இதை பார்த்ததும் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது?/optical illustion

இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என சொன்னால் உங்களை பற்றி சொல்ல முடியும் என ஒரு ஆய்வு சொல்கிறது.

ஹைலைட்ஸ்:

  • புகைப்படத்தை பார்த்தும் கண்களுக்கு தெரியும் விஷயத்தை வைத்து குணத்தை கண்டுபிடிக்கும் டெக்னிக்
  • நிலா, டால்பின், சர்ஃபிங் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல்
  • முதலில் எது தெரிகிறது என சொன்னால் அவரது குணாதியங்களை சொல்லிவிடலாமாம்

நமக்கு ஒரு பிரச்சனை ஏற்படும் போது நாம் அதிலிருந்து வெளியே வர நமக்குள்ள அனுபவத்தை உபயோகிப்போம். அல்லது வேறு ஒருவரின் உதவியை நாடுவோம். அல்லது நம்பிக்கையுடன் அதை எதிர்கொள்வோம். ஆனால் இறுதியாக அந்த பிரச்சனைக்கு ஒரு சுமூக தீர்வை காண முயற்சிப்போம். இப்படியாக பிரச்சனைகள் ஏற்படும் போது அதை எப்படி கையாள்கிறோம் என்பது தான் நம் திறமை மற்றும் நம் மூளைத்திறன் இருக்கிறது.

இதை பரிசோதிக்க நீங்கள் ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தை பார்த்து அதிலிருந்து நீங்கள் சொல்லும் பதில் மூலம் உங்கள் மூளை எப்படி சிந்திக்கிறது. அதனால் நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருப்பீர்கள் என்பதை காட்டுகிறது. இந்த புகைப்படத்தை ரெபேக்கா என்ற நிறுவனம் வெளியிட்டு அது குறித்த ஆய்வை நடத்தியுள்ளது

இந்த புகைப்படம் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் இதில் ஒரு நிலா, திமிங்கலம், மற்றும் ஒரு நபர் தண்ணீரில் சர்ஃபிங் செய்வது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ஒரு நபர் பாரத்ததும் அவருக்கு என்ன தோன்றுகிறது என்பதை வைத்து அவர் எப்படிப்பட்ட நபர் என்பதை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலவு முதலில் தெரிந்தால்

இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு முதலில் நிலவு தெரிந்தால் நீங்கள் உள்ளுணர்வு மிகுந்த நபர். நீங்கள் அனுபவங்கள் தான் வெற்றிக்கான பாதையை வகுத்து தரும் என்பதை நன்கு உணர்ந்தவராக இருப்பீர்கள். பெரிய மீனை பிடிக்க வேண்டும் என்றால் பெரிய கடலில் இறங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பீர்கள்.

திமிங்கலம் முதலில் தெரிந்தால்

உங்களுக்கு இந்த புகைப்படத்தை பார்த்ததும் திமிங்கலம் முதலில் தெரிந்தால் நீங்கள் தனிமையை உணரும் நபராக இருப்பீர்கள். மற்றவர்களுக்காக உங்களை தியாகம் செய்து அவர்களது தேவையை நிறைவேற்றுவீர்கள். அதுவும் உங்கள் துணைக்கான தேவைக்காக போராட கூட தயங்க மாட்டீர்கள்

சர்ஃபிங் முதலில் தெரிந்தால்

இந்த புகைப்படத்தில் சர்ஃபிங் உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் தனிமையை உணர்பவராக இருப்பீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களை கட்டிப்போட்டு வைத்திருப்பதாகவும், அவர்களிடமிருந்து விடுதலை வேண்டும் என்ற உணர்வுடனும், இருப்பீர்கள். ஆனால் உங்களால் அது முடியவில்லை என்ற உணர்வு இருக்கும். நீங்கள் வாழ்வில் பிரச்சனைகளை எதிர்கொள்வதை தள்ளிப்போடுவீர்கள்.

இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்