புத்திசாலிகளின் 12 பழக்கங்கள் 12 Odd habits of highly intelligent people in tamil

நம்ம வாழ்க்கையில பல பேரை நாம்ம தொடர்ந்து சந்திக்குறோம்.

நம்மளோட friends, family, colleagues, அப்படினு தொடர்ந்து நாம்ம ஒவ்வொருத்தரோடயும் conversation வச்சுக்குறோம்.தினசரி இவங்களை பார்க்குறோம், பேசுறோம், இன்னும் closeஆ கூட பழகுறோம் இல்லையா?அப்படி நாம்ம பழகுற எல்லாரும் ஒரே மாதிரியான knowledge and intelligentஓட இருக்குறாங்களானு கேட்டா கண்டிப்பா கிடையாது.ஒவ்வொருத்தரோட intelligenceஉம், ஒருத்தருக்கு ஒருத்தர் வேறுபட்டதா இருக்கு.

அப்போ. நம்மகூட பழகுறவங்களை எப்படி அறிவாளியா? இல்லையானு எப்படி கண்டுபிடிக்குறது?நாம்ம ஒரு அறிவாளியானவங்ககூட பழகுறப்போதான், நம்மளாலயும் Desciplinedஆ இருக்க முடியும் இல்லையா?நம்மகூட இருக்க நண்பர், ஒரு நூலகத்துக்கு சமம்னு அப்துல்கலாம் சொல்றாரு.ஆனா, நாம்ம அப்படி worthஆனவங்ககூட தான் பழகுறோமானு கேட்டா கண்டிப்பா இல்லேனு தான் சொல்லியாகனும்.

அந்த விதத்துல, ஒரு Intelligentஆன ஆளுங்ககிட்ட இருக்க பழக்கவழக்கத்தை தெரிஞ்சுகிட்டா, நாம்ம பழகுறதுக்கு அவங்க worthஆனவங்கனு அர்த்தம்.

அப்படி Intelligent peopleக்கு மட்டுமே இருக்ககூடிய சில பழக்கங்களை பத்திதான் இந்த பதிவில் பார்க்க போறோம்.

இந்த கட்டுரையை படிச்சதுக்கு அப்பறம்..அடடே..! இந்த பழக்கம் எல்லாம் எனக்கே இருக்கு..நானும் கூட ஒரு அறிவாளிதான் போலேனு நீங்க self testஉம் பண்ணிக்கலாம்..

1.Unattainable Goals

12 Odd habits of highly intelligent people in tamil

பொதுவா, சராசரியா எல்லாரும் மாதிரி யோசிக்குறவங்க தனக்குனு ஒரு goal set பண்ணிப்பாங்க.குறிப்பா….வருஷத்தோட முதல் நாள்ல இருந்து, நான் book வாசிக்க போறேன், diet maintain பண்ண போறேனு தனக்கிட்டயே சொல்லிப்பாங்க.இப்படி ஒரு சாதாரண விதத்துல எல்லாரையும் போலவே ஒரு goal set பண்ணிப்பாங்க.அந்த goal அவங்களால அடையுற முடியுற சாதாரண goalஆ இருந்தாலுமே அதுக்கான effortஐ ஒரு வாரத்துக்கு மேல போட மாட்டாங்க.

ஆனா, Highly intelligentஆன people எல்லாரும் இவங்களுக்கும் மேல ஒரு படி போய், அடைய முடியாத ஒரு goalஐ தன்னால அடைய முடியும்னு நம்புவாங்க.அவங்களுக்கு இருக்க அதிகபடியான ஆர்வம்தான், unattainable goalsஐயும் அடைய முடியும்னு நினைக்க வைக்குது.

தெரியாத பல விஷயங்களை, தெரிஞ்சுக்க வாய்ப்புக்களை தேடுவாங்க.சொல்லபோனா, முடியாத விஷயத்தையும் முடிச்சு காட்டுவேன் அப்படின்ற நம்பிக்கை அவங்களுக்குள்ள இருக்கும்.அவங்ககிட்ட இல்லாத ஒரு விஷயத்தை அடைய அதை chase பண்ணி போறது இந்த மாதிரியான Highly intelligent peopleக்கு சாதாரணமான ஒரு விஷயமா இருக்கும்.

