பெண்களின் மார்பகம் கவர்ச்சி பொருளா ???

வணக்கம் இன்றய பதிவில் பெண்களின் மார்பகம் பற்றிய சில அறியபாடாத உண்மைகல் பற்றி காண்போம்.

பெண்களின் மார்பகம் உண்மையில் ஆபசமா

பிரபஞ்ச இயக்கத்தின் அடிநாதமான இனப்பெருக்கத்தின் வினையூக்கியான இனக்கவர்ச்சியும் மோகமும் எதிர் எதிர் பாலினத்திற்கு எதன் மூலம் ஏற்படும்? அவர்களின் உடலுறுப்புகளால் தானே நிகழ்கிறது.. நிகழமுடியும். மார்பகங்களை பார்த்து மோகிக்காதே என்றால் அவன் என்ன செய்வான். சரி என்று ஒப்புக்கொண்டு நாளை வேறொரு உறுப்பை பார்த்து இனக்கவர்ச்சி அடைய அவனது மூளை பரிணாமம் அடையும் அவ்வளவுதான்.

இதேபோல் தான் நாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்தநேரத்தில், பின்புறம் பார்த்து இனக்கவர்ச்சி அடைந்த மனிதன் நம் மூதாதையர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.. அவர்கள் அவ்வாறெல்லாம் உறுப்புகளை எல்லாம் புனிதத்தன்மையோடு நோக்கியிருந்தால் நாம் இந்நேரத்தில் இந்த கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்திருப்போமா?

குழந்தைக்கு பால் கொடுக்கும் உறுப்பு என்பதால் அதை புனிதத்தன்மையோடு நோக்கும் நீங்கள் அந்த குழந்தை உருவாவதற்கு வினையூக்கியாக செயல்பட்டதும் அதே உறுப்புதான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்..

உணவை உட்கொள்ள உதவும் வாயிலிருந்துதான் நல்ல பாடலும் பாடப்படுகிறது.. ஒரு உறுப்பு இரண்டு வேலைகள் செய்வதால் ஒன்று புனிதத்தன்மை மற்றொற்று புனிதத்தன்மை யற்றதாக மாறிவிடாது

ஆதியில் ஆண்களைப் போலவே பெண்களும் வேலை செய்து கொண்டிருந்தனர் ..அப்போது பெண்களுக்கு மேலாடை கிடையாது..

அது அவர்களுக்கு வேலை செய்யும்போது இடையூறாக இருந்ததினால் ,அவர்கள் முதலில் கொடியால் மார்பைக் கட்டிவைத்து வேலை செய்தனர்.. பின்னர் அதுவும் இடையூறாக இருந்த காரணத்தினால் தான் அதை முழுமையாக துணியால் மார்பகத்தை மறைத்தனர்.

அதுவரைக்கும் பெண்கள் மேலாடை அணிந்ததில்லை.. ஆண்களைப் போலவே வாழ்ந்திருக்கிறார்கள்..

பின் அதை மறைக்க மறைக்கத்தான் அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாயிற்று.. ஓர் ரகசியத்தை அறிந்துகொள்ள ஆவல் படுவதே மனிதனின் மனம். இதன் காரணமாகதான்

பண்டய காலம் முதல் பெண்களின் மார்பகம் கவர்ச்சியானதாக பாரக்கபடவில்லை. ஆனால் இதில் குறிபிட தகுந்த விஷயம் என்னவென்றால் எதிரபாலினத்தவர் ஒருவருகொருவர் ஈரப்பு கொள்வது இயற்கையே . அந்த ஈர்ப்புக்கு காரணம் உடல் அமைப்பாக கூட இருக்கலாம். எனவே அதில் மார்பகமும் ஒரு காரணியாக இருக்கலாம்.

மார்பகம் குறித்த அறிவியல் கருத்துக்கள்

“நாம் ஏப் என்னும் மனித குரங்குகளாக இருந்தவரை பின்புறமாக தான் புணர்ச்சி கொண்டிருந்தோம், பின்புறமாக புணர்வதால் பின்புறத்தை பார்ப்பதுதான் எல்லா குரங்குகளுக்கும் கவர்ச்சி. பின்புறம் பார்த்து இனக்கவர்ச்சி கொண்டு உடலுறவு கொள்ளும். பெண் குரங்குகளும் தனது பின்புறத்தை மிகவும் அழகாக வைத்துக் கொண்டு இனக் கவர்ச்சிக்கு அழைக்கும்.

