எப்படி வந்தது இந்த மனித உரிமைகள் | Human Rights day in tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம்மில் பலருக்கு தெரியாத நாள் தான் மனித உரிமை நாள். டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்படி மனித உரிமை என்றால் என்னனு உங்களுக்கு தெரியுமா மனித உரிமை யாருக்கெல்லாம் உண்டு. இத பத்தி இந்த பத்தியில் பாப்போம்.

மனித உரிமை எப்படி வந்தது

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சபையால் உருவாக்கப்பட்டது. இந்த மனித உரிமை சர்வதேச மனித உரிமையாக கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி மனைவி எழினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தனர் இந்த குழுவில் 53 நாடுகள் அங்கம் பெற்றனர். இதனால் சர்வதேச மனித உரிமம் அங்கீகாரம் பெற்றது.

யாருக்கு இந்த மனித உரிமை

1.ஒரு நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் மனித உரிமை உண்டு.

2.இந்த மனித உரிமையை ஒரு மனிதனிடமிருந்து அந்த நாட்டின் அரசாங்கம் கூட எடுக்க முடியாது.

3.எந்த ஒரு ஏற்றத்தாழ்வு இல்லாமல், இந்த மனித உரிமை அனைத்தும் நாட்டின் குடிமகன்களுக்கும் வழங்கப்படும்.

4.மனிதர்களுக்கு அடிப்படையாகக் கிடைக்கக்கூடிய, விட்டுக் கொடுக்க முடியாத உரிமைகளை மனித உரிமை என்கிறோம்.

ஒரு மனிதனின் மனித உரிமை

ஒரு மனிதன் மற்றவர்களை ஏற்றத்தாழ்வுடன் பார்க்காமல் இருப்பதே மனித உரிமை. ஒரு மனிதன் யாரையும் துன்புறுத்தாமலும் அடிமையாக்காமலும் சுதந்திரமாக இருப்பதே மனித உரிமை.

மனித உரிமை சாசனம்

1.சமத்துவ உரிமை: மனிதர்கள் சுதந்திரமாக பிறக்கிறார்கள் அவர்களுக்கு எல்லா உரிமைகளுக்கும் சமமானவர்கள்.

2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை.

3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை.

4. யாரையும் அடிமையாக்கி நடத்த எவருக்கும் உரிமை இல்லை.

5. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

6. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்டத்தின் உதவிய நாடும் உரிமை.

7. சட்டத்திற்கு புறம்பான ஒருவனை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.

மனித உரிமை நாள்

இந்த உலகுக்கு உரைக்கச் சொல்லும் நாள் தான் மனித உரிமை நாள்.

வாழ்வுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை பெற்று சுதந்திரமாக வாழு வேண்டும்.

நாடு, சமூகம், பொருளாதாரம், அரசியல், நிதி ஆகியவை மனிதன் மனிதனாக வாழ்வதற்கான உரிமை.

நாடு, மொழி, ஜாதி, இனம், பொருளாதாரம் போன்ற எந்த காரணத்தை காட்டிலும் ஒருவனுடைய இந்த உரிமைகள் பறிக்கக் கூடாது.

இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் மனித உரிமை உண்டு. ஒரு நாட்டின் குடிமகனாக இந்த மனித உரிமையை காப்போம்.