மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி/cultivation of terraced tubers

Spread the love

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் உருளைக் கிழங்கு பயிரிடும் முறையை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்

Grow Bags அல்லது Thotti

அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.

விதைக்கிழங்குகள்

பூவாளி தெளிப்பான்

பசுமைக்குடில் அமைப்பதற்கான உபகரணங்கள்

தொட்டிகள்

அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

கிழங்கு எளிதாக வளரவும், மண் இறுகிப்போகும் பிரச்சனை இல்லாமல் இருக்கவும் தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக சேர்க்க வேண்டும்.

விதைத்தல்

உருளைக்கிழங்கை பாதியாக நறுக்கி, தயார் செய்துள்ள உரக்கலவையில் புதைத்து வைக்க வேண்டும். ஓரளவு முளைவிட்ட கிழங்காக இருந்தால் நல்லது.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்பொழுது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.

அதிகப்படியான நீர் இருந்தால் வெளியேறுவதற்கு பைகளின் அடியில் இரு துளைகள் இட வேண்டும்.

உரங்கள்

சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை, இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

பசுமை குடில்கள் அமைப்பதற்கு வரிசையாக நீளக்கம்பிகளை இருபுறமும் வளைத்து அதன்மேல் பாலிதீன் பைகளை இணைத்து கட்ட வேண்டும். அதனை திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில் அமைத்துக்கொள்ளலாம். பசுமைக்குடில் அமைப்பதற்கான பிரத்தியேக சாதனங்களை கொண்டும் பசுமை குடில்களை நிறுவி விடலாம்.

இக்குடிலுக்கு சீதோஷண நிலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை இருப்பதால் பருவகால மாற்றங்கள் செடிகளின் வளர்ச்சியை பாதிப்பது இல்லை. செடிகளை பாதிக்கும் முக்கிய பிரச்சனையான பூச்சிகளின் ஆதிக்கம் பசுமைக் குடிலுக்குள் காணப்படுவதில்லை.

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். வேறு எந்த ஒரு பாதுகாப்பு முறையும் இதற்கு தேவைப்படாது.

அறுவடை

இக்கிழங்கினை விதைத்த 120 நாட்களில் அறுவடை செய்யலாம்.

உருளைக் கிழங்கு பயன்கள்:

உருளைக்கிழங்கில் கலோரிகள், பொட்டாசியம், விட்டமின் சி, தாது உப்புகள், மாவுச்சத்துகள், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

காலையில் வெறும் வயிற்றில் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.

உருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்.

தீப்புண்களுக்கு உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும், மேலும் அந்த தடமும் விரைவில் மறைந்துவிடும்.

கீழ்வாதம், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த உருளைக் கிழங்கை தோலுடன் பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டால் முற்றிலும் குணமாகும்.

முகம் புத்துணர்ச்சியாக இருக்க பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *