எலான் மஸ்க்;

தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்கா தொழிலதிபர் ,கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். இவர் தற்போது எசுபேசுஎக்சு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ்,பேபால் டெஸ்லா மோட்டார்ஸ் மற்றும் ஜிப் 2 ஆகிய நிறுவனங்களில் ஆரம்ப கால முதலீட்டாளர் ஆவார். மஸ்க் அவற்றின் இணை நிறுவனங்களின் ஒருவரும் ஆவார்.டிசம்பர் 2022 நிலவரப்படி யூ எஸ் 169.1 மில்லியன் அதிகமான நிகர மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.
எலான் மஸ்க் பிறப்பு;

எலான் ஆர், மஸ்க் ஜுன் 28,1971 பிரிட்டோரியா,டிரான்ஸ்வால், தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார்.
பின்புலமும் கல்வியும்;

எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார் .இவருடைய தந்தை பொறிளியாளர்; தாயார் மே மஸ்க் சத்துணவு நிபுணர் 12 அகவையில் இருக்கும் போதே கணினியில் ஈர்ப்புக் கொண்டு தம்முடைய வீடியோ விளையாட்டுக்கு, அவரே குறியீடுகள் எழுதி அதனை விற்று ஊதியம் அடைத்தார். கனடாவில் லுண்டாரிவோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக்கழகத்தில் ,பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார்.பொருளியல் மற்றும் இயற்பியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டங்கள் பெற்றார்,ஆய்வுகள் செய்து பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்,ஆனால் படிப்பே அங்கு தொடரவில்லை.
தொழில் பணிகள்;

1999இல் பேபால் என்ற ஒரு நிதி நிறுவனத்தை தொடங்கினார். ஜிப் 2 குழுமத்தை தொடங்கி நடத்தி சில காலம் கழித்து விற்றார். எக்ஸ் டாட் காம் என்ற குழுமத்தை 1999 இல் தொடங்கினார். 2002ல் ஸ்பேஸ் எக்ஸ் என்ற குழுமத்தையும் 2003இல் டெஸ்லா மோட்டார் என்ற குடும்பத்தையும் தொடங்கினார். 2012 மே மாதத்தில் 12 விண்வெளி நிலையத்துக்கு ராக்கெட்டை அனுப்பினார். 2016 இல் சோலார் சிட்டி என்ற குழுமத்தை வாங்கினார் .வணிக நோக்கில் விண்வெளியில் சுற்றுலா பயணம் செய்ய விண்கலத்தை உருவாக்கி மனிதர்களை அனுப்புவதே ஸ்பேஸ் எக்சின் முகாமையான அலுவல் ஆகும். மேலும் செவ்வாய்க்கோளுக்கு மனிதர்களை குடியேற்ற வேண்டும் என்று நினைத்தார். 2024 ஆம் ஆண்டில் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார், எலான் மஸ்க்.பிற கூட்டாளிகளுடன் இணைந்து எலான் மஸ்க் நிறுவிய டெஸ்லா மோட்டார் தயாரித்த மின்சார மகிழுந்துகள் பிரபலமாய் விற்பனை ஆகியது. அமெரிக்கா மகிழுங்கள் தயாரிப்பில் ஜெனரல் மோட்டார் குழுமத்தையும் விஞ்சிவிட்டு என 2017 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது.
புதிய திட்டங்கள்;
எலான் மஸ்க் 2013இல் ஹைபர்லூப் என்னும் புதிய கருத்தை முன்வைத்து அறிவித்தார். அந்த திட்டத்தின்படி பெரு நகரங்களுக்கிடையே மிக விரைவில் பயணம் செய்யக்கூடிய நோக்கத்தில் குறைந்த அழுத்தக் குழாய்கள் வழியாக ஒரு மணி நேரத்தில் 700 மைல்கள் விரைந்து செல்ல முடியும். வானூர்தி, தொடர்வண்டி ஆகிய ஊர்திகளை விட வேகமாகச் செல்ல முடியும். இந்த திட்டத்தை நிறைவேற பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஓபன் ஏ ஐ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் பொறுப்பேற்று செயல்பட்டார். இது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் நியராலிங்க் என்ற அமைப்பில், மனிதர்களின் மூளையில் கருவியைப் பொருத்தி மென்பொருளுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வதில் எலான் மஸ்க் முனைப்பாக இருக்கிறார்.
பெற்ற பட்டங்கள்;
யேல் பல்கலைக்கழகம், சுர்ரே பல்கலைக்கழகம், டிசைன் கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் எலானுக்கு மதிப்புறு பட்டங்கள் வழங்கி கௌரவித்தன.
ஆரம்ப கால வாழ்க்கை;

எலோன் ரீவ் மஸ்க் ஜூன் 28,1971 அன்று தென்ஆப்பிரிக்காவின் தலைநகரங்களில் ஒன்றாக பிரிட்டோரியாவில் பிறந்தார். மஸ்க் பிரிட்டிஷ் மற்றும் பென்சில் வேனியா டச்சு கொண்டுள்ளது.இளமைக்காலத்தில் மஸ்கின் குடும்பம் செல்வ செழிப்பாக இருந்தது. நிற வெறிக்கு எதிரான முற்போக்குக் கட்சியின் பிரதிநிதியாக பிரிட்டோரியா நகர சபைக்கு அவரது தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் குழந்தைகள் நிறைவெறி மீதான தந்தையின் வெறுப்பை பகிர்ந்து கொண்டனர்.
எலோன் ரீவ் மஸ்க்;

ஒரு வணிக அதிபரும் முதலீட்டாளரும் ஆவார்.ஏஞ்சல் முதலீட்டாளர்,டெஸ்லா,இன்க் தயாரிப்பு கட்டிடக் கலைஞர்.பூளூம்பெர்க் பில்லியர்ட்ஸ் இன்டெக்ஸ் மற்றும் இரண்டின் படியும் மஸ்க் உலகின் இரண்டாவது பணக்காரர் ஆவார். ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியல் மஸ்க் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் பிறந்தார் மற்றும் 18 வயதில் கனடாவுக்குச் செல்வதற்கு முன்பு பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தில் சுருக்கமாகப் பயின்றார்.கனடாவில் பிறந்த தாய் மூலம் குடியுரிமையைப் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார்.அங்கு அவர் பொருளாதாரம் மற்றும் இயற்பியல் இளங்கலை பட்டங்களைப் பெற்றார்.அவர் 1995 இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர கலிபோர்னியா சென்றார். இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் வெளியேறினார் மற்றும் அவரது சகோதரர் கிம்பாலுடன் இணைந்து ஆன்லைன் நகர வழிகாட்டி மென்பொருள் நிறுவனமாக நிறுவினார்.