நவதானியங்கள் தானியங்கள் என்பது ஒன்பது வகையான தானியங்களை குறிப்பதாகும் நமது நாட்டில் பன்னெடுங் காலமாகவே இந்த ஒன்பது வகையான நவதானியங்கள் உணவு பயன்பாட்டிற்காக வகைப்படுத்தப்படுகின்றன நவதானியங்கள் எனப் பொதுவாக கூறப்பட்டாலும் அனைவருக்குமே அந்த நவதானியங்களில் இருக்கின்ற ஒன்பது வகையான தானியங்கள் என்ன என்பது தெரியாமல் உள்ளது .
அந்தவகையில் நவதானியங்கள் என்றால் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். நவதானியங்கள் உணவுத் தேவைக்காக மட்டுமன்றி சில ஆன்மீக ரீதியான காரியங்களுக்கும்
பயன்படுத்தப்படுகின்றன குறிப்பாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை சடங்கின் பொழுதும் திருமண சடங்கின் போதும் பயன்படுத்தப்படுகின்றன சிலவகை ஆன்மீக பரிகாரங்கள் முளைப்பாரி யாக வளர செய்த நவதானியங்களை பயன்படுத்துகின்றனர்.
நவதானியங்களில் மனிதர்களின் உடலுக்கு தேவையான தாதுக்கள் வைட்டமின்கள் சுண்ணாம்புச் சத்து புரதச்சத்து நார்ச்சத்து மாவுச்சத்து கரோட்டின் நியாசிக் பாஸ்பரஸ் கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
நவதானியங்கள் பெயர்கள்
நெல்
இந்தியாவிற்கு அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய விதை நெல் வகைகளை சேகரித்து அவற்றை பயன்படுத்துவதே உகந்தது என்றும் நவீன ஐ.ஆர்.ஆர் வகை வீரிய நெல் விதைகள் நோய் பரப்பக்கூடியவை என்றும் எடுத்துக்கூறி நவீன ரகத்திற்கு அனுமதி மறுத்து அதன் விளைவாக மாற்றம் செய்யப்பட்டு, பிற்காலத்தில் நோயுற்று வறுமையில் வாடி இறந்தார்.
பின்னர் அப்பதவிக்கு வந்த டாக்டர் எம்.எசு. சுவாமிநாதன் மற்றும் மற்ற இயக்குநர்களாலும் டாக்டர் ஆர். எச். ரிச்சாரியா சேகரித்திருந்த பாரம்பரிய வகை விதைநெல்கள் காணாமல் போனதைப்பற்றிக் கூற இயலவில்லை. டாக்டர் எம்.எசு. சுவாமிநாதன் காலத்தில் சிறப்பு பெற்ற பசுமைப்புரட்சியில் அதிக விளைச்சல் தரும் நவீன வகைகள் முக்கியத்துவம் தரப்பட்டு, பாரம்பரிய நெல் விதைகள் இந்தியாவில் மறையத்தொடங்கின.
கோதுமை
கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். கோதுமையின் தன்மகரந்தச் சேர்க்கை காரணமாக இதில் பல்வேறு வித்தியாசமான இனங்கள் காணப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிகள், கோதுமைச் சாகுபடி முதன்முதலில் வளர்பிறை (Fertile Cresent) மற்றும் நைல் கழிமுகப் பகுதிகளில் பயிரிடப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. எனினும் அண்மைய ஆய்வுகள் இது தென்கிழக்குத்துருக்கியின்சிறு பகுதியொன்றில் முதலில் பயிரிடப்பட்டதாகக் கூறுகின்றன. இது கிமு 9000த்தில் துருக்கியிலுள்ள கொபேக்லி தெபே எனுமிடத்திலிருந்து வடமேற்கே 40 mi (64 km) தொலைவிலுள்ள நெவாலி கோரி எனுமிடத்தில் பயிரிடப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், வாற்கோதுமை பயிரிடப்பட்ட கிமு 23,000 ஆண்டுகளிலேயே கோதுமையும் பயிரிடப்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்
கொண்டை கடலை
கார்பன்சோ பீன்ஸ் என அழைக்கப்படும் கொண்டைக் கடலை புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவற்றை மிகுதியாக கொண்டுள்ளது. எனவே உங்கள் உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க இது தவிர்க்க முடியாததாக ஆகிறது.