இது professionalல மட்டும் கிடையாது, அவங்களோட personalஆன விஷயங்களை செய்யவும், இந்த மாதிரியான chase decisionஐ கையில எடுப்பாங்க.

நீங்களும் ஒரு Highly intelligentஆன ஆளா இருக்குறீங்க அப்படினா, தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சுக்க அதிகமான ஆர்வத்தோட இருப்பீங்க.

அதை தெரிஞ்சுக்க அதிகம் தேடுவீங்க.ஏற்கனவே தெரிஞ்ச விஷயங்கள் மேல இவங்களுக்கு ஆர்வம் இல்லாததுமே,இப்படி தெரியாத விஷயங்களை தேடுறதுக்கு இன்னொரு காரணம் அப்படினு சொல்லலாம்.அப்படி அவங்களுக்கு தெரிஞ்ச விஷயம் health, relationship சம்பந்தபட்ட பெரிய விஷயமா இருந்தாலுமே, அதை ignore பண்ணிடுவாங்க.

இதுல இருந்து நம்மளால guess பண்ண முடியுறது என்ன அப்படினா,இந்த மாதிரியான highly intelligent people எல்லாரும், நம்மளை போல இல்லாம,அவங்ககிட்ட என்ன இல்லையோ, அதை தெரிஞ்சுக்க மட்டும்தான் ஆர்வமா இருக்காங்க.

2.Mindless creativity

Highly intelligentஆனவங்களை பத்தி நாம்ம ஏற்கனவே நினைச்சு வச்சுருந்த விஷயம்தான் இது.அவங்க அதிகமான கற்பனை திறமையோட இருப்பாங்கனு நமக்கு நல்லாவே தெரியும்.ஆனா, அப்படிபட்ட கற்பனைதிறமையை எப்படி வெளிப்படுத்துவாங்கனு உங்களுக்கு தெரியுமா?

அவங்களோட கற்பனைத்திறமைக்கு காரணமா இருக்குறது, doodleனு சொல்லபடுற கிறுக்கல்தான்.நானும் நல்லா கிறுக்குவேன், அப்போ நானும் ஒரு intelligentஆன ஆளானு நீங்க கேக்குறது எனக்கு தெரியும்.கிறுக்கல்னா, அது வெறும் எந்த வடிவமும் இல்லாத கிறுக்கல குறிக்கல.அவங்களோட எண்ணங்கள் எல்லாத்துக்கும், ஒரு வடிவம் குடுக்குறாங்க.இந்த மாதிரி அவங்க வடிவம் குடுக்குறது மூலமா, தன்னோட எண்ணங்களில என்னலாம் தோணுதோ அதை வெளிப்படுத்துறாங்க.

அதுல எது practicalஆ நல்லா ideaவா இருக்கோ, அதை choose பண்ணி அதுல work பண்றதை செய்றாங்க.இப்படி நாம்மளும் நம்மளோட எண்ணங்களில தோணுறதை doodle பண்றது மூலமா, அதாவது கையால ஒரு எண்ணத்தை outlineஆ வரையுறோம் அப்படினா,பல நல்ல ideasஐ நம்மளாலயும் உருவாக்க முடியும்.

நாம்ம அப்படி doodle பண்ணல அப்படினா, நம்மளோட mind நாம்ம என்ன சிந்திச்சோம்ன்றதை சீக்கிரமா மறந்துரும்.நமக்கு ஒரு நிமிஷத்துல எக்கச்சக்கமான எண்ணங்கள் பிறக்கும்,அதுல சில எண்ணங்கள் நமக்கு எந்த விதத்துலயும் உதவாது,ஆனா சில எண்ணங்கள் நம்மளை வாழ்க்கையில அடுத்த படிக்கு கொண்டு போகும்,அப்படி நாம்ம mindகுள்ள வர்ர எல்லா எண்ணங்களுக்கும் ஒரு வடிவம் குடுக்குறப்போ, அதுல எது positive or negative அப்படினு அடையாளம் காண முடியும்.

positive எண்ணங்கள் வேலை செய்யும்னு நம்பிக்கை இருந்தா, அதுல வேலை செய்ய நேரத்தை ஒதுக்கலாம்.இப்படி, தனக்குள்ள ஏற்படுற thoughts எல்லாத்தயும் Doodleமூலமா process பண்றனாலதான் இவங்க எல்லாரும் Highly Intelligent peopleஆ இருக்காங்க.

