தீபாவளிக்கு தமிழர் வாழ்த்துகள்/Tamil Greetings for Diwali/Tamil Diwali wishes

இல்லங்கள் தோறும் உறவினர்களும் உள்ளங்கள் தோறும் உற்சாகமும் நிரம்ப என்னுடைய தித்திக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

என் இனிய உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

உங்களுக்கும்… குடும்ப உறுப்பினர்களுக்கும்… மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

உழைத்தவன் கூட உற்சாகமாய் கொண்டாடும் தீபாவளி பிழைப்பவன் கூட பூரிப்பில் கொண்டாடும் தீபாவளி.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க கொண்டாடுவோம் இந்த தீபாவளியை… தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சுற்றம் நட்பு சொந்தங்களுடன் தீபாவளி இனிதாய் அமைய என் வாழ்த்துக்கள்

அயலார் கலாச்சாரத்திற்கு அடிமையாகி நவீனமாக விழாயெடுப்பதல்ல தீபாவளி பண்பாட்டினை பாதுகாத்து புண்ணிய ஆத்மாக்களை வணங்குவதே தீபாவளி.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

கண்ணைப் பறிக்கும் ஒளியின்றி காதைப் பிளக்கும் ஒலியின்றி காற்றின் தூய்மையைக் கெடுக்காமல் கொண்டாடுங்கள் தீபாவளி… தீபாவளி நல்வாழ்த்துக்கள்

புத்தாடை இடைஉடுத்தி, பூரிப்பை முகத்தில் உடுத்தி, பூஞ்சட்டி கொளுத்தி புன்னகையை வெடிக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள.

புத்தாடையில் விடெங்கிலும் தீபமேற்றி விழாக்கோலம் பூணுவதல்ல தீபாவளி மன அழுக்கையெல்லாம் அகற்றி தன்னம்பிக்கை நெய்யிலே மகிழ்ச்சி தீபமேற்றுவதே தீபாவளி

உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாம் கரைந்து போக ஒளிமயமான எதிர்காலம் பிறக்க நினைத்ததை எல்லாம் சாதிக்க இந்த தீபாவளி திருநாளில் மழைச்சியுடன் இனிய வாழ்த்துக்கள்… தீபாவளி நல்வாழ்த்துக்கள்

என் இனிய தீபாவளியே வா சந்தம் பாடு வண்ணப் பூமாலைதொடு தேன் சிந்தச்சிந்தக் கவிதை கொடு.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இனிப்புகள் பரிமாற! உள்ளங்கள் இடம்மாற. அன்பு கொண்ட இதயங்கள் களிப்பார! கொண்டாடுவோம் தீபாவளியை.. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

புத்தாடை அணிந்து பூரிப்புடன் பூஞ்சட்டி கொளுத்தி புன்னகையுடன் பூக்கட்டும் தீபாவளி

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வண்ண வண்ண வெடிகள் ஆயிரம் விண்ணை முட்டும் விதவிதமாக கண்ணும் கையும் கொட்டும் தீபாவளி.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

என்றென்றும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

இனிப்பைபோல் தங்கள் வாழ்வும் இனித்திட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும் வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி நிறைவான செல்வத்துடன், நோய் நொடி இல்லாமல் நலமுடன் வாழ இத்தீப திருநாளில் வாழ்த்துகிறோம்

தீபங்கள் ஒளி வெள்ளத்தில், மத்தாப்புகளின் சிரிப்பில், இனிப்புகளை பரிமாறி தித்திக்கும் . தீபாவளியை கொண்டாட அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஒளிகளின் வரிசை தீபாவளியெனில், உன் பார்வையும் தீபாவளிதான்! தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

மகிழ்ச்சி நிலைக்க, செல்வம் குவிய, ஆரோக்கியம் சிறக்க… இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, இன்பங்கள் பொங்க தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புள்ள அண்ணனுக்கு. தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நமது அகவிருள் அகற்றி அறிவொளி வீசிட வந்ததிந்த தீபாவளி.. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

வசந்த இரவின் புதிய விடியல் வண்ணத் தீபாவளியின் ஒளிக் குவியல்.. தீபாவளி நல் வாழ்த்துக்கள்

தீபத்திற்கும் தீபாவளிக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு, தீபம் என்றால் ஒளி விளக்கு, ஆவளி என்றால் வரிசை, வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகை.. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

உதயதீபம் ஏந்தி ஒவ்வொரு நாளும் வரும் கதிரவனுக்கு ஒளி தீபம் ஏந்தி உதயத்தில் வரவேற்ப்போம். தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வைக்கும் ஒவ்வொரு வெடிக்கும் தீமைகள் வெடித்துச் சிதறட்டுமே இன்றுமட்டுமல்ல தினமும் சிதறடித்தால் தீபாவளி எல்லோருக்கும் இனிக்கும்.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

வானமே என்றுமே நீதான் எங்களுக்கு ஒளியையும் ஒலியையும் தருகிறாய் இன்று ஒரு நாளாவது நாங்கள் உனக்கு ஒளியையும் ஒலியையும் தருகிறோம்.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்