப்பி வைத்தார். பின் இயற்கையாக அவருக்கு ஆயுதம் கிடைத்து அப்போரை வென்றுள்ளார்.

“வேலின்றி கூரின்றி படையனுப்பினான் பிந்துசாரர்”

“சீரின்றி சினமின்றி வியூகத்தில் வென்றான் தக்ஷசீலத்தை”

பின்னர், உஜ்ஜினிற்கு சென்றார். அவர் தந்தை உடல் நலம் குன்றியதால், அவரை தாய்நாட்டிற்கு வர சொல்லி சுசீமாவை அனுப்பி வைத்தார். எனினும் அப்போரை வென்றார் அசோகர். அங்கு உள்ள ஒரு வணிகர் குலத்தின் பெண் ஒருவர் (மகாதேவியை) திருமணம் செய்து கொண்டார்.

“சூழ்சியின் சூழல் அறிந்தான் அசோகன்”

மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் பேரரசர் “அசோக சக்கரவர்த்தி”:

அவர் தந்தையின் மறைவுக்கு பின் ஆட்சி தனக்கு கிடைக்க தன் 99 சகோதரர்களையும் வேரறுத்து வீழ்த்தினான். நான்கு ஆண்டுகள் கழித்து ஆட்சியமைத்தார். இதனால் அசோகருக்கு தன் மக்களின் மத்தியில் அவர் மிகவும் கொடியவர் என்ற எண்ணம் தோன்றியது. அவர் தன் அரண்மனை அருகே சித்ரவதை கூடம் அமைத்து அவரை எதிர்க்கும் அனைவரையும் அடியோடு அழித்தார்.

கலிங்கப் போர்:

அசோகரின் ஆட்சிக் காலம் ஒன்பது ஆண்டுகள் கடந்த பின், கலிங்க நாட்டுடன் போர் முனைய துவங்கி அவர்களை அடக்க நினைத்தார். அக்கலிங்க நாட்டு மக்கள் சந்திராகுப்தா மற்றும் பிந்துசாரர் இருவராலும் அடிமையாக்கப்பட்டவர்கள். சிறிது காலம் கடந்து அவர்கள் தன்னாட்சி புரிய துவங்கினர்.

“கலிங்கர்கள் கண்ட ஓர் கனவு சுதந்திரம்”

அதை முடக்க தன் படையோட பெரும் போர் புரிய புறப்பட்டார் அசோக சக்கரவர்த்தி. வாலின் ஒரு முனையில் கைகளின் பலம் கொண்டு மறு முனையில் எதிராலியின் ரத்தம் கொண்டு அப்போரையும் வென்றார் அசோகர்.

குருதிக்களத்தில் தன் வெற்றியை கொண்டாட தன் கால் பதித்து நடந்து சென்றார். அங்கு அப்போரில் சண்டையிட்ட ஒன்றரை லட்சத்திற்கும் மேர்ப்பட்ட பிணங்களை கண்டு மனமுடைந்து குணம் நிறைந்து தான் செய்த கடைசி பாவமாக அதை ஏற்றுக்கொண்டு புத்த சமயத்திற்கு மாறினார் அசோகர்.

“செங்குருதியும் சிறுநீராய் வடிந்தோடியதைக் கண்ணீரில் கழுவ நினைத்தான் அசோகன்”

அண்டம் வியந்த அசோகரின் நல்லாட்சி :

~ ரௌத்திரம் குறையாதொரு குருதிக்குள் புத்தத்தின் அமைதியான சத்தத்தை நித்தம் தன் ஆட்சியில் மக்கள் மனதில் வேரூன்ற வைத்தார் அசோகர்.

~ மேலிருப்பவரும் கீழிருப்பவரும் சமமென்றே மனம் சொல்ல அவர் செய்த மாற்றமோ சட்டத்தில் புது திட்டத்தை வைத்தார்.

~ நிதி ஆகினும் நீதி ஆகினும் ஏழை எழியோர்க்கும் கூடை குறையாமல் நிறைய அவர் வழி வகுத்தார்.

~ முதல் முறையாக, விலங்குகளுக்கும் வலி உண்டென்று அறிந்த அசோகர் அதற்காக மருத்துவமனையை நிறுவினார்.

~ கலைகளும் பௌத்தமும் அழியாதிருக்க கலை கட்டிடங்கள் பலவற்றை பாட்டாளிப்புத்ராவில் கட்டினார்.

~ பசி என்ற ஒரு குறை நாட்டோற்கு இல்லாதிருக்க மதிய உணவு திட்டமும், அறிவு அனைவருக்கும் மேம்பட இலவச கல்வியும் கிடைக்குமாறு செய்தார் அசோகர்.

~ இளைப்பார இடம்தோறும் மரம் நாட்டார். உணவு எங்கும் இருக்க பழமரங்களாக நாட்டார்.

இவை அனைத்தும் அசோகர் என்ற பெயரில் செய்யாது தேவ நம்பியாச பிரியதர்சன் என்ற பெயரில் இன்னற்பணிகளை ஆற்றினார்.

அவர் பெயர் இன்று மேலோங்கி நிற்க மிகவும் பெருங்காரணம் ஒரு ஆங்கிலேயக் கல்வெட்டு அறிஞர் ஆவார். அசோகர் என்ற பெயரை அவர் சொல்லாது இம்மாபெரும் வரலாறு நமக்கு கிடைக்காமல் போகிருக்கும்.

அவர் நினைவாகவே நாம் அசோக சக்கரத்தை இந்திய தேசிய கோடியில் பயன்படுத்துகிறோம். நம் தேசிய நாட்டின் நன்முக சிங்கமும் அவர் நமக்காக அளித்தமையே.

ashoka the great history in tamil

காலத்தால் கொடியவன் என்று முடிகொண்ட மௌரியப் பேரரசன்,

புத்தத்தின் புத்தகமாய்,

நாட்டின் புனிதமாய்,

தேசத்தின் ஒரு மாபெரும் காவியமாய் மாறினான் தன் மனதின் ஈரத்தால்.

தொடர்புடையவை : ராஜா ராஜ சோழனின் வாழ்க்கை வரலாறு