3.Stubborn Problems

12 Odd habits of highly intelligent people in tamil

Highly intelligentஆன peopleக்கு அதிகமா ஒரு விஷயத்தை நோக்கி push பண்றோமோ? அப்படின்ற எண்ணமே வராது.தன்னால எந்த பிரச்சனையை சரி செய்ய முடியாதுனு நினைக்குறாங்களோ, அத விட்டுட்டு போகாம,அதை தீர்க்க அதிகபடியான நேரத்தையும்,Energyஐயும் செலவிடுவாங்க.இப்படிபட்ட smartஆன ஆளுங்க ஒரு விஷயத்துல தன்னோட time and energyஐ செலவிடுறாங்க அப்படினா,அதுக்கான தீர்வு கிடைக்குற வரை அந்த விஷயம் எவ்வளோ கடினமா இருந்தாலும் விட்டுட்டு வர மாட்டாங்க.

பல சூழ் நிலைகளில தங்களால இன்னும் செய்ய முடியும்ன்ற personality traitஐ இது வெளிப்படுத்துதுனு சொல்லலாம்.இப்படிபட்ட ஒரு personality இருக்கனாலகூட இவங்களால, பலரும் அடைய முடியாத successஐ அடையலாம்.ஆனா, இன்னொரு விதத்துல இது மோசமான lifestyle choicesஐயும் தேர்ந்தெடுக்க வைக்குது.

தன்னையே கெடுக்குற ஒரு பழக்கமாகூட இது மாறுறதுக்கான வாய்ப்பை உருவாக்குது.சில நேரம் தனக்கு workoutஆகாத விஷயங்களை, விடாபிடியா செஞ்சே தீருவேனு நிக்குறது இவங்களுக்கே ஆபத்தா போய் முடியலாம்.ஒரு விஷயத்தை விட்டுட்டு வரது அப்படின்றது சாதாரணமான ஆளுங்களுக்கு, normalஆன விஷயமா தெரியலாம்.ஆனா, இப்படிபட்ட smartஆன peopleக்கு letting go அப்படின்றது முடியாத காரியமா இருக்கு.இப்படி அவங்களால easyஆ ஒரு செயலை விட முடியாததுகூட பல வெற்றிகளை அவங்க குவிக்க காரணமா இருக்கு.

4.Disorganized routines

ஒரு சுத்தமான Environmentல இருக்குறதும், அங்க உட்கார்ந்து வேலை செய்றதும் நம்மளை productiveஆன ஆளா மாத்துது.அப்படி சுத்தமான environment, productive lifestyleஐ குடுக்குறதா பல proofஉம் இருக்கு.ஆனா ஏன் highly intelligent peopleஆல தான் சுத்தி இருக்க இடத்தை சுத்தமா வச்சுக்க முடியல?இப்படிபட்ட smartest people வேலை செய்ற office, desk, studios அப்படினு எல்லாமே பல நாள் குப்பைகளோடயும், சுத்தம் இல்லாமையும் இருக்கு.இது கேக்குறதுக்கு ரொம்பவே வினோதமா இருக்கலாம்.

highly intelligentஆன people தன்னோட இடத்தை சுத்தமா வச்சுருப்பாங்கனு நாம்ம இதுவரை நினைச்சுருப்போம்.ஆனா, நம்ம நினைச்சதுபடி அவங்களோட இடம் ஒரு சாதாரணமான peopleஓட environmentஐ விடயே ரொம்ப குப்பையா இருக்கும்.இப்படி அவங்களோட இடத்தை சுத்தமா வைக்காத, இந்த மோசமான பழக்கம் கூட அவங்களோட அறிவுக்கு ஒரு காரணமா இருக்கலானு சொல்லபடுது.இப்படி குப்பையோட வாழ்றது உங்களை எந்த விதத்துலயும் smarterஆ வைக்காது,ஆனா, பல கற்பனையான எண்ணங்களை உங்களுக்குள்ள உருவாக்கலாம்.

