பான் டி மாத்திரை ( pan d tablet tamil)

 

பொதுவாக உங்கள் உடலில் ஏற்படும் சளி இருமல் காய்ச்சல் போன்ற வெவ்வேறு விதமான நோய்களுக்கு ஆங்கில மருந்து அல்லது நாட்டுமருந்து வழக்கமாக எடுத்துக் கொள்வது உண்டு

அப்படி நீங்கள் உட்கொள்ளும் மருந்து பற்றி நன்மைகள் தீமைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது மிக அவசியம்.

பான் டி மாத்திரை பயன்கள்

இரைப்பையில் ஏற்படக்கூடிய புண், சிறுகுடல் புண், பெருங்குடல் புண், போன்ற வயிற்றில் இருக்கக்கூடிய புண்களை சரி செய்ய பயன்படுகிறது.

உடல் நிலை சரியில்லாத போது ஏற்படக்கூடிய குமட்டல், வாந்தி, போன்றவற்றை குணப்படுத்த இது முற்றிலும் உதவுகிறது.

நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல், போன்ற நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

அல்சர் நோய் வராமல் பாதுகாப்பதற்கும், அல்சர் நோயை குணப்படுத்தவும்,பான் டி மாத்திரை பயன்படுகிறது.

உணவுக் குழாயில் ஏற்படக்கூடிய, அலர்ஜி வீக்கத்தை, குணப்படுத்த உதவுகிறது.

வயிற்று வீக்கம், ஏப்பம், அஜீரணக்கோளாறு, இரைப்பை கட்டிய குணப்படுத்தவும், வயிற்றில் சுரக்கக்கூடிய அமிலத்தை கட்டுப்படுத்தவும், இந்த பான் டி மாத்திரை பயன்படுகிறது.

மாத்திரை உடலில் செயல்படும் முறை

இந்த மாத்திரையை உட்கொண்ட உடன் அது உடலில் கரைந்து ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கிறது,உடம்பில் அமிலம் சுரப்பதற்கு காரணமாக இருக்கும், புரோட்டான் பாம்பின் செயலை தடுக்கிறது.

ப்ரோட்டான் பம்பின் செயலை தடுப்பதால் வயிற்றில் ஏற்படக்கூடிய நோய்களை தடுக்க உதவுகிறது.

பக்க விளைவுகள் என்ன

மயக்க உணர்வு, உடல் சோர்வு, தலைவலி, போன்ற பக்க விளைவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கண் பார்வை மங்குதல், காய்ச்சல், மார்பு வலி, மார்பு வீக்கம், போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல், தசை வீக்கம், தோல் அரிப்பு, தோல் சிவந்து போதல், போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

பான் டி மாத்திரை சாப்பிட கூடாத நபர்கள்

கர்ப்பிணி பெண்கள், குழந்தை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், மருத்துவர் அறிவுரை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக் கூடாது.

கல்லீரல் நோய், சிறுநீரக நோய், இதய நோய், உள்ள நபர்கள் இந்த மாத்திரையை சாப்பிட வேண்டாம், மாத்திரை பயன்படுத்துவதாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரை கட்டாயம் அவசியம்.