சோபகிருது தமிழ் புத்தாண்டு பொது பலன்கள் 2023 -2024 / Tamil new year -Apr-14

சோப கிருது தமிழ் புத்தாண்டில் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும். பஞ்சாங்கம் என்ன சொல்கிறது. சோபகிருது வருடத்திற்கான பாடல் என்ன என்ற அனைத்து விவரங்களையும் பார்ப்போம்.

தமிழ் வருடங்கள் 60 உள்ளன. அதில் இந்த முறை வரக்கூடிய சோப கிருது 37வது ஆண்டு ஆகும். தமிழில் இந்த ஆண்டு மங்கலம் என அழைக்கப்படுகிறது.
2023- 24 வரை சோபகிருது தமிழ் புத்தாண்டில் எப்படிப்பட்ட பலன்கள் இந்த உலகில் ஏற்படும். எந்த விஷயங்களில் ஏற்றங்கள் உண்டாகும். யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் போன்ற பொதுவான பல விஷயங்கள் இங்கு விரிவாக பார்ப்போம்.

ஒவ்வொரு வருடம் தொடங்கும் போதும், அந்த வருடத்திற்குரிய பலன் எப்படி இருக்கும் என்பதை வருட பாடலாக நம் முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். அந்த வகையில் சோபகிருது வருடம் குறித்து பலன் எப்படி இருக்கும் என்பதற்கான பொதுவான பலனை இங்கு பார்ப்போம்

சோபகிருது வருட பலன்

சோப கிருதுதன்னிற் றெல்லுலகெல் லாஞ்செழிக்குங்
கோப மகன்று குணம்பெருகுஞ்- சோபனங்கள்
உண்டாகு மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகு மென்றே யுரை.

பொழிப்புரை

இந்த சோப கிருது வருடத்தில் மக்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ்வர். கோப குணங்கள் குறையும். போட்டி, பொறாமை குணங்கள் மறையும். நற்பலன்கள் மேலோங்கும். சுப காரியங்கள் நடக்கும். உலகின் பழமையான நகர்கள் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருக்கும். மழை சிறப்பாக பெய்து செழுமை அதிகரிக்கும்.

சோப கிருது என்ற சமஸ்கிருத பெயருக்கு மங்கலம் என்ற தமிழ் பெயர் உள்ளது அதனால் இந்தாண்டு மிகப் பெரியளவில் நன்மைகளும், சுப நிகழ்வுகள் நடக்கும்.

சோப கிருது ஆண்டின் நவகிரகங்களின் நிலை

தேவதை – சொதஸஸ் (குபேர அம்சம்)
இந்தாண்டு குபேர வழிபாடு, அர்ச்சனை செய்யவும்.
சிம்ம லக்கினம், திருவோண நட்சத்திரத்தில் சோப கிருது வருடம் பிறக்கிறது.
புதன் -ராஜா

கிரகணங்கள்

இந்தாண்டு மொத்தம் 4 கிரகணங்கள் நடக்க உள்ளன.
அதில் 3 சூரிய கிரகணம், ஒரு சந்திர கிரகணம் வர உள்ளன.
இந்த மூன்று சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை.
சந்திர கிரகணம் மட்டும் இந்தியாவில் தெரியும்.