intelligent people, அவங்களோட inspirationஐயும் insightஉம் கண்டுபிடிக்க ஒரு ஒழுங்கே இல்லாத Environment காரணமா இருக்குனு ஒரு studiesல prove பண்ணிருக்காங்க.பல முக்கியமான விஷயங்களை பத்தி மட்டுமே யோசிக்குறனாலயோ என்னவோ,தன் மூளைக்குள்ள சுத்தமான Environment முக்கியம் அப்படினு intelligent people நினைக்க மாட்றாங்க.அதுக்காக, ஒரு சுத்தமில்லாத இடத்துல இருந்தா, நானும் ஒரு அறிவாளினு நீங்க நினைக்ககூடாது.உங்களோட சோம்பேறித்தனத்தை intelligent அப்படின்ற அர்த்தத்துல நீங்க எடுத்துக்ககூடாது.

அப்படிலாம் இல்ல, உண்மையாவே நீங்க உங்க Brainஐ முக்கியமான விஷயத்தை பத்தி சிந்திக்க வைக்குறீங்க,அதனால தான் நீங்க இருக்க இடத்தை சுத்தமா வைக்க முடியலேனு நினைக்குறீங்கனா,உண்மையாவே நீங்க Highly intelligentஆன நபர்தான்.

5.Staring into space

யாராவது வெட்ட வெளிய ரொம்ப நேரமா வேடிக்க பார்த்துட்டு இருக்குறதை நீங்க எப்போயாச்சும் note பண்ணிருக்கீங்களா?இல்ல, நீங்க இப்படி அடிக்கடி வெறுமனே வேடிக்கை பார்ப்பீங்களா?நீங்க நம்புவீங்களோ, மாட்டீங்களோ..! Highly intelligentஆன peopleக்கு இப்படி வேடிக்கை பார்க்குற பழக்கம் இருக்கும்.

அதுலயும் சில நேரம், இப்படி வேடிக்கை பார்த்துட்டே அவங்களுக்கு தோணுற எண்ணத்துலயே மூழ்கிடுவாங்க.இந்த மாதிரியான, அமைதியான நேரங்களில அவங்க பகல்கனவு காணுவாங்க, இல்ல எதையாச்சும் mindலயே plan பண்ணுவாங்க.இப்படி யோசிக்குறனால, அவங்களோட அனுபவம் மூலமா சில பிரச்சனைகளை தீர்ப்பாங்க.

நமக்கு, வெளியில இருந்து பார்க்குறப்போ இவங்க என்னடா சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்கனு தோனும்.ஆனா, அவங்க இப்படி சும்மா ஒரு இடத்தை அடிக்கடி பார்க்குறனாலயோ என்னமோ,அவங்க இன்னும் productiveஆ இருக்காங்க.

6.Freezing showers

இங்க இருக்க பல பேரு, காலையில தன்னோட களைப்பை போக்குறதுக்கும், அந்த நாள்ல நாம்ம சுறுசுறுப்பா இருக்கனும்னு நினைச்சு சுடுதண்ணியில குளிப்போம்.ஆனா, பல intelligentஆன people, கொஞ்சம் வித்தியாசமா குளிரான தண்ணியில குளிக்குறதைதான் விரும்புறாங்க.அப்படி,

இப்படி குளிரான தண்ணியில குளிக்குறதுமூலமா, நம்ம மூளை அதிக விழிப்புணர்வோட அந்த நாள் முழுதும் இருக்கும்.குறிப்பா, இப்படி குளிக்குறனால நம்ம Energy boostஆகவும் செய்யுது.குளிரா இருக்க தண்ணி, நம்ம உடம்புல படுறப்போ ஒரு current shock மாதிரி நம்மளை தட்டி எழுப்புது.இது விழிப்புணர்வோட இருக்க மட்டும் உதவல, இன்னொரு விதத்துல நாம்ம Concentrationஐயும் moodஐயும் நல்லா improve பண்ணுது.

பல smartஆன people, குளிரான தண்ணியில குளிச்சதுக்கு அப்பறம் அந்த நாளை தொடங்குறது, நல்லா இருக்குதுனு உணருறாங்க.அதனால, நீங்களும் இனி குளிரான தண்ணியில குளிச்சு, இந்த benefits எல்லாத்தயும் reach பண்ணுங்க.