இறைச்சிக்கு ஒரு அருமையான மாற்றாக கொண்டைக் கடலை உள்ளது. ஒரு கப் கொண்டைக் கடலையானது வயது வந்தவர்களின் புரத தேவையில் மூன்றில் ஒரு பங்கை அளிக்கும் திறனை கொண்டுள்ளது.
துவரம் பருப்பு
பருப்பு என்றாலே அது மஞ்சள் நிறம் கொண்ட துவரம் பருப்புதான். சாம்பார், பருப்பு சோறு, அரிசி பருப்பு சாதம் தொடங்கிப் பல உணவுப் பண்டங்கள் இதை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படுகின்றன., உடலுக்குச் சரிவிகித உணவைத் தருவதோடு கொலஸ்ட்ரால் கொஞ்சம்கூட இல்லை மேலும் புரதசத்து , வைட்டமின் சி சத்து, அமினோ அமிலம், நார்ச்சத்து போன்றவை அதிகம்
உளுத்தம்பருப்பு
உளுந்தில் பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளது. 200 கிராம் உளுந்தில் ஏறத்தாழ 1500 மி.கி பொட்டாசியம் சத்து உள்ளது. உப்பு உட்கொள்வதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை நீக்குவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க பொட்டாசியம் சத்து உதவுகிறது. உளுந்து 43 என்ற மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே, அவை உடனடியாக உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது. மேலும், உளுந்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவை ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், டைப் 2 நீரிழிவு நோயை வராமல் தடுக்கவும் உதவும்.
பாசிப்பருப்பு
பிற பருப்புகளைப் போல, பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நம் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை செய்கின்றது. இதனால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது. புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பயத்தம் பருப்பில் காணப்படுகின்றன. பாசிப்பருப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், எடை கட்டுப்பாட்டை அடைவதுடன், வாயு பிரச்சனையும் நீங்கும். பாசிப்பருப்பால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொள்ளு
`கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன.
எள்
அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவ மூலிகையே ”எள்”.
எள் எங்கும் பயிராகக்கூடிய செடியாகும், 2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடிய எள் செடி, ஜாவா போன்ற கடல் சார்ந்த தீவுகளில் உள்ள காடுகளில் இயற்கையாகவே விளையும் தாவரமாகும்.
இதற்குத் ‘திலம்’ என்ற பெயரும் உண்டு. இதில் இருந்து தான் எண்ணெய்க்கு ‘தைலம்’ என்று பெயர் வந்தது.
எள் லேசான கசப்பு துவர்ப்புடன் சுவை கொண்டது, ஜீரணமாகும்போது இனிப்பாக மாறும் தன்மை கொண்டது.
மொச்சை
மொச்சை பயறுத் தாவரம், அவரைக் குடும்பத் தாவரங்களுள் (ஃபேபேசியே) முக்கியமானது. தமிழகத்தில் புரதத் தேவையை நிறைவு செய்வதற்காக அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறி வகை, அவரைக் குடும்பத் தாவரங்களே. அந்த வகையில் மொச்சை மிக முக்கியமானது.
பொங்கல் பண்டிகைக்கான படையல் விருந்தில் மொச்சைப் பயறு முக்கிய இடம்பிடித்திருக்கிறது. மொச்சை கெட்டிக்குழம்பு, மொச்சைப் பிரட்டல் போன்றவையும் பிரபலமானவையே. தமிழகம் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் புரதத் தேவையை நிறைவு செய்யும் முக்கியப் பயறு வகை இது.