ஆரா சக்தி விளக்கம் /Explanation of Aura Shakti/ Aura enral ena?

 

இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ அதிசயங்கள் இன்னும் மறைந்து தான் இருக்கின்றன. ரகசியங்களை அறிவதில் மனிதனுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும் காரணத்தால் தான் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல ரகசியங்ளின் உண்மைகளை அறிந்து கொள்கிறான். இந்த ரகசியத்தின் தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று தான் ‘ஆரா’. ஆரா என்றால் என்ன? அதை நம்மால் உணர முடியுமா? இந்த கேள்விகளுக்கான விடைதான் இன்று பார்க்கப் போகின்றோம்.

Free Alternative Energy Aura photo and picture

இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ அதிசயங்கள் இன்னும் மறைந்து தான் இருக்கின்றன. ரகசியங்களை அறிவதில் மனிதனுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும் காரணத்தால் தான் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல ரகசியங்ளின் உண்மைகளை அறிந்து கொள்கிறான். இந்த ரகசியத்தின் தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று தான் ‘ஆரா’. ஆரா என்றால் என்ன? அதை நம்மால் உணர முடியுமா? இந்த கேள்விகளுக்கான விடைதான் இன்று பார்க்கப் போகின்றோம்.

Free Mountain Aurora photo and picture

அனைத்து ஜீவராசிகளிடமும் உள்ள ஒன்றுதான் ஆரா. இதில் மனிதர்களின் அராவைப் பற்றி மட்டும் தான் இங்கு காணப் போகின்றோம். இது நம் உடலை சுற்றி ஒளி கவசம் போல் தோன்றும். மனிதனின் ஆற்றலில் இருந்து வெளிப்படும் ஒன்றுதான் ‘ஆரா’. இதனை நாம் கண்களால் பார்க்கவும் முடியும். உணரவும் முடியும். விஞ்ஞானத்தில் இது நேர்த்திசை, எதிர்த்திசை இரண்டையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஞான மார்க்கத்தில் உள்ளவர்கள் அஷ்ட சக்கரத்தின் வெளிப்பாடு என்றும், சூட்சம சக்தியின் வெளிப்பாடு என்றும் கூறுகின்றனர். இந்த சக்தியானது நம் உடம்பிற்கு உள்ளேயும், வெளியேயும் ஊடுருவி செல்லும் தன்மையை கொண்டது. நம் மூளையில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நம்மைச் சுற்றியுள்ள ஆராவின் தன்மையும் மாறிவிடுமாம். நம்முடைய உடம்பு முழுவதும் நம் உள் உறுப்புகளின் துணைகொண்டு இந்த ஆரா சக்தி செயல்படுவதாக நம் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Free Mandala Chakra photo and picture

இந்த ஆரா சக்திக்கு பல பெயர்கள் உண்டு. மின்காந்த சக்தி, மின்சார சக்தி என்று சித்தர்களும், ஞானிகளும் இதனை குறிப்பிடுகின்றனர். பொதுவாக சித்தர்களால் ஆரா சக்தியை உணரவும் முடியும், காணவும் முடியும். இதற்கு அவர்களது தவவலிமையே காரணம். சித்தர்களின் ஆரா சக்தியானது பல ஆயிரம் தூரம் பயணிக்க கூடிய சக்தியாக இருக்கின்றது. இதனால் தான் சித்தர்கள் முன்கூட்டியே பல விஷயங்களை அறிந்து கொள்ளும் சக்தியை பெற்றுள்ளனர். சித்தர்கள் ஜீவசமாதி அடைய ஆரா சக்தி மிகவும் உதவியாக இருந்தது. அவர்கள் ஜீவசமாதி அடைந்த பின்பும் அவர்களது நல்ல ஆரா சக்தி இன்னும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. ஞான மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு இது தெரியும்.

Free Saint Meditation photo and picture

சித்தர்களுக்கு மட்டும் அல்லாமல், கலியுகம்மான இந்த காலத்திலும் கூட ஆரா சக்தியை நம்மால் உணர முடியும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரா சக்தியானது நம் உடலைச் சுற்றி ஒரு முட்டை வடிவம் போல் தோற்றத்தை அளிக்கும்.

இது சாதாரண மனிதர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மீட்டர் வரை உருவாகும். இந்த ஆரா சக்தி பல நிறங்களை கொண்டுள்ளது. நம் குணத்தை வைத்து இந்த ஆரா சக்தியின் நிறம் மாறுபடும். பொதுவாக ஆரா சக்தி நிறமானது சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, கருப்பு மற்றும் வெள்ளையாக இருக்கும்.

Free Planet Lonely photo and picture

சில பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நம்மால் ஆரா ஒளியைக் காண முடியும். உணரவும் முடியும். பயிற்சிகள் இல்லாமல் பார்ப்பதற்கு சில பொருட்களும் உண்டு. “ஆரா ஸ்கேனர்” என்ற கருவியின் மூலம் நம் உடலில் ஆரா சக்தி எந்த அளவிற்கு உள்ளது என்பதை கண்டறிய முடியும். இதை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு நம் மனதை ஆரா சக்தியில் ஈடுபடுத்தும் போது எந்த அளவிற்கு இது விரிவடைகின்றதோ அந்த அளவிற்கு நம் உடம்பில் ஆரா சக்தி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மனிதனின் உடம்பில் ஆரா சக்தியானது அவனது கண்கள், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் இருந்து வெளியாகின்றது. இந்த ஆராய்ச்சியை கொண்டு நம்மால் நோய்களை குணமாக்க முடியும்.

ஆரா சக்தி குறையும்போது பலவிதமான நோய்கள் உண்டாகும். பயிற்சியின் மூலம் சக்தியை நாம் அதிகப்படுத்துவதன் மூலம் கேன்சர் போன்ற நோய்கள் கூட குணப்படும் என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

இந்த உலகத்தில் உள்ள எந்த சக்திகளாக ஆனாலும் சரி, அதனை அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக மட்டும் பயன்படுத்துவது நல்லது. நமக்கு தெரிந்த சக்திகளை தவறான செயல்களில் ஈடுபடுத்த கூடாது.