7.Lively Debates

Highly intelligentஆன people, பல நேரங்களில Debate பண்றதை விரும்புவாங்க.அவங்களோட பக்கம் சரியா இருக்குதுன்றதுக்காக, இவங்க இப்படி விவாதத்துல இறங்கனும்னு நினைக்க மாட்டாங்க.இன்னொரு பக்கத்துல இருந்து, என்ன மாதிரியான Discussion வருதுன்றதை பார்க்க இப்படி விவாதத்துல இறங்க நினைப்பாங்க.

அந்த விதத்துல, இவங்க ஒரு பக்கம் மட்டுமில்லாம ரெண்டு பக்கமுமே தன்னோட argumentஐ சொல்லுவாங்க.அவங்களோட பார்வையில, ஒன்னை மட்டும் நம்பி விவாதம் பண்றதை விட, ரெண்டு பக்கமும் இருக்க விவாதங்களை கேட்டா நல்லா இருக்கும்னு அவங்க நினைப்பாங்க.ஒரு விஷயத்தை புருஞ்சுக்க, மத்தவங்ககிட்ட கேள்வி கேக்குறதும்,

ideas வருதானும் பார்க்கவும்,, மத்தவங்ககிட்ட challenge பண்றதும்கூட,உங்களை intelligentஆன ஒரு ஆளா மாத்துது.நீங்க ஒரு intelligent ஆன நபரா இருந்தா, மத்தவங்களை போல ஒரு விவாதம் பண்றதை சண்டை போடுறதுனு நினைக்க மாட்டீங்க.பதிலா, அந்த விவாதம், இல்ல வாக்குவாதம் மூலமா உங்களுக்கு கூடுதலா இன்னொரு கோணம் கிடைக்கும்,அதுமூலமா புதுசா ஒரு விஷயத்தை கத்துக்கலான்ற வாய்ப்பை ஏற்படுத்திக்க நினைப்பீங்க.

8.Sedentary habits

இங்க இருக்க பல பேர் ரொம்ப productiveஆ இருக்கனும், Exerciseலாம் பண்ணி ஒரு activeஆன lifestyleஐ வாழ நினைப்பாங்க.ஆனா, Highly intelligent people எல்லாரும் உட்கார்ந்தே இருக்க sedentary lifestyleல தான் இருக்காங்க.

ஒரு இடத்துல உட்கார்ந்தே இருக்கோமே, activeஆ இல்லேனு உங்களுக்கு awareness இருந்தாலும்,உங்களோட வேலைக்காக நீங்க ஒரு இடத்துல பல மணி நேரம் உட்கார்ந்துதான் ஆகனும்ன்ற கட்டாயம் இருக்கலாம்.

பல creative and innovative projectல வேலை பண்றது உங்களுக்கு ஆர்வமா இருக்கலாம்,ஆனா அந்த projects எல்லாம் ஒரே இடத்துல உட்கார்ந்து பல மணி நேரம் systemஐ பார்க்குற வேலையா இருக்கும்.நீங்க பல பேரை விட, ரொம்ப productiveஆன ஆளா இருக்கலாம்.

ஆனா, highly intelligent peopleக்கு இப்படி ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பார்க்குறது ரொம்ப பொதுவான விஷயம்தான்.இந்த மாதிரியான smart peopleக்கு fulfillingஆ ஏதோ ஒரு வேலை இருந்துச்சு அப்படினா,அதை விட்டு வேற ஒரு வேலையை செய்ய இவங்க போக மாட்டாங்க.

9.Unrealistic preparation

அறிவாளியான நபர்கள் அவங்க செய்ய போற எல்லா வேலைக்கும் அதிகமா முன்னேற்பாடு பண்ணுவாங்க.ஒரு வேலையை செய்ய உட்காருவாங்க, அதை செய்றதுக்கான எல்லா possibilitiesஐயும் தேடுவாங்க,அடுத்ததா அவங்களோட goalsஐ அடையுறதுக்கான ஒரு planஐ உருவாக்குவாங்க.