ஆனால் காலப்போக்கில் மனிதன் இரண்டு கால்களும் எழுந்து நடக்க ஆரம்பித்த பிறகு புணர்ச்சி விதிகள் மாறின. மனித இனம் மட்டும் தான் முன்புறம் உறவுகொள்ள ஆரம்பித்தது. முன்புறத்தை பார்த்துதான் பொட்டன்ஷியல் மேட் எனப்படும் தகுந்த பார்ட்னரை தேர்ந்தெடுக்கும் வழக்கம் ஆரம்பித்தது. பெண் இனமும் ஒரு தகுந்த ஆண் துணையை கவர்ந்திழுக்க மார்பகத்தை பின்புறம் போலவே மாற்றியமைத்தது.

முன்புறம் மார்பகத்தைப் பார்த்து ஆண்களும் தகுந்த துணையை தேர்ந்தெடுக்க வசதியாக போனது. ஆனால் பின்புறமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் முன்னும் பின்னும் பெண்ணுக்கு மிகவும் அழகாக இருப்பது காரணம். இன நீட்டிப்பு காணும் இனக்கவர்ச்சிகாகமதான் இந்த மார்பகம் ஏற்பட்டது என்று டெஸ்மண்ட் மோரிஸ் ஆணித்தரமாக கூறுகிறார்.

அவர் பல்லாண்டுகளாக வந்த கருத்தை உடைத்தெரிகிறார். அவர் சொல்லுகிறார் இது குழந்தைக்காக ஏற்பட்டது என்று கூறுவது, பிற்காலத்தில் ஏற்பட்ட நாகரீக கருத்தியல்! விஞ்ஞான கருத்து அன்று!

மேலும் தனது ஆராய்ச்சிக்கூற்றுக்காக ஆதாரங்களையும் அடுக்குகிறார்! ஒரு மனித குரங்கு தன் குழந்தைக்கு எளிதாக பால் கொடுக்கிறது! முன்புறம் அதற்கு தட்டையான மார்பகம். ஒரு மனிதப் பெண் பால் கொடுக்கும் போது மிகவும் அசவுகரியம் அடைகிறாள். ஒரு கொரில்லாவின் குழந்தை எளிதாக பால் குடிக்கிறது. ஆனால் ஒரு மனிதக் குழந்தைக்கு பால் குடிக்கும் பொழுது பருத்த மார்பகம் மிகப் பெரிய தடையாக உள்ளது. அந்த குழந்தை மிகவும் சிரமப்பட்டு குடிக்கிறது. தாய் அடிக்கடி அதை சரி செய்து பால் கொடுக்க வேண்டியுள்ளது.

இத்தனைக்கும் காரணம் இனக் கவர்ச்சிக்காக ஒரு பருத்த மார்பகத்தை முன்னே மனித இனம் ஏற்படுத்திக் கொண்டது தான்! ஆகவே மார்பகத்தை பார்த்து இனக்கவர்ச்சி ஏற்படுவது இயற்கையின் விதி. குழந்தைக்கு பால் கொடுக்கும் இடத்தை மார்பகம் ஆக மாற்றியது மனிதனின் இரண்டு காலில் நின்று முன்புறமாக புணரும் இயற்கையின் பரிணாம வளர்ச்சிதான்! என்று அவர் குறிபிடுகிறார்.

மார்பகம் பொருள்

மார்பகம் என்ற சொல்லே தவறானது தான் .. அகம் என்றால் உள்ளே என்றுதான் அர்த்தம் .. மார்பானது வெளியில் தான் இருக்கிறது ..

மார்பு என்று சொல்வதே சரியானதாக இருக்கும் ..

அதை ஆடையால் மறைத்து வைப்பதனால் அதனை மார்பகம் என்று சொல்லக்கூடாது..

அதை ஆண்கள் ரசிக்கிறார்கள் என்ற காரணத்தால் பல பெண்கள் அதை காட்சிப் பொருளாகவும் …

அது ரசிக்கும்படி இருப்பதினால் பல ஆண்கள் அதனை கவர்ச்சிப் பொருளாகவும் மாற்றி விட்டனர்… என்பதுதான் உண்மை.

தொடர்புடயவை: பெண்கள் பற்றி அறியபடாத உண்மைகள்