உதாரணமா, ஒரு intelligentஆன நபர் ஒருத்தர் Danceஆடுற புது hobbyஐ கத்துக்கனும்னு நினைக்குறாருனு வச்சுப்போம்,சில பேர், கூட்டத்துல dance ஆடுறேன்ற பேருல யாரும் பார்க்காத மாதிரி குதிச்சுட்டு இருப்பாங்க,

நாம்ம எவ்வளோ மோசமா ஆடுறேன்றதை பத்திலாம் யோசிக்காம, அவங்களோட enjoymentஐ danceமூலமா வெளிப்படுத்திட்டே இருப்பாங்க.ஆனா, intelligentஆன people இப்படியெல்லாம் தேவையில்லாத riskஐ எடுக்க மாட்டாங்க.முதல்ல மேடை ஏறி ஆடாம, கூட்டத்தோட கூட்டமா நிண்டு வேடிக்கை பார்ப்பாங்க.

அதுமூலமா சில informationஐ collect பண்ணிப்பாங்க.அதுல மத்தவங்க ஆடுறப்போ என்னலாம் பிரச்சனைகளை face பண்றாங்கன்றதை note பண்ணுவாங்க.ஏன்னா, முதல்ல சொன்னது போல ஒரு கூட்டத்தோட கூட்டமா ஆடிட்டு போறதை intelligent people விரும்ப மாட்டாங்க.

எந்த ஒரு வேலையும் எனக்கு தெரியாதுனு சீக்கிரமா ஒத்துக்க மாட்டாங்க.இன்னொரு வகையில, தங்களோட performance எப்பொயும் high levelல இருக்கனும்ன்றதுக்காக ஹொடர்ந்து effort போடுவாங்க.அது புது விஷயமா இருந்தாலுமே, தன்னோட bestஐ மட்டுமே குடுக்க விரும்புவாங்க.

அது ஒரு hobby,job,relationship, அப்படினு எதுவா இருந்தாலுமே அதுல தன்னை முழுவதுமா ஈடுபடுத்தி நல்ல perform பண்ண விரும்புவாங்க.அவங்க 100% தயாரான மட்டும்தான் ஒரு வேலையை செய்ய தொடங்குவாங்கனு சொல்லலாம்.அதனாலயோ என்னமோ, பல smart people risk எடுக்குறதே இல்ல.

10.Creating Problems

Intelligent people உண்மையாவே பிரச்சனையை superஆ தீர்க்ககூடியவங்க.ஆனா, சில நேரம் அவங்களுக்கு இருக்க ஒரு வித்தியாசமான பழக்கம் என்ன அப்படினா,உண்மையாவே இல்லாத ஒரு பிரச்சனையை tackle பண்ணனும்னு நினைப்பாங்க.ஒரு smartஆன ஆளுக்கு ஒரு வேலையை செய்யகூடாதுன்றதுக்கான சரியான காரணம் தெரிஞ்சுருக்கும்.

இதேது ஒரு intelligentஆன ஆளுக்கு, ஒரு காரணம் தெரிஞ்சாலே, அதை வச்சே பத்து காரணங்களை உருவாக்குவாங்க.தீர்வே தேவையில்லாத பிரச்சனைகளை தீர்க்க நினைக்குற பழக்கத்தை highly intelligent people வச்சுருக்காங்க.அதுல நிறைய நேரத்தை வீணாக்குறனால, வேலையில சில நேரம் focus பண்ண மாட்றாங்க.இந்த ஒரு குறை, highly intelligentஆன peopleக்கு பொதுவாவே இருக்கு.நீங்க distractஆகுறதை விரும்புறீங்க அப்படினா,உங்களைவிட யாராலயுமே, அந்த distractionஐ சரினு justify பண்ணவே முடியாது.அதனால, Highly intelligentஆன நபரா இருக்குறது சில நேரங்களில பிரச்சனையை உருவாக்க காரணமா இருக்குதுன்றதை நாம்ம புருஞ்சுக்கனும்.

11.Repetitive Failures

பல intelligent people, சீக்கிரமா சில விஷயங்களை கத்துக்குறனால, பிரச்சனைகளை தாங்களாகவே தீர்த்துக்குறாங்க.ஒரு சூழ் நிலையில இருந்தா, தனக்கு என்னலாம் நடக்கும்ன்றதை தொடர்ந்து சிந்திக்குற நபர்களா இருக்காங்க.இந்த ஒரு பழக்கம் இருக்கனாலகூட, மத்தவங்க தோத்து போற விஷயங்களில கூட இவங்க ஜெய்ச்சு முன்னேறுறாங்க.அவங்களோட மூளையால கூட சந்திக்க முடியாத பல பிரச்சனைகளுக்குள்ள போறதும்,அதை challegningஆவும் மாத்தி சமாளிக்குற திறமை இவங்ககிட்ட இருக்கு.

ஒரே வேலையை ஒரே விதமா செஞ்சு, அதுமூலமா வித்தியாசமான resultஐ generate பண்ணனும்ன்ற thinkingல இவங்க இருப்பாங்க.அவங்க எதை நல்லா செய்வாங்களோ, அதையே தொடர்ந்து செய்ய விரும்புவாங்க.முக்கியமா அவங்களோட Gut என்ன சொல்லுதுன்றதை கேப்பாங்க.அவங்களோட பலம் என்ன ? பலவீனம் என்னன்றதும் அவங்களுக்கு தெரிஞ்சுருக்கும். சில சமயங்களில, சின்ன விஷயத்துல இவங்க தோத்து போய்ருவாங்க.ஏன்னா, அவங்க செய்றது எல்லாம் சரினு நம்புவாங்க.

தன்னோட appraochஐ மாத்துறதையும், மத்தவங்ககிட்ட உதவி கேக்கவும் இவங்களுக்கு தெரியாது.ஏன்னா, வெற்றி அப்படின்றது தன்னை சார்ந்த்துனு தப்பு கணக்கு போடுவாங்க.இப்படி, சில நேரம் எதிர்பாராத தோல்விகளை சந்திக்குறப்போ, அவங்க இன்னும் learn and expand பண்ண நினைப்பாங்க.ஆனா, ஒரே விஷயத்தை செஞ்சு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்க்காம, புது விஷயங்களையும் செய்ய முயற்சி பண்ணனும். அப்படி நாம்ம புது விஷயங்களை செய்ய முயற்சி பண்ணல அப்படினா,நீங்க எவ்வளோ பெரிய அறிவாளியா இருந்தாலும், ஒரு பிரச்சனையில இருந்து வெளிய வர முடியாது.

12.Solitary conversations

Highly intelligent people, தனக்குத்தானே பேசுற பழக்கத்தை கொண்டவங்களா இருப்பாங்க.தனக்குத்தானே பேசுனா, எல்லாரும் பைத்தியம்னு நினைப்பாங்கனு நீங்க awkwardஆ உணரலாம்.ஆனா, awkwardஆ உணருற அளவுக்கு இது ஒன்னும் அவ்வளோ பெரிய விஷயம் இல்ல.

தனக்குத்தானே பேசிக்குறதும், தன் கிட்ட பேசுறதும் நம்ம mind activeல இருக்குதுன்றதுக்கான அடையாளம்.இப்படி பேசுறப்போ, அவங்க தன் கிட்ட ரொம்ப softஆ பேசுவாங்க.ஏதோ ஒரு பாட்டு பாடுவாங்க, இல்ல தன்னை சுத்தி என்ன நடக்குதுன்றதை கண்ணாடி முன்னாடி நிண்டு சொல்லுவாங்க.

ஏன்னா, இப்படி பேசுறனாலகூட சில நேரம் அவங்களோட brain, ideasனால நிரம்பும்.இதுமூலமா, தன்னோட மூளையை தன் கிட்ட engage பண்ண தூண்டுவாங்க.அதனால நீங்களும், ஒரு highly intelligentஆன ஆளா இருந்தா,கண்ணாடி முன்னாடி நிண்டு பேசுற பழக்கம் உங்களுக்கும் இருக்கும்.

இந்த self talkதான் மத்தவங்களை விட, உங்களை கூடுதலா smarterஆ வைக்குதுனு சொல்லலாம்.இந்த videoல பார்த்த 12ல ஒன்னு, உங்ககிட்ட இருக்கலாம், இல்ல உங்ககூட பழகுற நபர்கள்கிட்ட இருக்கலாம்.இந்த habitsலாம் இருக்க ஒருத்தர் கண்டிப்பா intelligentஆன நபரா இருப்பாருனு உங்களுக்கு இந்த கட்டுரை மூலமா தெரிஞ்சுருக்கும்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *